Monday, November 11, 2024

ஒருவன் உங்களுக்கெல்லாம் போட்டி தேர்வில் செட்டிங் செய்து அரசு வேலை

 ஒருவன் உங்களுக்கெல்லாம் போட்டி தேர்வில் செட்டிங் செய்து அரசு வேலை வாங்கித் தருகிறேன் என்று தனது தம்பி மற்றும் உதவியாளர்கள் மூலம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 30,000 பேரிடம் ஒவ்வொரு வரிடமும் சராசரியாக 3 லட்ச ரூபாய் என்று 960 கோடி வசூல் செய்திருக்கிறான்..


அதில் வெறும் 250 பேருக்கு மட்டும் சொன்னபடி வேலை கொடுத்துவிட்டு நீதி 29 ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கவில்லை, பணம் கொடுத்தவர்களில் சிலர் , பணத்தை திருப்பி கேட்க வெறும் 2500 பேருக்கு மட்டும் திருப்பி கொடுத்துவிட்டு உயர் நீதிமன்றத்தில் எல்லோருக்கும் திருப்பி பணத்தை கொடுத்து விட்டோம் எனவே நான் குற்றமற்றவன் என்று பொய் சொல்லி நீதிபதியிடம் கேட்க நீதிபதியும் நீ லஞ்சம் வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்து விட்டதால் இன்று முதல் நீ நிருபராதி என்று அழைக்கப்படுவாய் என்று விட்டுவிடுகிறது. இந்த நீதிபதி அனேகமாக திமுகவின் முன்னாள் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவராக இருந்திருக்கக்கூடும்..


திருப்பி பணம் கிடைக்காத 25,000 பேரில் எல்லோரும் கிணத்தில் போட்ட கல்லாக இருக்கும் போது அதில் ஒரு பத்து முதல் 15 பேர் ஒன்றாக இணைந்து உச்ச நீதிமன்றத்திற்கு செல்கிறார்கள் , உச்ச நீதிமன்றம் அது எப்படி லஞ்சம் வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்து விட்டால் குற்றமில்லை என்று ஆகும் என்று வழக்கை ஒழுங்காக விசாரிக்க இந்த வழக்கை பதிவு செய்த சென்னை போலீசின் கியூ பிரான்சை உத்தரவிடுகிறது...


பணம் கொடுத்தவர்களில் சிலர் மன உளைச்சலில் தற்கொலை செய்து இறந்து விடுகிறார்கள், வேலை கிடைக்காதவர்களிலும் சிலர் தற்கொலை செய்து இறந்து விடுகிறார்கள் இந்நிலையில் அந்த நபர் திமுகவில் இணைந்து மீண்டும் அதே துறையின் அமைச்சராகி விடுகிறார்..


இப்போது இந்த வழக்கை பதிவு செய்த காவல்துறை தனது அமைச்சரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு குற்றப் பத்திரிகையில் 2000 பேரின் பெயரை சேர்த்து விடுகிறார்கள்... அதோடு இந்த ஏற்பாடுகளை எல்லாம் செய்த அவரின் தம்பியை தீவிரமாக தேடாமல் கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறார்கள்..


2000 பேரையும் விசாரணைக்கு கூப்பிட்டு வழக்கை முடிக்க குறைந்தபட்சம் 80 ஆண்டுகள் ஆகும் எனும் நிலையில் செந்தில் பாலாஜியின் கார் கதவுகளை ஐபிஎஸ் படித்த அரசுத்துறை செயலாளர்கள் திறந்து விட்டுக் கொண்டே இருப்பார்கள் ஐபிஎஸ் படித்த காவல்துறை அதிகாரிகள் அவருக்கு சலித்து அடித்துக் கொண்டே இருப்பார்கள் இதுதான் சட்டம்...


சட்டப்படி தண்டனை கிடைக்காது ஆனால் தார்மீக படி இவருக்கு அமைச்சர் பதவி கொடுக்க மாட்டேன் என்று சொல்ல வேண்டிய முதலமைச்சர் இவரை தியாகி என்று வர்ணிக்கிறார் இப்படிப்பட்ட ஒரு கேடுகெட்ட ஆட்சியாளர்கள் இந்த உலகத்தில் இதுவரை எங்கும் இருந்ததில்லை...



No comments:

Post a Comment

குடந்தை அரசு ஆடவர் கல்லூரி வளாகத்துள் தமிழஞர் உ. வே. சா சிலை அமைக்க வேண்டும். #உவேசா

 குடந்தை அரசு ஆடவர் கல்லூரி வளாகத்துள் தமிழஞர் உ. வே. சா சிலை அமைக்க  வேண்டும். #உவேசா