Tuesday, July 14, 2026

அரசு வழக்கறிஞர்கள் தேர்வில் இத்தனை குளறுபடிகள்


அரசு வழக்கறிஞர்கள் தேர்வில் இத்தனை குளறுபடிகள்” லஞ்ச லாவண்யங்கள்பெருகியிருப்பதை வெளியிலிருந்து ஒருவர் சுட்டிக்காட்டவில்லை! அனைத்தும் உள்ளுக்குள்ளேயே நடக்கிறது. அடிதடிகள் கட்ட பஞ்சாயத்துகள் பதவிப் போட்டிகள்! ஒரு காலத்தில் அரசு வழக்கறிஞர்கள் நீதியின் பாற்பட்டு எத்தனையோ நிரபராதிகளை எளிய மக்களை விடுவித்து இருக்கிறார்கள். பல வழக்குகளில் கறாராக இருந்து எந்தப் பலனும் எதிர்பாராமல் குற்றவாளிகளுக்குத் தண்டனைகளையும் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். இக்காலத்தில் அரசு வழக்கறிஞர்களுக்கான பேரம் இவ்வளவு மோசமாக நடப்பது எவ்வளவு வெட்கக்கேடானது! மக்களுக்கு நீதியின் மேல் அது எப்படி நம்பிக்கையை உருவாக்கும்! ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்!

No comments:

Post a Comment

அழகுமுத்துகோன்

  பிரிட்டிஷ் ஆட்சியின் எதிரான இந்திய விடுதலைப் போராட்ட தளபதி நெல்லை சீமையின் #அழகுமுத்துகோன் பிறந்தநாள் இன்று.