Monday, February 17, 2020

1965மொழிப்போரும்_வினோபாவும். #விருதுநகர்_பெ_சீனிவாசன்

#1965மொழிப்போரும்_வினோபாவும்.
 #விருதுநகர்_பெ_சீனிவாசன்
____________________________________

தமிழக மொழிப்போராட்டத்தை ஒட்டி பூமிதான தலைவர் வினோபா உண்ணாநோன்பை முடித்துக்கொண்டு இன்றோடு ஐம்பது ஆண்டுகள் நிறைவாகின்றன.

தமிழகத்தில் 1965ல் மாணவர்கள் இந்தி திணிப்பை எதிர்த்துப் போராடிய போராட்டம் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது. பிரதமராக இருந்த லால்பகதூர் சாஸ்திரியையும், தமிழக காங்கிரஸ் ஆட்சியையும் நிலைகுலையச் செய்தது. 

தமிழக மொழிப்போராட்டம் தீவிரமடைந்த போது மத்திய அமைச்சர்களான சி.சுப்பிரமணியமும், ஓ.வி.அழகேசனும் பதவி விலகினார்கள். இந்திஎதிர்ப்பு போராட்டத்தில் மாணவர்கள் சுடப்பட்டதும், நூற்றுக்கணக்கில் உயிர் இழந்த சம்பவங்களையொட்டி ஆச்சார்ய வினோபா தன்னுடைய உண்ணாநோன்பை 17-02-1965ல் நிறுத்திக் கொண்டார். அப்போது ஆந்திராவின் நெல்லூரிலும் மொழிப்போர் பிரச்சனையால் பதற்றமான நிலை ஏற்பட்டது.




மறைந்த, தமிழக சட்டப்பேரவையின் துணைத் தலைவர், மாணவர் தலைவராக இந்திஎதிர்ப்பு போராட்டத்தை நடத்திய பெ.சீனிவாசன் ஒரு சமயம் என்னிடம் குறிப்பிட்டது, “என்னை காவல்துறையினர் தேடிக்கொண்டிருந்தார்கள். நான் அகில இந்திய அளவில் இந்தப்போராட்ட்த்தை எடுத்துச் செல்ல ஆந்திரா வழியாக கல்கத்தா செல்ல திட்டமிட்டிருந்தேன்.  

திருப்பதி  வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த பொழுது வினோபா உண்ணாவிரதமும், இந்த போராட்டம் இந்தியா முழுவதும் பரவிவிடும் ஐயம் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரிக்கு ஏற்பட்டது என்ற செய்தி எனக்குக் கிடைத்தது. தமிழகத்தில் மாணவர் போராட்டம் நிறுத்தப்பட்டது. எனக்கு அதில்  உடன்பாடு இல்லை“ என்றும் சொன்னார். 

அண்ணன் பெ.சீனிவாசனிடம் முழுமையாக உங்களைப் பற்றி ஒருநூல் எழுதுங்கள் என்று பலதடவை சொன்னபோதும் “நான் தராசு வார இதழில் தொடர் எழுதி உள்ளேன். அதனை நூலாக கொண்டுவரலாம்” என்றுதான் பதில் சொன்னார். 

அவர் மாணவராக இருந்தபோது கொண்ட போர்குணம், இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அவர் பங்களிப்பு என அவர்குறித்த முழுமையான ஒரு நூல் வெளிவரவேண்டும் என்பது என்னுடைய விருப்பம். 

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் வினோபா ஆற்றியப் பங்கையும், சரியாக 50ஆண்டுகள் மேல கடந்த நினைவுகளையும் இன்றைய தினத்தில் மனதில் கொள்ளவேண்டும். .

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
17-2-2020.
#ksrpost


#தமிழக பிரச்சினைகளை_முழுமையாகப்_ #புரிந்து_கொள்ளுங்கள்..



————————————————
#தமிழகத்தில் அரசியல் ரீதியாகவும், சமூகரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் சொல்வதற்கு எவ்வளவோ செய்திகள் இருக்கின்றன.  எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன.
இவற்றை எந்த அளவில் நாம் புரிந்து வைத்திருக்கிறோம் அல்லது புரிந்து கொள்ள முயற்சித்திருக்கிறோம்? அவற்றைப் பற்றிய நம்முடைய பார்வை என்னவாக இருக்கிறது? 

