#தஞ்சையில்திமுக
#பழநிமாணிக்கம்❓
#திருவையாறுசந்திரசேகரன்❓
கடந்த 57 ஆண்டுகளில் திருவையாறு சட்டப்பேரவைத் தொகுதியில் நடைப்பெற்ற தேர்தல்களில்..1967,71,77,89,96,2006,2016,2021 ஆண்டுகளில் (8 முறை)திமுக வெற்றி பெற்றுள்ளது.
புலவர் முருகையன் ஒரு முறையும்..
துறவி இளங்கோவன் இரண்டு முறையும்..பிறகு 89 தொடங்கி இன்று வரை துரை.சந்திரசேகரனும் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
67,71,89,96,2006,2021 ஆகிய ஆறு முறை திமுக ஆளுங்கட்சியாக இருந்தது..
ஒருவருக்கேனும் திமுகவின் சார்பில் அமைச்சர் பொறுப்பெதுவும் வழங்கப்படவில்லை.
80,84,91,2001,2011 ஆகிய ஐந்து தேர்தல்களில் அதிமுக வென்றது.
ஐந்து முறையும் அதிமுக ஆளுங்கட்சி.
இதில் 84 ல் வென்ற துரை.கோவிந்தராஜன் கொறடாவாகவும்..2001 ல் வென்ற அய்யாறு வாண்டையாருக்கு( குறுகிய காலம்) அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.
அது மட்டுமல்ல..
தஞ்சாவரில் ,பட்டுக்கோட்டையில் வென்ற எஸ்.டி.எஸ்..,
ஒரத்தநாட்டில் வென்ற வெள்ளூர் வீராசாமி..வைத்தியலிங்கம்..
வலங்கைமானில் வென்ற கோமதி ஆகியோரெல்லாம் அமைச்சரானது அதிமுக ஆட்சியில்தான்.
மற்றபடி திமுக உபயதுல்லாவைத் தவிர இப்பகுதியைச் சேர்ந்த ஒருவரைக்கூட அமைச்சராக்கியதில்லை.
89 தேர்தலில் வெற்றி பெற்ற எல்.ஜி. அவர்களுக்கு கடும் எதிர்ப்பின் பின்னர் பேரவைச் செயலர் என்ற ஒரு பதவி வழங்கப்பட்டது.. பழநிமாணிக்கம் கடந்த தேர்தலில் வாய்ப்பு இல்லை.
இதுதான் திமுக வரலாறு..
எப்போதும் தன்னைத்தாங்கிப் பிடிக்கும் தஞ்சைக்கு
அக்கட்சி செய்யும் கைம்மாறு.
No comments:
Post a Comment