Friday, March 15, 2024

நன்றி கெட்ட திமுக- DMK fails

*திமுக, எடப்பாடி பழனிச்சாமி மீதும்  அண்ணாமலை மீதும் போதைப் பொருள் கடத்தல் விடையத்தில் மான நஷ்ட வழக்கு தொடுக்க போகிறார்களாம்*.

*எலி தானே போய் பொறியில் அகப்பட்டது மாதிரி இவர்கள் அந்த வழக்கிற்காக கூண்டில் ஏறி நிற்கும்போது நடக்கப் போகும் குறுக்கு விசாரணையில் திமுக எத்தனை கேள்விகளுக்குப் பதில் சொல்ல  வேண்டி வரும் என்பதும் கூட அறியாமல் இந்த தவறான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள்*.

திமுகவிற்குச் சட்ட ஆலோசனைகள் கூறும் பிரகஸ்பதிகளை நினைத்தால் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

செந்தில் பாலாஜி வழக்கை அவர் எங்கிருக்கிறார் என்பதே தெரியாத மாதிரி ஹேபியஸ் ஹாரப்பஸ் மனுவைத் தாக்கல் செய்தவர்கள் தானே இவர்கள்!
ஒன்று
 ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில்  2001 இல் கலைஞர்  நள்ளிரவு கைது விவகாரத்தில்
கவரனர் மாளிகையிலும் சரி! நீதிமன்றங்களிலும் சரி! நான் அங்கு இங்குமாக அலைந்து  இந்தக்கைது  எவ்வளவு தவறானது என்று வாதாடி
நியாயம் பெற்று தந்தேன். ஜெயலலிதாவின் நடவடிக்கை மீது பல வகையான குறுக்கு விசாரணைகளை உண்டாக்கி  வழக்கை நீர்த்துப் போக செய்தேன்

இரண்டு
1991 இல் கனிமொழி அதிபன் போஸ் விவாகரத்து வழக்கில் ஈடுபட்டு சட்டப்படி சட்டபூர்வமாக  வெளியே வராமல் அதையும் தீர்த்துக் கொடுத்தேன்.

மூன்று

ஜெயலலிதாவின் ஊழல் வழக்கு தமிழ்நாட்டில் நடந்தால் சரியாக வராது என்பதனால் அதை கர்நாடக நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்பதை மனுவாகக் கொடுத்து அதை அங்கே மாற்றி  விசாரணைக்கு தொடக்கத்தில் உட்படுத்தியதில் முதன்மையான பங்கு என்னுடையதுதான். இதை மறைந்த முரசொலி மாறன் திமுக பொதுக்குழவில் என்னை பாராட்டியது 2001 இல் பெரிய செய்தியாகவும் மறுநாள் வந்தது.

நான்கு

முதல்வர் ஸ்டாலின் வீட்டில் நள்ளிரவு நடந்த கைது விவகாரத்தில் தலையிட்டு இனிமேல் இது மாதிரியான வழக்குகளை  எப்போதும் அவர் மீது கொண்டுவரக் கூடாது என்று மாநில மனித உரிமை ஆணையத்தில்  தடையும் வாங்கினேன்.

கடந்த 2012 இல் ஸ்டாலினை TESO என ஐநா ஆவன பணிகள் மற்றும் லண்டன் வரை அழைத்துச் சென்று அங்கே பேசவைத்தேன். இப்படி என் பணிகள் திமுகவுக்கு உண்டு. இதை மறந்த நன்றி கெட்ட மனிதர்கள்.

இதையெல்லாம் மறந்து விட்டாரா இன்றைய முதல்வர் ஸ்டாலின்.

சட்டம் படித்தவர்கள் எல்லாம் வழக்கறிஞர்கள்தான்.ஆனால் எதைச் சரியாக செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என்று அறியாத ஜால்ரா வழக்கறிஞர்களை  பக்கத்தில் வைத்துக்கொண்டு அள்ளித் தெளித்த கோலமாய் பல வழக்குகளை சந்தித்து வரும் திமுகவிற்கு நல்ல ஆலோசகர்கள் இல்லாமல் போனது ஒரு சாபக்கேடு.

என்னை பொறுத்தவரையில் கலைஞருடன் இருந்த வரை அவருக்கு உதவியாக இருப்பதில் பெருமைப்பட்டேன். அவர் என்னை பல வகையான நெருக்கடி நேரங்களிலும் அவசரமான இடர் காலங்களிலும் அழைத்துப் பேசி கட்சிக்கும் தனது குடும்பத்திற்கும் உண்டாகும் சிக்கல்களை தீர்த்துக் கொடுக்கும் படி என்னைக்  கேட்டுக்கொண்டார்.நம்பினார்.
நானும் சட்டபூர்வமாக எது முறையோ அதை செய்து கொடுத்து அவரின் இக்கட்டுகளை நீக்கி இருக்கிறேன்.

ஆனால் ஸ்டாலினுக்கு மட்டும் என் மேல் ஏன் ஒரு காண்டும் வெறுப்பும் இருக்கிறது என்று தெரியவில்லை? நான் ஏதும் அவர் வீட்டின் சொத்தை அள்ளி கொண்டு வந்து விட்டேனா?
இன்று அவருக்குப் பின்னால் இருப்பவர்கள் எல்லாம் இத்தகைய நன்மதிப்பையும் நம்பிக்கைகளையும் கொண்டவர்களா! இல்லை  வெறும் லாப நோக்கில் திரிபவர்களா?  இல்லை இது குறித்து சிந்திக்க நேரமில்லை யா!

1979 முதல் கலைஞர் என்னை பெயர் சொல்லி அழைப்பார். அன்றைய காலத்தில்  இருந்தவர்கள் என்கிற முறையில் ஸ்டாலின் துரைமுருகன் இருவரையும்தான். எனக்கு நன்றாக தெரியும். மற்றவர்கள் எல்லாம் பின்னால் வந்தவர்கள்! இவர்களுக்கே  அதிகார புத்தியும் மதி மயக்கம் வந்துவிட்டது. பிறகு யாரைச் சொல்லி என்ன பலன்! நேர்மையான கட்சி பணிகளை ஆற்றுவர்களை விட புகழ்பாடும் தன்மானமற்ற அடிமை கூட்டம் வேண்டும். அவ்வளதான்.

உண்மையைச் சொன்னால் கலைஞருக்குப் பிறகு வந்திருக்கும் இந்த திமுக  அரசியலில் என்னைப் பொருத்த அளவில் பெருமைப்படவோ நம்பிக்கை கொள்ளவோ ஏதுமில்லை.

இப்படி பல செய்திகள்…..
தொடர்ந்து சொல்கிறேன்.

#திமுக்கேடுகள்
#dmkfails
#தகுதியேதடை

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
15-3-2024.


No comments:

Post a Comment

விவசாயம்⁉️

இரண்டு கோடிகள் கொடுத்து ஒரு ஜோடி நாய்கள் வாங்கும் எங்கள் தேசத்தில்...!! இருபது கோடிகள் கொடுத்து ஒருவர் மட்டுமே பயணிக்க கார் வாங்கும் எங்கள் ...