உதாரணமாக-தமிழகத்தில் காவேரிப் பிரச்சினை மிக முக்கியமானதொரு பிரச்சினைதான். முல்லைப் பெரியாறும் தமிழகத்தின்வாழ்வாதாரப்பிரச்சினை
தான். ஆனால் இந்தப் பிரச்சினைகள் மட்டுமே நம்மிடம் தொடர்ந்து சிக்கலாக இருப்பதாக  சிலர் பேசுகிறார்கள்.
தமிழக நதிநீர்ச் சிக்கலில் குமரி மாவட்ட நெய்யாறு, நெல்லை மாவட்டம் அடைவிநையாறு, செண்பகத்தோப்பு, விருதுநகர் மாவட்டம் அழகர் அணை, திண்டுக்கல் மாவட்டம் குடகனாறு, மஞ்சளாறு, கொங்கு மண்டலத்தின் ஆழியாறு பரம்பிக்குளம், பாண்டியாறு புன்னம்புழா,  சிறுவாணி,  பம்பாறு, அமராவதி, தென்பெண்ணையாறு, பாலாறு, பொன்னையாறு என பல நதி நீர்ப் பிரச்சினைகள் எண்ணிக்கையில் 50க்கும் மேல் உள்ளன.பலவேற்காடு ஏரி என உள்ளன.
அதற்கு நாம் அதற்க்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. இருப்பினும் காவேரியை காவிரிஎன்றுஎழுதுவதும்,மேகதாட்டை
(ஆடுதாண்டி)  மேகதாது   என்று குறிப்பிடுவதும்,   புரிதல்   இல்லாத தன்மையாகும்.

அதேபோல ராஜீவ்காந்திபடுகொலையில் அப்பாவிகள் ஏழு பேர்  சிறையில்  வாடுகின்றனர். பேரறிவாளனின் தியாகம் ஒப்பற்றது மறுக்கவில்லை. அது ஒற்றைப் பிரச்சினை அல்ல.அதே  வழக்கில்  மதுரை மத்திய சிறையில்  இருக்கும் ரவிச்சந்திரன், வேலூரில் சிறையில் இருக்கும் நளினி, முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் போன்றவர்களின் பெயரை பலர் உச்சரிப்பதே இல்லை என்பது கவலைக்குரிய செய்தியாகும். 
இப்படி  பல தமிழக சிக்கலகள்......
ஒவ்வொரு பிரச்சினையிலும் தெளிவான பார்வையும்  அணுகுமுறையும் தமிழகத்தில்  பலரிடம்  பல்வேறு பிரச்சினைகளில்  இல்லாமல் இருப்பது ஆரோக்கியமான    அணுகுமுறை கிடையாது. 

இதற்குக் காரணம் என்னவென்றால் வாசிப்பும், புரிதலும் இல்லாமல் இருப்பதே. 

இதேமாதிரி தான்    தொல்லியல் ஆய்விலும் நடக்கிறது. அண்மையில் தொல்லியல் அபூர்வமாக உணரப்பட்டு, பொது வெளிக்கு அறிமுகமாகி பெரிதும் பிரபலமாகிவிட்ட கீழடி ஆய்வு  பெற்ற ஊடக மற்றும்  அதிகார   மையங்கள் சார்ந்த  வெளிச்சத்தை வெறெந்த அகழாய்வுகளும் பெறவில்லை. அதற்காக கீழடி ஆய்வை நாம் எந்த விதத்திலும் குறைத்து மதிப்பிடவில்லை.
இதேமாதிரி தொல்லியல் ஆய்வில் முன்பு வெளியே தெரியவந்த ஆதிச்ச நல்லூர், அரிக்கமேடு, கொடுமணல், கொற்கை, அழகனகுளம்.பூம்புகார், கரூர், பழநி போன்று எத்தனையோ தொல்லியல் முக்கியத்துவம்  வாய்ந்த   இடங்கள் இருந்தும் அவற்றை நாம் உரிய அளவுக்கு மதிப்பளித்து போற்றத் தவறிவிட்டோம். 
இதேமாதிரி தான் பல பிரச்சனைகளிலும் ஒன்றை மையப்படுத்தி பலவற்றைத் தவற விட்டிருக்கிறோம்.

எந்தவொரு  பிரச்சினையிலும் அதனை முழுமையாகத் தெரிந்துகொண்டு பேசுவதுதான் நல்லது. பொதுவாழ்வில் உள்ளவர்கள் அன்றாடம் மேலோட்டமாக தொலைக்காட்சிச் செய்திகளை மட்டும் பார்க்கிறார்கள். தினமும் வெளிவரும் செய்தித் தாள்களைக் கூட, முழுமையாக வாசிக்காமல், அதை ஒரு புரட்டுப் புரட்டி போட்டுவிட்டுப் போய்விட்டால் போதும் என்று நினைப்பவர்களிடம்   என்ன சொல்ல முடியும்? எப்படி அரசியல், சமூக நிகழ்வுகளில் முழுமையான செய்திகளை அவர்கள்  பெற்று,   உள்வாங்கிப் பொது வெளியில் பேச முடியும்?.
இப்படி  மேலோட்டமாக.  நுனிப்புல் மேய்கிறவர்களிடம்  தமிழகப் பிரச்சினைகளை   பற்றி   என்ன எதிர்பார்க்க முடியும்.?

