வாழ்க்கையில் மிதக்க
கற்று கொள்ளாதே..
நீ இறந்தால்
தானாகவே மிதப்பாய்..
நீந்த கற்று கொள்
அதுவே நீ கரை சேர உதவும்..
ஒவ்வொரு காலம் மாற மாற வயசுக்கு ஏற ஏற பக்குவம், புரிதல், அவரவர் மனநிலை பற்றின மதிப்பீடு, கணவர் மனைவி சண்டை கூட குறைந்து விடும்.
காரணம் எது பிடிக்கும் பிடிக்காது, எதை செய்தால், பேசினால் கோபம் வரும் என்று ஓரளவுக்கு தெரிந்து விடும்..
எவ்வளவு அன்யோன்யம் என்றாலும், அவரவர்க்கு என சுயபார்வை விருப்பம் நிச்சயம் இருக்கும்.
முழுமையாக கணவனோ, மனைவியோ வெளிப்படுத்தி விட மாட்டார்கள். ஒரு ஓரத்தில் ஏக்கம், ஒரு சில மறைக்கப் பட்ட பக்கங்கள்.. சொல்ல விரும்பா கனவுகள் இருக்கும் தான்.
நாங்கள் வித்தியாச கணவர் மனைவி என்றால் அவர்களுக்கு என் மரியாதை வணக்கங்கள்..
கொஞ்சம் சலிப்புடன் தான் வாழ்க்கை ஓட்டிட்டு இருக்கிறார்கள் என்பது உண்மை நான் கேட்ட சில தம்பதிகளிடம்..
எந்த ஒருவரின் உணர்வுகளின் சகிப்புதன்மையை ஓவரா தட்டி, டார்ச்சர் செய்தால் நிச்சயம் கோபம் வரும் தான். வெடிக்கத்தான் செய்வார்கள்..
என் பிள்ளை என் மனைவி என் பெண்..என் தம்பி நீ.. உங்களுக்கு வயசாகி விட்டது பேசாம உட்காருங்க... சொல்றத கேட்டே ஆகணும் என்றுஆளுமை செய்ய நினைத்தால் அவர்கள் மகிழ்ச்சி மட்டுமல்ல..
நம் சந்தோசமும் காணாமல் போகும்..
ஒளிந்து கொண்டு எழும் ஈகோ நிச்சயம் பெரிய ஆபத்து..
கொஞ்சம் குறைகள் இருக்கும் தான்... அப்படியே ஏற்று செல்வது தான் நல்லது..
ரொம்ப கிளறினா என்ன கையை பிடிச்சி இழுத்தியா ஜோக் போல்... தான்... Sr
No comments:
Post a Comment