இந்தோனேசியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நமது மதிப்பிற்குரிய பிரதமர் மோடி அவர்கள் அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் இந்தோனேசியா அதிபர் பிரபாவோ சுபியான்டோ மூத்த அமைச்சர்கள் மற்றும் எம் பி கள் மத்தியில் கடந்த செவ்வாய்க்கிழமை உரையாற்றினார்!
இந்தியாவின் 140 கோடி மக்களும் இந்தோனேஷியாவின் 29 கோடி மக்களும் பகிரப்பட்ட செழிப்புக்காக ஒன்றிணைந்து பயணிக்கும் போது ஒரு வரலாற்று நிகழ்வை இந்த உலகம் காணும் என்று சொன்னார்! இந்த பசிபிக் பிராந்தியமானது சுதந்திரமானதாகவும் வெளிப்படையானதாகவும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும் என்பதை இந்தியா வலுவாக ஆதரிக்கிறது!இந்தப் பிராந்தியத்தில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்தை இரு நாடுகளும் உறுதிப்படுத்த வேண்டும் என்று சொன்னார். மேலும் அவர் சொன்னதில் குறிப்பிட தகுந்தது என்னவெனில் 1955 ஆம் ஆண்டு நடைபெற்ற பாண்டுங் மாநாடு மூலம் சொந்த முடிவுகளை எடுக்க சுதந்திர நாடுகளுக்கு உரிமை உள்ளது என்ற செய்தியை அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்தோனேசிய அதிபர் சுகார்னோ ஆகியோர் உலகுக்கு தெளிவாக எடுத்துரைத்தார்கள் என்று புகழ்ந்து பேசினார்! வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த மாநாட்டில் அப்போது புதிதாகச் சுதந்திரம் அடைந்த 29 ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் பங்கேற்றன! சுதந்திரம் அடைந்த அத்தனை நாடுகளையும் இணைத்து காலனி ஆதிக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அக்காலத்தில் நடைபெற்ற அந்த மாநாடு அணிசேரா நாடுகளின் சுதந்திரமான இயக்கத்திற்கு அடித்தளம் இட்டது! உண்மையில் இந்த மாநாட்டின் ஏற்பாட்டாளாராக நேரு இருந்தார் என்றும் பிரதமர் நினைவு கூர்ந்தார். இன்றுஉலகம் முழுவதும் உள்ள ஜனநாயக நாடுகளில் நம்பகமான தேர்தல் நிபுணத்தைத் தேடும் போது இந்தியாவே அவர்களின் முதல் தேர்வாக உள்ளது என்று இந்தோனேசியாவைக் குறிப்பிட்டு மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். பூட்டான் நேபாளம் நபீமியா தற்போது இந்தோனேசிய நாடுகள் யாவும் நம் தேர்தல் முறையைப் பின்பற்றுவதன் மூலமாக இந்தியாவின் தேர்தல் நடைமுறை உலகளாவிய அளவுகோலாக உருவெடுத்துள்ளது! அந்த வகையில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து நிற்கும் போது ஜனநாயக வாய்ப்புகளை உருவாக்கும் நம்பிக்கையை வளர்க்கும் எதிர்காலத்தையும் வடிவமைக்கும் என்ற உலகின் நம்பிக்கை மேலும் வலுப்பெறும் என்று பிரதமர் கூறினார்! பூட்டான் முதல் நாடாக இந்தியாவிடமிருந்து அதன் தனிப் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியை பெற்றுள்ளது! நேபாளம் தனது முன்னோடித் திட்ட பயன்பாட்டுக்கான தனி பயன்பாட்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் நிறுவன ரீதியான ஆதரவை இந்தியாவிடம் இருந்து பெற்றுள்ளது! நபீமியா இந்தியாவில் உருவாக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவி பேட் எந்திரங்களைத் தனது தேர்தல்களில் இன்று வரை வெற்றிகரமாகப் பயன்படுத்தி வருகிறது! தற்போது இந்தியாவில் இருந்து தனி பயன்பாட்டுக்கு என வாக்குப்பதிவு எந்திரங்களை கொள்முதல் செய்ய இந்தோனேசியாவும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது! அதன்படி இரு நாடுகளிலும் தேர்தல் தொழில்நுட்பம் மனித மேம்பாட்டுத் திறன் மேம்பாட்டுத் திறனின் சிறந்த நடைமுறைகள் நிறுவன ரீதியான ஆதரவு வளப் பரிமாற்றம் ஆகியவற்றில் ஒத்துழைப்பு ஏற்படும் என்று அதிகாரிகள் இந்த சந்திப்பை முன்வைத்துக் கூறினார்கள்.இணைய அச்சுறுத்தல்கள் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் தீவிரவாதம் ஆகியவற்றை எதிர்கொள்வதில் இரு நாடுகளும் தங்களது ஒத்துழைப்பை விரிவு படுத்துவதன் மூலம் அமைதியை விரும்பும் சக்திகளை இந்தோனேஷியா வலுப்படுத்தும் என்று இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது! மேலும் தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதை இனித் தாமதப்படுத்த முடியாது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்! அதற்கு இடையே இந்தோனேஷியாவில் யோகியகார்டா நகரில் உள்ள பிரம்பானன் கோயில் வளாகத்தைப் புதுப்பிக்கவும் பாதுகாக்கவும் இந்திய உதவ உள்ளது! அந்தக் கோயிலுக்குப் பிரதமர் மோடி புதன்கிழமை செல்ல உள்ளார்! இந்தக் கோயில் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தகுந்தது.பொதுவாகவே இந்தியா தனது விரிவாக்க கொள்கையைத் தவிர்த்து வளர்ச்சிப் பாதையையே பின்பற்றி வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். அத்துடன் இந்தோனேசிய நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை உரையாற்றும்போது இந்திய பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் எல்லை விரிவாக்கம் மற்றும் ராணுவ ஆதிக்க நடவடிக்கைகளால் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இடையே கவலை அதிகரித்து வருவதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி பிரதமர் தெரிவித்தார். “ அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்”
No comments:
Post a Comment