என் மண்….
என் பூமி…..
#கரிசல்காடு
வானம் பார்த்த கந்தக மண்
The beauty of village.
The beauty Of nature
Love of everything village
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
28-9-2024.
ஊன்றிய மக்காச் சோளம் விதைகளை தேடிப்பார்க்கும் விவசாயி
விதைகளை முண்டி திண்ணும் பன்றிகளால் விழிபிதுங்கும் விவசாயிகள், கண்டு கொள்ளாத அரசு
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஹெக்டேர் மானாவாரி விவசாய நிலங்கள் உள்ளன இங்கு பெரும்பாலும் புரட்டாசி மாதம் பெய்யக்கூடிய பருவமழையை நம்பி விவசாயம் செய்யப்படுகிறது பயறு வகைகள் பயிர் வகைகள், எண்ணெய் வித்துக்கள் பனப்பயிர்கள் என பல்வேறு பயிர்கள் பயிரிடப்படுகிறது இங்கு பெரும்பாலும் மக்காச்சோளம் சாகுபடி அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது அதற்கடுத்தார் போல் வெள்ளைச் சோளம்,மிளகாய் கொத்தமல்லி ,வெங்காயம் போன்றவைகளும் சாகுபடி செய்யப்படுகிறது புரட்டாசி மாதம் பெய்யக்கூடிய பருவ மழைக்கு விவசாயிகள் தங்கள் நிலங்களை தயார்படுத்தி விதைப்பதற்கு தயார் நிலையில் உள்ளனர் இந்நிலையில் புரட்டாசி மாதம் பிறந்து சுமார் 12 நாட்கள் ஆகியும் இதுவரை மழை பெய்யவில்லை இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர் இந்நிலையில் தோட்ட பாசனங்களில் கிணற்று பாசனம் மூலம் பயிர் செய்யப்படுகின்ற நிலங்களில் விவசாயிகள் மக்காச்சோளம் விதைகளை ஊண்றிவருகின்றனர் இந்நிலையில் மக்காச்சோளம் விதைகள் தற்போது நீர் பாய்ச்சப்பட்டு தற்போது முளைத்து வருகின்றன இந்நிலையில் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக மாவட்டத்தில் கடுமையாக விவசாயிகளுக்கு சவால் விடுகின்ற காட்டுப்பன்றிகள் மிகவும் அதிகமாக இப்பகுதியில் உள்ளன காட்டுப் பன்றிகள் தற்போது விவசாயிகள் ஊன்றிய மக்காச் சோளம் விதைகளை வரிசைப்படுத்தி இரவு நேரங்களில் முழுவதுமாக தின்று அழித்து வருகின்றன பகலில் சென்று விவசாய நிலங்களை பார்க்கும்போது விதைகளை முழுக்க தின்றுவிட்டன இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். கடந்த மூன்று வருடங்களாக மக்காச்சோளம் பயிர் கதிர் மணிப்பிடிக்கும்தருவாயில் அதனை பன்றிகள் கும்பலாக வந்து தின்றன. ஆனால் இந்தாண்டு கோடையில் நீர் நிலைகளில் தங்கி கூடாரம் போட்டு விட்டன. கோடையில் பயிரிடப்பட்ட பயிர்களை அழித்தன. தொடர்ந்து பன்றிகள் தொல்லையில் மகசூல் பாதிக்கப்பட்டது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை பன்றிகளை கட்டுப்படுத்தவும், முழுமையாக அழிக்கவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. அரசு அதிகாரிகள் அதை பெரிது படுத்தவில்லை. இதனால் விவசாயிகள் தங்களால் முயன்ற அளவு பன்றிகளிடம் இருந்து மகசூலை காப்பாற்ற தங்களுக்கு தெரிந்த யுத்திகளை கையாண்டனர். பலன் இல்லை. இயற்கை இடர்பாடு ஒரு புறமிருக்க புதிய தலைவலியாக பன்றிகள் வந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சியில் ஈடுபட வேண்டும். இல்லையேல் மக்காச் சோளம் மட்டுமல்ல எந்த வொரு விவசாயமும் செய்ய முடியாத நிலை ஏற்படும். அரசின் செவிகளுக்கு எட்டுமா சம்சாரியின் அழுகுரல்…
No comments:
Post a Comment