#*கோவை விவசாயசங்க தலைவர்
ஆர்.கிருஷ்ணசாமிகவுண்டர் துணைவியார் அம்மா மாரம்மமாள் மறைவு*
ஆழ்ந்த இரங்கல்
————————————
கோயம்புத்தூரின் கணபதி விவசாய சங்க தலைவர் , எங்கள். குடும்ப நலன் விரும்பி ஆர்.கிருஷ்ணசாமி கவுண்டர்(RK). படிப்பால் தமிழ் பண்டிதர்.க பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர்.அந்தக்காலத்தில் இருந்து இயற்கை விவசாயி இவரது விவசாய பண்ணை இயற்கை விவசாய ஆராய்ச்சி கூடம் போல இருக்கும்.
அந்தக்காலத்திலேயே மரவள்ளி கிழங்கு சேலம் வியாபாரிகளிடமிருந்து நல்ல விலை கிடைக்க கோவையிலேயே சேகோ பேக்டரி அமைத்தவர்.மாட்டு வண்டியில் நடமாடும் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் நடத்தியவர்.இன்று ஏராளமான கிராமங்களில் பயன்படுத்தப்படும் கோபர் கேஸ் சாண எரிவாயுகலனை கண்டுபிடித்தவர் 50 ஆண்டுகளாக அதையே பயன்படுத்தியவர்.நிலக்கரி என்ஜினை கொண்டு லாரி பஸ்கள் இயக்கும் படி வடிவமைத்தவர்.
நாம் தற்போது பயன்படுத்தும் மோரிஸ் வாழைப்பழங்களை அறிமுகப்படுத்தியவர். பஸ் போக்குவரத்து தொழிலை கோவையில் நடத்திக்காட்டியவர். விவசாயிகளுக்காக விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து வழி நடத்தியவர். வேளாள வாலிபன்,ஏர் உழவன் போன்ற 4 இதழ்கள் நடத்திய பத்திரிக்கையாளர்.கோவை கணபதி யூனியன் சேர்மேனாக 15 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்.ராஜாஜியின் சுதந்திர கட்சியின் செயலாளர் அவிநாசி சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்தவர். பல கட்சிகளிலிருந்தும் பெரும்பாலான அரசியல்தலைவர்கள் இவர் இல்லம் வந்துள்ளனர். சிறந்த ஆன்மீகவாதி,சைவ உணவு பழக்கம் உடையவர்,எளிமை பணிவு நிறைந்தவர்.
கீதை,திருக்குறளை அனுதினமும் படிப்பவர்,வாழ்வின் ஒவ்வொரு விஷயத்திலும் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசுபவர்.எதிரிகளையும் நண்பர்களாக மாற்ற தெரிந்தவர்.இன்று இந்தியாவில் புகழ்பெற்று விளங்கும் ரூட்ஸ் நிறுவன தலைவர் திரு.கே.கே.ராமசாமி,போட்டோ சென்டர் உரிமையாளர் கே.மருதாச்சலம் இருவரும் இவரின் மகன்கள்!!!.
எங்கள் கிராம வீட்டிற்க்கு 1969- 1980 வரை பல முறை வந்துள்ளார். கோவில்பட்டியில் இறங்கி திருவேங்கடம் பஸ் பிடித்து, அங்குவாடகை சைக்கிள் எடுத்து எங்கள் கிராமத்துக்கு surprise ஆக திடீர் என வந்து இறங்குவார்.
உழவர் தலைவர் சி. நாராயணசாமி நாயுடுக்கு ஆரம்ப கால நண்பர். என் மாமானார் கே. வரதராஜன், சாத்தூர் டாக்டர் கொண்டல்சாமி, சேலம் வி.கே. ராமசாமி, தலைவாசல் வையாபுரி போன்றவர்களுடன் கோவையில் இவரின் வீட்டிற்க்கு பல முறை சென்றுள்ளேன். கவுண்டரின் துணைவி மாரம்மாள்
அம்மையாரும் எங்களை இன்முகம் காட்டி நன்கு உபசரிப்பார். கவுண்டர் கோவை விவசாய கல்லூரியில் என்னை படிக்க வையுங்கள் என எனது தந்தை,கே.வி. சீனிவாச நாயுடுயிடம் பல முறை சொல்லியுள்ளார்.
ஐயாவின் துணைவியார் திருமதி.கே.மாரம்மமாள் நேற்று 103வது வயதில் காலமானார். அம்மா மாரம்மமாள்
கோபியை சேர்ந்தவர்.
ஆழ்ந்த இரங்கல்
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
5-3-2024
No comments:
Post a Comment