Monday, November 11, 2024

எனக்கென்று ஓர் அந்தரங்க அறை இருக்கிறது.


 எனக்கென்று ஓர் அந்தரங்க அறை இருக்கிறது. 

அரவங்களும் ஆயுதங்களும் குத்துவதற்கு தயாராகவே இருக்கின்றன. 

நீதிபதியாகவும் நானே இருக்கின்றேன்.

தண்டனைகளும் எனக்கானவை தான்.

சுவரெங்கும் உப்பு பூக்கள் வரைந்த ஓவியங்களும் உண்டு. 

நினைத்து நினைத்து சுகித்துக் கிடக்கும் தித்திப்பான படுக்கைகளும் உண்டு. 

அழைத்துச் செல்லும் எல்லோரும் வரவேற்பறையில் அமர்ந்து கொள்ளலாம்.

என்னை எங்கு நிறுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்து, மாயக் கதவுகளின் சாவியை ஒளித்து வைத்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...