Monday, November 11, 2024

#பாரதரத்னா_கலைஞருக்கு_கோரிக்கை

 #பாரதரத்னா_கலைஞருக்கு_கோரிக்கை

—————————————

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்கிறார்,

அப்படி பிரதமரை சந்திக்கும் போது முதல்வர் ஸ்டாலின் கலைஞர் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கேட்பார் என்பதாக டெல்லித் தகவல்கள் கூறுகின்றன.


 என் நினைவில் உள்ளபடிச் சொன்னால்

2004 இல் மன்மோகன் சிங்  முதல் முறை பிரதமராக வருகிறார். வந்த பிறகு அன்றைய மத்திய அமைச்சராக இருந்த டி ஆர் பாலு மூலம் கலைஞருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று முதன் முதலாகக் கோரிக்கை வைக்கப்பட்டது.

அப்போது நான் திமுகவில் இல்லை!


அப்போது காவிரி உட்பட பல வகையான தேசிய நதிகள இணைப்பு பிரச்சனைகள் குறித்த பொதுநல வழக்குகளை நீதிமன்றங்களில்  தொடர்ந்து அதற்காக நான் வாதாடி வந்தேன். அந்த செயலுக்காக அப்போது  குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாம் அவர்கள் என்னைப் பாராட்டி தனிப்பட்ட முறையில் எனக்கு விருந்தும் ராஷ்ரடபதி பவனில் கொடுத்து கவுரவித்தார்.


அந்த நேரத்தில் தான் டி ஆர் பாலு கலைஞருக்கு பாரத ரத்னா விருது வேண்டி அங்கே பேசிக் கொண்டிருக்கிறார் என ஜனாதிபதி மாளிகையைச் சேர்ந்த அப்போதைய அதிகாரிகள் என்னிடம் கூறினார்கள்.


கலைஞருக்கு பாரத ரத்னா விருது கொடுப்பது குறித்து குடியரசு தலைவர் அப்துல் கலாமிற்கு கருத்துக்கள் ஏதும் இல்லை விருப்பமும் இல்லை! ஆகவே அப்போது அவ்விருது கலைஞருக்கு கிடைப்பதற்கான வாய்ப்பும் இல்லை என்று தெரியவந்தது!


இதற்கிடையில் முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு ஈழத் தமிழர்களுக்கான டெசோ மாநாட்டை நடத்த வேண்டும் என்று கலைஞர் என்னை திமுகவுக்கு அழைத்தார்.   அதற்கான முன்னேற்பாடாக டெசோ பணிகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தேன். குறிப்பாக ஈழத் தமிழர் பிரச்சனைக்காக ஐநா சபைக்கு ஸ்டாலினை செல்ல ஆவனங்கள் தாயாரிப்பு,பிரிட்டிஷ் பார்லிமென்டில் லண்டனில் சென்று  இன்றைய முதல்வர் ஸ்டாலினை மாநாடுகளில் அவரை அழைத்துக் கொண்டு போய் பேச வைத்தது என்று பல வேலைகளை நான் செய்து கொண்டிருந்தேன். மேற்கண்ட விவகாரங்களில் எவ்வளவு உறுதுணையாக நான் இருந்தேன் என்பது எல்லோருக்கும் தெரியும்! நானும் அந்த லண்டன் மாநாட்டில் கலந்து கொண்டேன்.


அங்கிருந்து நாங்கள் திரும்பிய பிறகு டெசோ மாநாட்டை டெல்லியில் கான்ஸ்டியுசன்  கிளப்பில் வைத்து   டி ஆர் பாலு  நடத்தினார். சரி! ஈழத் தமிழர்கள் குறித்த பிரச்சனைகள் அவர் நடத்திய கூட்டத்தில் பல்வேறு மேசைகளில் நாற்காலிகளில் பல்வேறு இந்திய அரசியல் தலைவர்களின் பெயர்களைப் பொறித்துக் காத்திருந்த போதும்   கூட பலரும் அந்த கூட்டத்திற்கு வரவில்லை. காங்கிரஸ் கட்சி மட்டும்தான் அந்த கூட்டத்தில் வந்து கலந்து கொண்டது. டி ஆர் பாலு நடத்திய அந்த டெஸோ மாநாடு சிறப்பாக நடைபெறவில்லை! தோல்வியில் முடிந்தது என்று சில பத்திரிகையாளர்கள் எழுதினார்கள். 


அப்போது இரண்டாவது முறையாக மன்மோகன் சிங் பிரதமர் பதவிக்கு வந்த போது பிரதிபா பட்டீல் குடியரசுத் தலைவராக இருந்தார். அந்தச் சமயத்தில் கலைஞருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு எழுதிய குழுவில் நானும் முக்கியமாக அங்கம் பெற்றிருந்தேன். அப்போதும்  மன்மோகன் சிங் மௌனசிங்காகிவிட்டார். மீண்டும் அவ்விருது கலைஞருக்கு

கிடைக்கவில்லை!


இப்போது முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியிடம்  பாரத ரத்னா விருதை கலைஞருக்கு வழங்க வேண்டும் என்று மனு வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படிக் கேட்கும் பட்சத்தில் என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!


#பாரதரத்னா_கலைஞருக்கு


#ksrpost

#கேஎஸ்ஆர்போஸட்

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...