Wednesday, November 6, 2024

பிரதமர் மோடி அவர்கள் கணேச சதுர்த்தியை ஒட்டி வாழ்த்து தெரிவிக்கும்

 பிரதமர் மோடி அவர்கள் கணேச சதுர்த்தியை ஒட்டி வாழ்த்து தெரிவிக்கும் பொருட்டு உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திர சூட் அவர்களைச் சந்தித்ததை  அரசியலாக்கி சமூக வலைத்தளங்கள் விமர்சனம் செய்து சர்ச்சைக்கு உள்ளாக்கியுள்ளன 

 


இது ஒன்றும் புதியது அல்ல! உச்ச நீதிமன்றத்தில் கனியா முதல் நீதிபதியாக இருந்தபோது அன்று ஜனாதிபதியாக இருந்த ராஜேந்திர பிரசாத் அவரை சந்தித்தார். யாருக்கு அதிகாரம் அதிகம்?  குடியரசு தலைவருக்கா? பிரதமருக்கா? என்ற குழப்பங்கள் எல்லாம் 1951 என்று நினைக்கிறேன் அப்போது ஏற்பட்டது! பிரதமர் நேரும் சந்தித்த சர்ச்சைகள் உண்டு


அதேபோல் 1966 இல் இந்திரா காந்தி அவர்கள் பிரதமராக இருந்தபோது அவரும்  உச்ச நீதிமன்ற நீதிபதியை சந்தித்தார். அதுவும் சர்ச்சைக்கு உள்ளானது. 


அதேபோல் தேவகவுடா பிரதமராக 

இருந்தபோது நள்ளிரவில் உச்ச நீதிமன்ற நீதிபதியை சந்தித்ததாக அப்போதும் சர்ச்சை கிளம்பியது.


இன்று பிரதமர் மோடி அவர்கள் உச்ச நீதி மன்ற நீதிபதியை சந்தித்தை மட்டும்  பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் 

குறிப்பாக  கணேச சதுர்த்தி காரணமாக சந்தித்ததைக் கூட புரிந்து கொள்ளாமல்  மிகைப்படுத்தி தேவையில்லாத சர்ச்சையை கிளப்புகிறார்கள். 


மேற்ச் சொன்ன ராஜேந்திர பிரசாத் இந்திரா தேவகவுடா மூன்று பேரும் உச்ச நீதிமன்ற நீதிபதியை சந்தித்த விவாகரங்கள் ஏதும் கூட  அக்கால பத்திரிகைகளில்  வெளியே வரவில்லை. இவையெல்லாம் காங்கிரஸ் ஆட்சி கட்டிலில் இருந்த காலத்தில் நடந்தது தான். 


இப்போது பிரதமர் மோடி அவர்கள் உச்சமன்ற நீதிபதியைச் சந்தித்ததை மட்டும்  பெரிதாக்கி பேசுகிறார்கள்.

எப்போதும் அரசியலுக்கு அறம் என்று ஒன்று இருக்கிறது! அதை யாரும் மறந்து விடக்கூடாது!


#Modi_Chandrachud


#ksrpost

#கேஎஸ்ஆர்போஸ்ட்

13-9-2024.

@narendramodi

 

@AmitShah

 

@nsitharaman

 

@annamalai_k

 

@BJP4TamilNadu

No comments:

Post a Comment

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது இன்று

———————————————————-  இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் முடிந்து. இதில்   தமிழர்கள்    அதிகம்   வாழும்பகுதி யாழ்ப்பாணம்   இங்கு   6. எம்பிக்கள்,...