Tuesday, July 14, 2026

இந்தோனேசியா நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ள, நமது மரியாதைக்குரிய பாரதப் பிரதமர்

 இந்தோனேசியா நாட்டிற்கு 06.07.2026 அன்று பயணம் மேற்கொண்டுள்ள, நமது மரியாதைக்குரிய பாரதப் பிரதமர் அவர்கள், இந்தோனேசிய நாடளுமன்றத்தில் உரையாற்றிய கருத்துக்கள்;

•இந்தியா வளர்ச்சிப்பாதையை பின்பற்றும் நாடு, மற்ற நாடுகளின் எல்லைகளை ஆக்கிரமிக்கும் நாடல்ல என்றார். •இந்திய பசிப்பிக் பிராந்தியத்தில் சீனாவின் எல்லை விரிவாக்கம் மற்றும் இராணுவ ஆதிக்க நடவடிக்கைகளால், தென்கிழக்கு ஆசிய நாடுகளிடையே கவலை அதிகரித்து வருவதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். •140 கோடி இந்திய மக்களும், 29 கோடி இந்தோனேசிய மக்களும் செழிப்புக்காக ஒன்றிணைந்து பயணிக்கும்போது ஒரு வரலாற்று நிகழ்வை இந்த உலகம் காணும் என்று உறுதி கூறியுள்ளார். •இந்தோ பசிபிக் பிரந்தியமானது சுதந்திரமானதாகவும், வெளிப்படையானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டுமென்பதை இந்திய வலுவாக ஆதரிப்பதாக கூறியுள்ளார். •இந்த பிராந்தியத்தில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்து உறுதிப்படுத்த வேண்டும் என்றார். •1950 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவும், இந்தோனேசியாவும் நட்பு நாடுகளாக இருந்து வருகின்றன. •1955 ஆம் ஆண்டில், உலக அமைதி மற்றும் புதிதாக சுதந்திரம் பெற்ற நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை மேம்படுத்த பிரபல பாண்டுங் மாநாட்டில் இருநாடுகளும் முக்கியப் பங்காற்றின. •இந்தியா மற்றும் இந்தோனேசியாவைப் பொருத்தவரை, கடல் என்பது ஒருபோதும் தூரத்தைக் குறிப்பதாக இருந்ததில்லை; மாறாக, இரு நாடுகளுக்கும் இடையேயான ஒரு பாலமாகவே எப்போதும் இருந்துவருகிறது. இரு நாடுகளின் பகிரப்பட்ட எதிர்காலத்துக்கான மையமாகவும் அது திகழ்கிறது. •இரு நாடுகளும் ஒன்றிணைந்து நிற்கும்போது, ஜனநாயகம் வாய்புக்களை உருவாக்கும், எதிர்காலத்தை வடிவமைக்கும் என்ற உலகின் நம்பிக்கை மேலும் வலுப்படும். •1955ம் ஆம் ஆண்டு நடைப்பெற்ற பாண்டுங் மாநாடு மூலம் “சொந்த முடிவுகளை எடுக்க, சுதந்திர நாடுகளுக்கு உரிமையுள்ளது” என்ற செய்தியை அப்போதைய இந்திய பிரதமர் திரு. ஜவஹர்லால் நேரு இந்தோனேசியா அதிபர் சுகார்னோ ஆகியோர் உலகிற்கு தெளிவாக எடுத்துரைத்தவர்கள். அவர்களை பாராட்டுகிறேன் என்றார் பிரதமர். •இருநாடுகளும் பகிர்ந்துகொள்ளும் நல்லெண்ணம் மற்றும் நம்பிக்கை ஆகியவை இரு நாடுகளின் குடிமக்களுக்கு புதிய வாய்புகளை உருவாக்க வேண்டும். •இணைய அச்சுறுத்தல்கள், பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல், தீவிரவாதம் ஆகியவற்றை எதிர்கொள்வதில் இந்தியாவும் இந்தோனேசியாவும் வலுவாக உள்ளன. •யூனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தலமாக அறிவிக்கப்பட்ட இந்தோனேசியாவில் உள்ள யோகிய கார்டா நகரிலுள்ள பிரம்பானன் கோவில் வளாகத்தை புதிபிக்கவும், பாதுகாக்கவும் இந்தியா உதவ உள்ளது. •சுமார் 29 கோடி மக்கள் தொகையுடன் உலகின் 3வது பெரிய நாடாக விளங்கிவரும் இந்தோனேசியா, தேர்தல் மேலாண்மை மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொள்முதல் செய்ய இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இந்தோனேசியா மேற்கொண்டுள்ளது. •உலக முழுவதும் உள்ள ஜனநாயக நாடுகளில் நம்பகமான தேர்தல் நிபுணத்துவத்தை தேடும்பொழுது, இந்தியாவே அவர்களின் முதல் தேர்வாக உள்ளது. •ரூபாய் 5,692 கோடி மதிப்பீட்டில் இந்தியாவின் பிரோமோஸ், அஸ்தீரா ஏவுகணைகளை இந்தோனேசியா கொள்முதல் செய்யவுள்ளது. •இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தின் சிங்கசெரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில், இந்தியாவின் உயர் மேலாண்மை கல்வி நிறுவனமான பெங்களூரு ஐஐஎம் வளாகம் அமைக்கப்பட உள்ளது. • சுகாதாரத்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள உடன்பாட்டின்படி, இந்தியாவின் உயர்தரமான மருந்துகள், இந்தோனேசிய மக்களுக்கு குறைந்த விலையில் கிடைப்பதற்கான வாய்பு இருக்கிறது. • இந்தோனேசிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த பிற ஊழியர்களுக்கு, திறன் மேம்பாட்டு பயிற்சியும் இந்தியா அளிக்க இருக்கிறது. •பாரதப்பிரதமர் மோடி அவர்களுக்கு இந்தோனேசியா நாட்டின் உயரிய இந்தோனேசிய குடியரசின் “சின் பின்டாங் ஆதி பூர்ணா” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.



No comments:

Post a Comment

அழகுமுத்துகோன்

  பிரிட்டிஷ் ஆட்சியின் எதிரான இந்திய விடுதலைப் போராட்ட தளபதி நெல்லை சீமையின் #அழகுமுத்துகோன் பிறந்தநாள் இன்று.