Wednesday, November 22, 2023

*கிராவின‘கதைசொல்லி’

*கிராவின‘கதைசொல்லி’கவிஞர் யவனிகா ஸ்ரீராம் பொறுப்பாசிரியராகக் கொண்டு இனி வெளிவரும்*.

கிரா வின் கதை சொல்லி காலாண்டு சிற்றிதழ்  இதுவரை 35 தொகுப்புகளாக வெளி வந்துள்ளன.  மண்ணின் கதை சொல்லி கொண்டு நாட்டார் வழக்காற்றியலில் தொடர்ந்து இயங்கிய கழனியூரான் அவர்கள் பொறுப்பாசிரியராக இருந்து  மண் சார்ந்த கிராமப்புற எளிய மக்களின் கதைகளைப் படைப்புகளை கொண்டு வருவது என்று முடிவு செய்து அவ்விதழை  இணை ஆசிரியராக என் பொறுப்பில் ஏற்று  நடத்தி வந்தேன். பல படைப்பாளிகள் அதில் பங்களிப்பு செய்தார்கள் அவர்களுக்கு என் அன்பும் நன்றியும்! அந்த வகையில் சிறப்பான படைப்புகளோடு கதைசொல்லி ஏறக்குறைய தமிழகம் முழுவதும் அறியப்பட்டது என்பதையும் இங்கு நினைவூட்ட கடமைப்பட்டுள்ளேன்.

பின் நாட்களில், சந்தா ஏதும் பெறாமல் பல்வேறு படைப்பாளிகளின் படைப்புகள் வாசகத்தளத்திற்குப் போய்ச் சேர வேண்டும் என்ற நோக்கத்தோடு அதை எல்லோருக்கும் இலவசமாக அனுப்பி வைத்தேன்.

கடந்த ஒரு ஆண்டாக அதை தொடர்ந்து 
தனி  ஒருவனாக நடத்த இயலாமல் என்னுடைய வேலை பணிகள், கிரா தொகுப்பு பணிகள் என அதிகரித்து விட்டது. கதை சொல்லியை தொடர்ந்து கொண்டு வருவீர்கள் எனில் விருப்பத்துடன் தான் பொறுப்பேற்று அதை நடத்துவதாக கவிஞர் யவனிகா ஸ்ரீராம் என்னிடம் ஒருநாள் தொலைபேசியில் உரையாடினார்.

தமிழின் மிக முக்கியமான கவிஞர்  பொறுப்பாசிரியராக இருந்து கதை சொல்லி இதழை நடத்துவது எனக்கும் ஏற்புள்ளதாக இருந்தபடியால் அடுத்த மாதத்தில் இருந்து கதை சொல்லியைக் கொண்டுவர இருக்கிறேன். அன்பான படைப்பாளிகளும் இலக்கிய ஆர்வலர்களும் இதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

முக்கியமாக நாட்டார் வழக்குகள் மானுடவியல் கட்டுரைகள்  அது சார்ந்த கதைகள் வாய்வழி வழக்காறுகள் தொன்மங்கள் பழங்குடியினர் படைப்புகள் எனபதாக கதை சொல்லி தொடர்ந்து இயங்க இருக்கிறது.

படைப்புகளை எனது இணையதள முகவரிக்கோ அல்லது கவிஞர் யவனிகா ஸ்ரீராம் அவர்களின் இணையதள முகவரிக்கோ அனுப்பலாம். இதழைச் சிறப்பாகக் கொண்டு வர படைப்பாளிகளும் வாசகர்களும் ஒத்துழைக்க வேண்டும் என மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.

இனி,Pustaka Digital Media Pvt. Ltd.,
Dindigul  பதிப்பகம்  கதைசொல்லியை அச்சிலும், இணையத்திலும் கொண்டு வரும்.

 அன்புடன,
கே.எஸ். இராதா கிருஷ்ணன்.
ஆசிரியர், கதைசொல்லி.
rkkurunji @gmail.com

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
22-11-2023.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...