தத்கால்திட்டத்தில் காத்திருக்கும் விவசாயிகளுக்கு விரைந்து மின் இணைப்பு வழங்குவதோடு இதரத் திட்டங்களிலும் மின் இணைப்புக்கெனக் காத்திருக்கும் விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும்” என்று சொல்கிறார்!
தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி கூறுகையில் “உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு தலைமையில் 24 ஆண்டு காலக் கடுமையான போராட்டத்திலும் 63 விவசாயிகள் வீர மரணமும் அடைந்த துயரமான நிலையில்தான் கட்டணமில்லா மின் இணைப்புத் திட்டத்தைப் பெற்றோம்!. இவ்வாறு பெறப்பட்ட மின்சாரத்தை இலவச மின்சாரம் எனப் பெயரிட்டு விவசாயிகளைக் கொச்சைப்படுத்தி வருவதை இனியும் ஏற்க முடியாது! இலவச மின்சாரத் திட்டம் என்பதற்குப் பதிலாக வேளாண் உரிமை மின்சாரத் திட்டம் என மாற்ற வேண்டும் என நீண்ட காலமாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்து வந்திருக்கிறது! தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள முதல்வர் ஜோசப்விஜய் இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்! மின் இணைப்புகளைத் தாமதப்படுத்தாமல் அவசர கால நடவடிக்கையாக மேற்கொண்டு அதில் அவரே நேரடியாகத்தலையிட்டும் ஆவண செய்ய வேண்டும்” என்று கூறுகிறார்.. இந்த நெடிய போராட்டத்தில் வாழ்நாள் முழுக்க ஈடுபட்டு அதற்காகவே தன் இன்னுயிரையும் ஈந்த நாராயணசாமி நாயுடு அவர்களோடு அந்தப் போராட்டங்களில் பலமுறை பங்கு பெற்றிருந்தேன். அதற்காகவே அவருடன் சிறைக்குச் சென்றவன் என்கிற முறையில் தமிழக விவசாயிகளுக்கான இந்த உரிமைப் போராட்டத்தின் பயணம் இன்னும் முடிவுக்கு வராமல் தாமதமாகிக் கொண்டிருப்பது என்னைப் பொறுத்தவரையில் ஆளும் அரசுகளின் அலட்சியத்தையும் பிற்போக்குத்தனத்தையுமே காட்டுகிறது என்பேன். விவசாயிகளைப் பற்றி அக்கறை காட்டாத எந்த ஒரு அரசாங்கமும் எந்த ஒரு நாட்டிலும் நிலை பெற்றதாகச் சரித்திரம் இல்லை! தமிழகமெங்கும் விவசாயிகளுடைய விளை பொருட்கள் மக்களின் நேரடிப் பயன்பாட்டிற்கு எவ்வளவு உதவிகரமாகவும் அன்றாடத்தை அவர்கள் தீர்மானித்துக் கொள்வதில் முக்கியமான ஒன்றாகவும் கருதப்படுகிற நேரத்தில் விவசாய உற்பத்திகளுக்கான மின்சாரத்தை வழங்க இன்னும் எத்தனை போராட்டங்களைத் தான் நமது விவசாயிகள் சந்திக்க வேண்டி இருக்கிறது என்பதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. எதோ தானாகவே மக்களும் விவசாயிகளும் சந்தையில் சந்தித்துக் கொள்கிறார்கள் என்று நினைக்கிறார்கள் போல! ஆனால் அதன் பின்னணியில் உள்ள நீண்ட உழைப்பு, விளை பொருள்களுக்கு ஏற்ற விலை உத்தரவாதம் அற்ற நிலை, ஆட்கள் பற்றாக்குறை இவற்றால் ஏராளமான நிலங்கள் இன்று விவசாயம் அற்றுத் தரிசாகக் கிடப்பதைக் கூட யாரும் யோசித்துப் பார்ப்பதில்லை.! கிராமத்தில் பிறந்தவன்! கிராமத்தைச் சுற்றி வருகிறவன் என்கிற பெயரில் எனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிலை நீடித்தால் நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளுக்குக் கூட வெளிநாடுகளை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய நிலை வரலாம்! விழித்துக் கொள்ளுமா அரசு!!??
No comments:
Post a Comment