24 வயதில் தூக்கிலிடப்பட்ட பகத்சிங் ,17 வயதில் போராட்டக் களத்தில் குதித்த கொசிமின், பாக்கிஸ்தானில் பெண்கள் உரிமைக்காகப் போராடிய மலாலா என இந்த இளையோர் பட்டியல் நீளமாக உள்ளது. இன்று நாம் இளையோரைப் பார்க்கப் போனால் 24வயதுடைய எம்மா கொண்சாலைஸ்
2018 இல் அமெரிக்கா புளோரிடா பார்க்கிளந் உயர் பள்ளியில் துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பியவர் அவர் இன்று அமெரிக்காவில் புரட்சி பெண்ணாக வலம் வருகிறார்.
24 வயதுடைய யோசுவாவோங் சீனாவிடம் இருந்து கொங்கோங் மக்களாட்சி உரிமை பெறுவதற்காகவும் மனித உரிமைக்காகவும் போராடி வருகிறார். 22 வயதுடைய காகிமத் சமீமி மேற்குக் கரையில் பலஸ்தின மக்களுக்காகக் குரல் கொடுத்து வருகிறார்.
இப்படி உலகம் முழுவதும் போராட்டத்தில் குதித்தவர்கள் இளையோர்கள் என்பது வரலாற்று உண்மை.
எங்களுடைய தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எங்கள் தலைவர் மே தகு வேலுப்பிள்ளை பிரபாகரன் உட்பட போராளிகள் தளபதிகள் அனைவருமே இளவயதில் போராடப் புறப்பட்டனர்.
கப்டன் மாலதி கப்டன் அங்கயக்கண்ணி, கப்டன் மில்லர், மேஜர் சோதியா, லெப்கேணல் திலீபன் என அனைவருமே எங்கள் தேசத்தின் விடுதலைக்காக இளையோராகவே புறப்பட்டனர்.
எனவே அப்படிப் புறப்பட்ட அத்தனை மாவீரர்களையும் கண்முன்னே நிறுத்தி இன்றைய இளையோர் ஆகிய நாம் சிறைப்பட்டு இருக்கும் தமிழீழத்தை மீட்டு எமது மண்ணில் எங்கள் மக்களைச் சொந்த மண்ணில் மதிப்புடன் வாழ வைக்க வேண்டும்.
எங்கள் தலைவர், வரலாறு எனது வழிகாட்டி என கூறியதற்கு இணங்க வரலாற்றைப் படிப்போம் வரலாற்று கடமையாற்றுவோம். வரலாறு படைப்போம். "தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்."2/2
@actorvijay
#கேஎஸ்ஆர்போஸட்
#ksrpost
1-10-2024
No comments:
Post a Comment