Tuesday, July 14, 2026

கன்னியாகுமரி மாவட்டம் #மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும் இந்திய அரியவகை மணல் ஆலை (#IREL)

 கன்னியாகுமரி மாவட்டம் #மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும் இந்திய அரியவகை மணல் ஆலை (#IREL)

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் மத்திய அரசுக்குச் சொந்தமான இந்திய அரிய வகைமணல் ஆலை செயல்பட்டு வருகிறது! இந்த ஆலை இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு கடந்த 1910 ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டின் விஞ்ஞானி ஹெர் ஸ்கோம்பெர்க் என்பவரால் தொடங்கப்பட்டது. இந்திய அரியவகை மணல் ஆலை (IREL), மத்திய அரசின் அணுசக்தி துறையின் கீழ் செயல்படுகிறது. கடற்கரை மணலில் இருந்து இல்மனைட், ரூட்டைல், சிர்கன், கார்னெட் போன்ற அரிய கனிமங்களை பிரித்தெடுக்கும், நாட்டின் மிகப்பழமையான கனிமப் பிரிப்பு ஆலை ஆகும். இந்த ஆலையின் மூலம் கன்னியாகுமரி மாவட்ட கடற்கரையில் உள்ள மணலில் நிறைந்து கிடக்கும் மோனோசைட் என்கிற தனிமத்தை பிரித்து எடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது! மணவாளக்குறிச்சி கடற்கரைப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மணலில் தேங்கியிருந்த மோனோசைட் கனிமம் பல்வேறு பிரிட்டிஷ் நிறுவனங்களால் பிரித்து எடுக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டது! என்பது குறிப்பிடத்தக்கது! இந்திய சுதந்திரத்திற்கு பின்னர் 1952 ஆம் ஆண்டு கேரள மாநிலம் உத்தியோக் மண்டலில் அமைக்கப்பட்ட அரிய மணல் அணுசக்தி நிலையத் தலைவர் ஹோமி பாபா முன்னிலையில் அன்றைய பிரதமர் நேருவால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது! இதைத் தொடர்ந்து இந்த நிறுவனம் 1965 ஆம் ஆண்டு மத்திய அரசின் உடமையாக்கப்பட்டு இந்திய அரிய மணல் ஆலை என்று பெயரிடப்பட்டு தனது செயல்பாட்டைத் தொடங்கியது! இந்நிறுவனம் குமரி மாவட்டத்தில் சின்னவிளை பெரிய விளை ஆகிய இரண்டு மீனவ கிராமங்களில் கடற்கரை மண்ணிலிருந்து இலிமினேட் ரூட்டைல் சிர்கான் கார்னெட் மோனோசைட் சிலிமினேட் போன்ற அணுசக்தித் தாதுக்களைப் பிரித்து எடுக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது! மேலும் மணவாளக்குறிச்சியின் சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள நிலங்களிலிருந்து தாதுக்களை பிரித்து எடுக்கும் பணியையும் மேற்கொண்டு வருகிறது!இந்நிலையில் அரிய மணல் ஆலையை விரிவாக்கம் செய்வதற்கு கிள்ளியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கீழ் மிடாலம் மேல்மிடாலம் இணையும் புத்தந்துறை ஏழு தேசம் கொல்லங்கோடு வரை உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் சுமார் 1800 ஹெக்டர் பரப்பளவில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க கடந்த 2015 ஆம் ஆண்டில் மத்திய அரசு முடிவு செய்தது! இது தொடர்பான அணுசக்தி துறையின் கோரிக்கையை ஆய்வு செய்த அப்போதைய தமிழக அரசு 1144 ஹெக்டேர் நிலத்தில் அணுக்கனிமச் சுரங்கம் அமைக்க 2020 ஆம் ஆண்டில் ஒப்புதல் அளித்தது! அதைத் தொடர்ந்து அந்த நிலங்களை அணுக்கனிமச் சுரங்கம் அமைக்க ஒதுக்கீடு செய்து கடந்த 2021 ஆம் ஆண்டில் மத்திய அரசு உத்தரவிட்டது!இதன்படி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்த திட்டம் நடைமுறையில் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது! இந்நிலையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டால் சுற்றுச்சூழல் மற்றும் கடல் வளம் பாதிக்கும் கடல் அரிப்பு ஏற்படும் என்று மீனவ மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 2022 ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்! தமிழக அரசு மீனவர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியது! இதற்கிடையில் மத்திய அரசால் கடந்த 2020 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை 2021 ஆம் ஆண்டடில் நிறைவடைந்து விடும் என்று மீனவர்கள் எண்ணியிருந்த நேரத்தில் கடந்த மாதம் ஜூன் 10ஆம் தேதி அணுக்கனிமச் சுரங்கத் திட்டப் பணி மேலும் ஓராண்டு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசின் சார்பில் அரசாணை பிரிக்க பிறப்பிக்கப்பட்டது! இதனால் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் மற்றும் கடலோரக் கிராமப் பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்!மேலும் திமுக கம்யூனிஸ்ட் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர்! காங்கிரஸ் கட்சியின் திட்டம் இது… ஆனால் இன்று காங்கிரஸ் எதிர்க்கிறது. மத்திய அரசால் அரிய மணல் ஆலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள வருவாய் கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளிலோ பொது பயன்பாட்டில் உள்ள பகுதிகளிலோ மற்றும் தனிநபர் வசிக்கும் பகுதிகளிலோ எந்தக் காரணத்தை முன்னிட்டும் அரிய வகைத் தனிமங்கள் எடுக்கப்பட மாட்டாது!. காலியாக உள்ள இடத்தில் அந்தந்த இடத்தின் உரிமையாளர்களின் விருப்பம் மற்றும் சம்மதத்தின் அடிப்படையில் மட்டுமே அரிய வகைக் கனிமங்கள் எடுக்கப்படும்! எக்காரணத்தை கொண்டும் குடியிருப்பு பகுதிகளில் இருப்பவர்கள் இடமாற்றம் செய்யப்பட மாட்டார்கள் என்றும் கூறினார்!. நில உரிமையாளர்களின் விருப்பத்தின் அடிப்படையில் சம்மதம் தெரிவிக்கும் நில உரிமையாளருடன் குறுகிய கால ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு அரியவகை கனிமங்கள் எடுக்கப்பட்ட பிறகு அந்த இடத்தில் கனிமங்கள் நீக்கிய மணலால் அந்த வெற்றிடத்தை நிரப்பி உரிய குத்தகைத் தொகையுடன் மீண்டும் அந்த இடத்திற்குத் தொடர்புடைய

No comments:

Post a Comment

அழகுமுத்துகோன்

  பிரிட்டிஷ் ஆட்சியின் எதிரான இந்திய விடுதலைப் போராட்ட தளபதி நெல்லை சீமையின் #அழகுமுத்துகோன் பிறந்தநாள் இன்று.