உரிமையாளர்களிடமே ஒப்படைக்கப்படும்!நில உரிமையில் எந்த மாற்றமும் இருக்காது! இதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரமும் பொருளாதாரமும் மேம்படும். அனுமதிக்கப்பட்ட 1144 ஹெக்டேரில் வரும் கடற்கரையில் அரிய மணல் எடுக்கும் முறையானது மற்ற கனிமங்களான நிலக்கரி சுண்ணாம்புக்கல் இரும்பு தாது எடுக்கும் முறைகளான துளையிட்டு அதன் பிறகு வெடி மருந்து மூலம் வெடிக்க செய்தோ எடுப்பது போல் அல்லாமல் எளிய முறையில் வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம் தோண்டுவது போல பொக்லைன் இயந்திரங்களை மட்டுமே பயன்படுத்தி எடுப்பதால் சுற்றுச்சூழலுக்கோ சுற்றுப்புறப் பகுதிகளுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது.கதிர்வீச்சு உண்டாக்கக்கூடிய கனிமம் எடுக்கப்பட்டு அந்த இடத்தில் அரிய வகை கனிமங்கள் நீக்கிய மணல் இட்டு நிரப்பப்படுகிறது! இதன் மூலம் கனிமம் எடுக்கப்பட்ட மணலில் ஏற்கனவே இயற்கையாக இருந்த கதிர்வீச்சின் அளவு எட்டு முதல் 10 மடங்கு வரை குறைக்கப்படுகிறது! இதனால் சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் ஆரோக்கியம் மேம்படுகிறது! மணல் எடுக்கப்பட்ட பகுதி மீண்டும் முழுவதுமாக நிரப்பப்படுவதால் அந்த இடம் எல்லா விதத்திலும் பயன்பாட்டுக்கு குறிப்பாக தென்னை உள்ளிட்ட மரக்கன்றுகளை வளர்ப்பதற்கும் கட்டடங்கள் கட்டுவதற்கும் உகந்ததாக அமையும்! எனவே உண்மை நிலை அறியாமல் சிலர் தவறான கருத்துக்களை கூறும்போது மக்கள் அதை நம்ப வேண்டாம் என்றார்.
இன்றைய நவீன இந்தியாவின் வளர்ச்சி பாதைக்கு அணுசக்தி ஆற்றல் மிகவும் முக்கியமாக வேண்டி இருப்பதால் இந்த திட்டத்தின் எதிர்காலப் பலனை மனம் கொண்டு இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்பதாகத்தான் நிலைமை இருக்கிறது. மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கும் பாதுகாப்பு தரும் வகையில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும் எனில் மகிழ்ச்சி தான். மத்திய அரசுக்கு ஒரு முகம் மக்களுக்கு ஒரு முகம் என்று காட்டும் தமிழக அரசுகளின் ஸ்திரத்தன்மை இப்படித்தான் இருக்கிறது. ஐந்தாண்டு ஒரு முறை ஆட்சி மாறும்போது இவர்கள் அப்போதைக்கு ஒரு நிலை எடுப்பார்கள் ஆனால் உண்மையிலேயே இந்த திட்டம் எதிர்காலத்துக்கு எவ்வளவு பயனுள்ளது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். மக்களிடம் சரியான முறையில் இதை எடுத்துரைத்து அவர்களின் ஒப்புதலுடன் தான் தான் அதைச் செய்ய வேண்டும்! எதிர்வினைகள்: இந்த திட்டம் 1144 ஹெக்டேரில் அதாவது 2,827 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது! இதனால் மாவட்டத்தில் குறும்பனை முதல் நீரோடி வரையிலான எட்டு வருவாய் கிராமங்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகும்!இது தொடர்பான மக்கள் இயக்கத்தினர் 2024 ஆம் ஆண்டு போராட்டம் நடத்திய போது கடந்த ஆண்டு மார்ச் மாதம் அப்போதைய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் எங்களை அழைத்துப் பேசி இந்தத் திட்டம் செயல்படுத்தப்படபடாது என்று உறுதி அளித்தார்! அவ்வாறு அப்போது மூடப்பட்ட பிரச்சினையை தற்போதைய தமிழக அரசு மீண்டும் கையில் எடுத்துள்ளது கடலோர மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையிலான இந்தத் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கக்கூடாது என்பது தான் எங்களது நிலைப்பாடு என்றார்! இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2024 ஆம் ஆண்டு நாங்கள் போராடிய போது தற்போது ஆளுங்கட்சியான தவெ க சார்பில் எங்களுக்கு ஆதரவாக வந்து களத்தில் இறங்கிப் போராடினார்கள். அதேபோல் 2024 ஆம் ஆண்டு செயற்குழு கூட்டத்திலும் இத்திட்டத்தில் எதிர்ப்புத் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!கடல் அரிப்பை ஏற்படுத்தும் இந்தத்திட்டத்தை ஒருபோதும் ஏற்க மாட்டோம்! என்று கூறினார்கள். ஆனால் அவர்களே ஆளுங்கட்சியாக வந்தவுடன் தற்போது அந்த நிலைப்பாட்டை மாற்றியுள்ளனர். இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் போது கடலில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்கு மணலை அள்ளுவார்கள் இதனால் கடல் அரிப்பு பிரச்சனை பெரிதாகும் நிலத்தடி நீர் உப்பாக மாறும்! இதனால் விவசாயம் பாதிக்கப்படும்! மேலும் மணலில் இருந்து தாதுக்களைப் பிரித்து எடுக்கும் போது உண்டாகும் கதிர்வீச்சால் சுவாசப் பிரச்சனை தோல் நோய் புற்றுநோய் பாதிப்பு சிறுநீரக பாதிப்பு ஆஸ்துமா கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்!
Subscribe to:
Post Comments (Atom)
அழகுமுத்துகோன்
பிரிட்டிஷ் ஆட்சியின் எதிரான இந்திய விடுதலைப் போராட்ட தளபதி நெல்லை சீமையின் #அழகுமுத்துகோன் பிறந்தநாள் இன்று.
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment