Tuesday, July 14, 2026

பாசனத்திற்கான தண்ணீரை எடுப்பதற்கு மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது!

 தமிழ்நாட்டின் மொத்தப் பாசனப் பரப்பில் ஐம்பத்து ஐந்து சதவீத நிலங்களுக்கு எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் பாசன நீரானது தமிழகத்தில் ஓடும் ஆறுகள் வழியே கிடைத்துவிடுகிறது! மீதமுள்ள 45 சதவீத நிலங்களுக்குக் கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து பாசனத்திற்கான தண்ணீரை எடுப்பதற்கு மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது!

இதனால் 45 சதவிகித விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவு கூடுதலாகிறது என்பதைக் கருத்தில் கொண்டு இலவச மின்சாரத் திட்டம் அமல்படுத்தப்பட்டது! அதன்படி தமிழ்நாட்டில் கட்டணமில்லா வேளாண் உரிமை மின்சார திட்டத்தின் கீழ் 23 56 000 மின் இணைப்புகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன! தவிர 4 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் சாதாரணத் திட்டம் முதல் கட்டணத் திட்டம் வரை முன்பதிவு செய்து இது நாள் வரை காத்திருக்கின்றனர். இந்தச் சூழலில் தமிழக அரசால் 2025 26 ஆம் ஆண்டுக்கு விவசாயிகளுக்கு விரைந்து மின் இணைப்பு வழங்கும் வகையில் தத்கால் திட்டத்தில் விண்ணப்பங்கள் கோரப்பட்டன! 2025-ல் டிசம்பரில் அந்த அறிவிப்பு வெளியானவுடன் 47,554 விவசாயிகள் இம்முறையைப் பின்பற்றி விண்ணப்பித்தனர்! 5 குதிரை திறன் வரை ரூபாய் 2.30 லட்சம் எனவும் 5 முதல் 7.5 குதிரைத் திறன் வரை 2.75 லட்சம் எனவும்7.5 லட்சம் முதல் 10 குதிரைத் திறன் வரை மூன்று லட்சம் எனவும் 10 முதல் 15 குதிரைத் திறன் வரை ரூபாய் 4 லட்சம் விகிதம் மின்வரியத்திற்கு முன்கூட்டியே விவசாயிகள் கட்டணங்களைச் செலுத்தியுள்ளார்கள். மின் இணைப்புக்காக வட்டிக்கு பணம் வாங்கி இருப்பதோடு விளைபொருட்களுக்குப் போதிய விலை இல்லாமை, சாகுபடிச் செலவு உயர்வு, கூலி ஆள் பற்றாக்குறை, எனப் பல்வேறு இடர்பாடுகளால் விவசாயிகள் வேளாண்மையைக் கைவிட்டு வரும் நிலையில் மின் இணைப்புக்கு காத்திருப்பது விவசாயிகளைப் பெரிதும் வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது! வங்கிகளில் ஏற்கனவே வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவிக்கும் நிலையில் மின் இணைப்புக்காக வட்டிக்குப் பணம் வாங்கி மின்வாரியத்துக்குச் செலுத்திவிட்டு இணைப்புக் கிடைக்காமல் பெரிதும் அவர்கள் அவதிப்படுகின்றனர். ஏற்கனவே 2023 ஆம் ஆண்டில் 12,556 விவசாயிகள் சுமார் ரூ 250 கோடி பணம் செலுத்தி விட்டு தத்கால் திட்டத்தில் காத்திருக்கும் நிலையில் கூடுதலாக மின்வாரியம் விண்ணப்பங்களைப் பெற்று விவசாயிகளிடம் இருந்து தலா 2.5 லட்சம் முதல் 4 லட்சம் வரை மொத்தமாக ரூ1250 கோடியை கட்டணமாக வசூலித்துக் கொண்டு மின் இணைப்புகளை வழங்க இது நாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது விவசாயிகளைப் பெரிதும் அதிருப்திக்கு உள்ளாக்கி இருக்கிறது! இது குறித்து மின்வாரியம் எந்த பதிலும் அளிக்காமல் விவசாயிகளை அலைக்கழித்தும் வருவது இன்னும் கொடுமை! வீடுகளுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் 90 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்கும் தமிழ்நாடு மின்வாரியம் விவசாயிகளுக்கு மட்டும் மின் இணைப்பிற்கு இன்னும் அரசிடம் இருந்து அனுமதி வரவில்லை என்று சொல்லி ஏன் விவசாயிகளைக் காத்திருக்க வைக்கிறது!? தத்கால் திட்டத்தில் 15 நாள் முதல் 90 நாட்களுக்குள் இணைப்பு முறையாக வழங்கப்பட வேண்டும்!ஆனால் 2023 ஆம் ஆண்டே கட்டணம் செலுத்தியவர்களுக்கும் மூன்றாண்டுகளுக்கு மேலாக இணைப்பு வழங்காமல் நிலுவையில் வைத்திருக்கின்றன இந்த அரசாங்கங்கள். 2025 26 ஆம் ஆண்டில் கட்டணம் செலுத்தியவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு மேலாகியும் இணைப்புக் கிடைக்கவில்லை! இது தொடர்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் வேளாண் உரிமை மின்சாரப் பாதுகாப்புச் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் அ பரமசிவம் கூறும்போது “ விவசாயிகளின் வயல்களின் வழியே மின்கம்பங்கள் மற்றும் உயர்மின் கோபுரங்கள் அமைத்து மின்சாரம் கொண்டு செல்லப்பட்டு வீடுகளுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் மின் இணைப்பு தாராளமாக வழங்கப்பட்டு வருகிறது! அந்த வகையில் விவசாயிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் தமிழ்நாடு மின்வாரியம் யாருக்கும் மின் இணைப்பு வழங்க முடியாது! விவசாயிகளிடம் எந்தவித அனுமதியும் பெறாமல் மின்கம்பங்களை விவசாய நிலத்தில் நடுவதால் விவசாய நிலங்களின் சந்தை மதிப்பும் குறைகிறது! தமிழ்நாடு அரசிடம் இருந்து எவ்வித கட்டணமும் வாடகையும் பெறாமல் விவசாய நிலங்களில் கம்பங்களை கொண்டு செல்ல விவசாயிகள் பொது மின் வினியோகம் குறித்த அறிவினாலேயே அனுமதிக்கின்றனர்! ஆனால் விவசாயிகள் முன்னதாகக் கட்டிய கட்டணத்தை மட்டும் வசூலித்துக் கொண்டு மின் இணைப்பு வழங்க மின்வாரியம் தாமதம் செய்வது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல! அது மட்டுமல்ல! இணைப்புப் பெறுவதற்காக மின் கம்பங்கள் பம்பு செட்டுகள் மற்றும் இதரத் தளவாடப் பொருட்களுக்கும் பணத்தைச் செலவிட்டுத் தயார் நிலையில் வைத்திருந்தும் ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது! எனவே…

No comments:

Post a Comment

அழகுமுத்துகோன்

  பிரிட்டிஷ் ஆட்சியின் எதிரான இந்திய விடுதலைப் போராட்ட தளபதி நெல்லை சீமையின் #அழகுமுத்துகோன் பிறந்தநாள் இன்று.