Tuesday, July 14, 2026

ஒரு மனிதன் தண்டிக்கப்படுவதற்கு தவறு செய்ய வேண்டுமென்று அவசியம் இல்லை.

 ஒரு மனிதன் தண்டிக்கப்படுவதற்கு தவறு செய்ய வேண்டுமென்று அவசியம் இல்லை.எந்தக் காரணமுமின்றி ஒருவன் தண்டிக்கப்படலாம்.அந்தக் காரணம் இந்த ஜென்மத்தில் அல்லாமல் வேறு எப்போதோ எங்கேயும் செய்த பிழையாக இருக்கலாம்.அல்லது ஒரு அனுபவம் தர வேண்டுமென்று தண்டிக்கப்படலாம்.ஒரு மனிதன் எத்தனை கொக்கரித்தாலும் எவ்வளவு நெஞ்சு நிமிர்த்திப் பேசினாலும் எத்தனை கோணல் சிரிப்பு சிரித்தாலும் அவர்கள் விதியின் கைப்பாவைகள்.நெல்முனையளவும் அவர்களால் எதையும் நகர்த்த முடியாது.

காட்டாற்று வெள்ளமாய் எதனாலோ எந்த சக்தியாலோ உந்தப்பட்டு எல்லோர் வாழ்க்கையும் ஓடிக் கொண்டிருக்க , ஒவ்வொரு தனிமனிதனும் ஆற்றில் சிக்கிய சருகாய் எந்த எதிர்ப்புமின்றி கூடவே ஓடிக் கொண்டுதான் இருக்க வேண்டும்.கம்பியில் இரண்டு நிமிடம் சிக்கிவிட்டு நான் விதியை மதியால் வென்றேன் என்று ஏதேனும் சருகு சொல்லிற்று என்றால் அதன் விதியை நினைத்து சிரித்து விட்டுத்தான் போகலாமே ஒழிய வேறு எதுவும் செய்வதற்கில்லை.



No comments:

Post a Comment

கன்னியாகுமரி மாவட்டம் #மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும் இந்திய அரியவகை மணல் ஆலை (#IREL)

  கன்னியாகுமரி மாவட்டம் #மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும் இந்திய அரியவகை மணல் ஆலை ( #IREL ) கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் மத்த...