சமூக வலைத்தளங்களில் சமீபமான ஒரு சர்ச்சை என்னவெனில் தவெ க ஆட்சிக்கு வந்தபின் ஆவின் தலைவர் அரசு வழக்கறிஞர் உட்பட பல்வேறு நியமனங்களில் அக்கட்சி நிர்வாகிகள் வசூல் வேட்டையில் இறங்கியிருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன! குறிப்பாக அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூபாய் 30 லட்சம் வரை லஞ்சம் பெறப்படுவதாக த வெ க நிர்வாகிகளே சிலர் பொதுவெளியில் குற்றம் சாட்டுகிறார்கள்.
இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கட்சிகள் தரப்பிலும் வலியுறுத்தல்கள் இருக்கின்றன.!அதே நேரம் அரசு வழக்கறிஞர் நியமனங்கள் 100% நேர்மையாக நடைபெற்று வருவதாக சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் நேற்று விளக்கமளித்தார்!? இந்நிலையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி. சம்பத்குமார் பெயரில் ஒரு வழக்கறிஞரை கோவை சிறப்பு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் பதவிக்கு பரிந்துரைக்கும் கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது! இதனால் அரசு வழக்கறிஞர் நியமனங்கள் அரசியல் பரிந்துரைகள் மூலம் நடக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது!?இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியும் உள்ளது!இதேபோல் காங்கிரஸ் கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரும் பரிந்துரைக் கடிதம் கொடுத்துள்ள விவரமும் தற்போது வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது மாதிரியான விவகாரங்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காக திறன் மற்றும் நேர்மை அடிப்படையில் அரசு வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும் என்றும் யார் ஒருவரின் பரிந்துரைகளும் இதில் தலையிடக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார்கள். மேலூர் அருகே கீரனூர் கிராமத்தில் பஞ்சமி நிலம் ஆக்கிரமிப்பைத் தட்டிக்கேட்டதற்காக முத்துராஜா என்பவரைத் தாக்கியதாக சின்னத்துரை மகாராஜன் உள்ளிட்ட இருவரை மேலூர் போலீசார் கைது செய்தனர்! இந்த வழக்கில் இருவரின் ஜாமீன் மனுவை மதுரை வன்கொடுமைத் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது! அது நியாயமான ஒன்று தாழ்த்தப்பட்டோருக்கான பஞ்சமி நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து கொண்டு அவர்களை மேலும் தாக்குவது சட்டப்படி மிகப்பெரிய குற்றம்! ஆனால் இந்த வழக்கை ரத்து செய்ய கோரி குற்றவாளிகள் இருவரும் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர்! இதனை விசாரித்த நீதிபதி பி புகழேந்தி பிறப்பித்த உத்தரவு என்னவெனில் “மனுதாரர்களின் மேல்முறையீடு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தபோது மனுதாரருக்கு விசாரணை நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளதானது நீதித்துறை ஒழுங்குமுறைகள் தொடர்பான சிக்கலையும் எழுப்பி உள்ளது!. ஜாமீன் விவகாரங்களில் உயர்நீதி மன்றம் மற்றும் அமர்வு நீதிமன்றம் ஆகிய இரண்டும் ஒரே மாதிரியான அதிகாரம் வரம்பைக் கொண்டுள்ளதால் உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்பு குறித்த கேள்வி இங்கு எழவில்லை! அதே நேரத்தில் ஜாமீன் மறுக்கப்பட்டதை எதிர்த்து குற்றவியல் மேல்முறையீடுகளை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்ற நிலையில் அதே நபர்கள் தாக்கல் செய்த புதிய ஜாமீன் மனுக்களை அமர்வு நீதிமன்றம் பரிசீலித்தது சிக்கலானது ஆகும்!ஒரு விவகாரம் உயர்நீதிமன்றத்தில் பரிசீலனையில் இருக்கும் போது அதே விஷயத்தை விசாரணை நீதிமன்றம் பரிசீலிப்பதைத் தவிர்க்க வேண்டும்!இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரிய போது ஏற்கனவே ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது! எதிர்த்தரப்பு மனுக்கள் உயர்நீதிமன்ற விசாரணையில் இருந்ததை மனுதாரர் தரப்பு வழக்கறிஞரோ அல்லது அரசு தரப்பு வழக்கறிஞரோ விசாரணை நீதிமன்றத்தில் தெரிவிக்கவில்லை! வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தின் அலுவலர் ஆவார்கள்! முக்கிய உண்மைகளை மறைக்காமல் நீதிமன்றத்தில் அவர்கள் தெரிவிக்க வேண்டும்.”என்று சொன்னதோடு அரசு வழக்கறிஞர் விசாரணை அமைப்புக்கும் நீதிமன்றத்திற்கும் இடையிலான ஒரு முக்கிய இணைப்பாகச் செயல்படுகிறார்!. வழக்குகளில் நீதிமன்றத்திற்கு திறம்பட உதவிகள் வழங்கப்படாவிட்டால் நீதி நிர்வாகமே பலவீனமடைகிறது என்பதைக் கருத்தில் கொண்டு திறமையான அரசு வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும்! அதன்படி தகுதியின் அடிப்படையில் நியமனங்கள் மேற்கொள்ளப்படுவதையும் நீதிமன்றத்திற்கு திறம்பட உதவக்கூடிய வழக்கறிஞர் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்படுவதையும் வரும் காலத்தில் உறுதி செய்யப்பட வேண்டும். இது வெறும் காகித அளவில் சம்பிரதாயங்களாக மட்டும் இருக்கக்கூடாது! அரசு வழக்கறிஞர்கள் நியமனங்கள் திறன் நேர்மை அடிப்படையில் நடைபெற வேண்டும்!பரிந்துரைகள் அல்லது புறக்காரணிகள் அடிப்படையில் நடைபெறக் கூடாது! அப்படி நடந்தால் மட்டுமே குற்றவியல் நீதி அமைப்பின் மீது பொதுமக்களின் நம்பிக்கையைத் தக்க வைக்க முடியும்! மனுதாரர்கள் ஏற்கனவே ஜாமீன் பெற்றுள்ளதால் இந்த மனு மீது எந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டியதில்லை என்று நீதிபதி தனது உத்தரவில் கூறினார்.
No comments:
Post a Comment