Monday, November 11, 2024

#விளம்பரஆசைக்காகஆர்வக்கோளாறில்….⁉️ #எம்பி

 #விளம்பரஆசைக்காகஆர்வக்கோளாறில்….⁉️ #எம்பி

————————————

நான் இரண்டு நாட்களுக்கு முன்பாக சிலர் சொல்வது போல் விளம்பர ஆசைக்காக அல்லது ஆர்வக்கோளாறில் என்று கூட இருக்கட்டும்! பரவாயில்லை ஒரு விஷயத்தை பதிவு செய்திருந்தேன். மயிலாடுதுறை காங்கிரஸ் பெண் எம்பி ஒருவர் புரோட்டாக்கால் தெரியாமல் டியர் பிரதர் என்று இலங்கை அதிபர் அனுராவை அழைத்து மீனவர்  பிரச்சனைகளைத் தீர்த்து தாருங்கள் என்று ஒரு கடிதம் எழுதி இருந்தார். அது ஊடகங்களில் வெளிவந்தது. 


அதனுடைய அபத்தம் தாளாமல்  அது குறித்து நான் சொல்லியிருந்தது என்னவென்றால் முறையாக இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்பி இன்னொரு நாட்டிற்கு அதன் அதிபருக்கு ஏதாவது சொல்ல வேண்டுமென்றால் பிரதமர் வழியாகவோ அல்லது வெளியுறவுத் துறை அமைச்சகம் வழியாகத்தான் இப்படியான பிரேணைகளை வைக்க முடியும்!   


இந்திய  நாட்டில்  வாழக்கூடிய ஒரு எம்பி தான் பதவி ஏற்கையில் எடுத்துக் கொள்ளப்பட்ட உறுதி மொழிகளைத் தாண்டி அதாவது  இந்தியன் கான்ஸ்டியூசனல் சட்ட விதிகளுக்கு அப்பால் அந்த கடிதத்தை எப்படி தனிப்பட்ட முறையில் எழுதி அனுப்ப முடியும் என்று தான் கேட்டேன்!


இப்படி நான் கேட்டதை பலர் ஏகடிமும் கிண்டலும் செய்தார்கள். ஆனால் இன்றைக்கு என்ன நடந்திருக்கிறது?

இதே தமிழ்நாட்டு பெண் எம்பியின்  காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளி விவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தமிழ்நாட்டு மீனவர் பிரச்சனைகளை  இரு நாட்டவரும் சரியான முறையில் பேசித் தீர்க்க  வேண்டும் என்று கடிதம் அனுப்பியுள்ளார்.


இதுதானே புரொட்டோ காலுக்கு உரிய உண்மையான முறை ! இதை விட்டுவிட்டு ஒரு தமிழ்நாட்டு எம்பி தன் மனம் போன போக்கில் சில்லுண்டி வேலைகளைச் செய்து கொண்டு ஏதோ தான் இந்தியாவில் எம்பி பதிவிக்கு வந்துவிட்டால் எந்த நாட்டு அதிபருக்கும்  இங்கிருந்து நேரடியாக கடிதம் எழுதலாம் எனத்  தன் மனம் போன போக்கில் நடந்து கொள்ளும்  ஆர்வக்கோளாறுகளை எல்லாம் இந்திய எம் பி ஆக வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த காங்கிரஸ் தலைமையில் தேர்ந்தெடுக்கிறார்களே என்று வேதனையுடன் விமர்சித்தால் என்னை  ஏகடியம் வேறு செய்வார்களா?


இதெல்லாம் தெரியாமல் தமிழ்நாட்டில் ஒரு பெண் எம் பி மயிலாடுதுறையில் ஜெயித்திருக்கிறார்.  இம்மாதிரி அசடுகளை எல்லாம் எம்பி ஆக்கி அழகு பார்க்கிறது காங்கிரஸ்! அவரது கட்சியின் தலைவர் இந்திய உள்துறை உள்துறை அமைச்சகத்துக்கு மீனவர்கள் பிரச்சினைகள் குறித்து கடிதம் எழுதுகிறார்! இவர் அன்னிய நாட்டு அதிபருக்கே நேரடியாக கடிதம் எழுதுகிறார்! இதெல்லாம் காலத்தின் கோலம்!


குறைந்தபட்சம் அவர் இந்தியக் காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைக்கு பிறகாவது இந்த கடிதத்தை எழுதியிருக்க வேண்டும்!


ராகுல் காந்தியைத் தாண்டியும் தமிழகத்தில் இந்த பெண் எம் பி யை யார் வழி நடத்துகிறார்கள் என்று தெரியவில்லை?


#கேஎஸ்ஆர்போஸ்ட்

#ksrpost

30-9-2024

No comments:

Post a Comment

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது இன்று

———————————————————-  இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் முடிந்து. இதில்   தமிழர்கள்    அதிகம்   வாழும்பகுதி யாழ்ப்பாணம்   இங்கு   6. எம்பிக்கள்,...