இதற்காகவே  தமிழகத்தைப்    பற்றிப் பலரும் அறிந்த மற்றும் அறியப்படாத 100 பிரச்சினைகளை ஒரு சிறு வெளியீடாக வெளியிட இருக்கின்றேன். அதற்க்கான வேலைகள் நடக்கின்றன.தமிழக நலனில் உண்மையாகவே  ஈடுபாடு கொண்டவர்களுக்கு அதை இலவசமாக அனுப்பலாம் என்றும்   நினைக்கிறேன்.

#தமிழக_பிரச்சினைகள்

கே.எஸ். இராதாகிருஷ்ணன்
17-2-2020.
#ksrpost

LONDON_NOTES

#LONDON_NOTES
—————————-
 
#Hyde_Park

Commonplace, titanic figures with a splendid motion stride across the parched plateau of grass, little London houses only a foor high unddle at their heels.
Under trees all the morning women sit sewing and knitting their monotonous occupation accompanying the agreeable muddle of their thoughts.
In the Row. Vitality civilized to a needle's-point; highly-bred men and horses pass swiftly pass swiftly in useless delightful motion; women walk enamoured of their own accomplished movements.
 
#British_Museum

Gigantic cubes of iron rock are set in a parallelogram of orange sand.
Ranks of black columns of immense weight and immobility are threaded by a stream of angular volatile shapes. Their trunks shrink quickly in retreat towards the cavernous roof.
Innumerable pigeons fret the stone steps with delicate restlessness.
++
 
#Fleet_Street
Precious slips of houses, packed like books on a shelf, are littered all over with signs and letters.
A dark, agitated stream straggles turbulently along the channel bottom; clouds race overhead.
Curiously exciting are so many perspective lines, withdrawing, converging; they indicate evidently something of importance beyond limits of sight.

-Jessie Dismorr (1915)
(THE PENGUIN BOOK OF THE PROSE POEM)
 

#London_Notes
#ksr post
#KSRadhakrishnan_post
 16.02.2020


அன்றைய_கூட்டுக்குடும்பங்கள்

#அன்றைய_கிராமிய #கூட்டுக்_குடும்பங்கள்
-------------------------------------
 
தமிழக குடும்பங்களில் சமீப காலத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டு வருவது உண்மை. கடந்த காலத்தில் நிலவிய கூட்டுக் குடும்பங்கள் சிதைவுறுகின்றன என்று கருதுகிறோர். வேளாண் நாகரிகத்திற்கு உரிய ‘பல தலைமுறை கூட்டுக் குடும்பங்கள்.’ இன்று இல்லை கொள்ளுப் பாட்டன் முதல் கொள்ளுப் பேரன் வரை ஆறு தலைமுறைகள் கொண்ட நேர்வழி விரிந்த குடும்பங்கள் இன்று குறைந்து விட்டன. ஓரிடத்தில் தங்கி வாழும் வேளாண்மை சார்ந்த வாழ்க்கை சிதைந்ததே இதற்குக் காரணமாகும். அதேபோல அண்ணன், தம்பி, சித்தப்பா, பெரியப்பா என அனைவரும் சேர்ந்து வாழும் கிளைவழி விரிந்த குடும்பங்களும் இன்று காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. மிக்க் குறைந்த கால அளவுக்கு இத்தகைய குடும்ப வடிவங்கள் காணப்படுகின்றன.
ஒரு கூரையின் கீழ் உண்டு, உறங்கி வாழும் முறையும் மாறிக்கொண்டிருக்கிறது. எல்லோருடைய உழைப்பும் வருமானமும் ஒருவர் கைக்குச் சென்று நிர்வகிக்கும் முறையும மாறிவிட்டது. வேளாண்மையிலிருந்து விலகியதே இதற்குக் காரணமாகும். குறைந்த காலப் பகுதியே அனைவரும் சேர்ந்து வாழும் சூழலும், அவர்களும் வெவ்வேறு ஊர்களில்/நகரங்களில் வாழும் சூழலும் இருப்பதால் இப்போது விரிந்த குடும்பங்கள் காணப்படுகின்றன.
கரிசல் காட்டுக் கிராமங்களில் நிகழ்ந்த மாற்றங்களைக் கி.ரா. பின்வருமாறு பதிவு செய்துள்ளார்.
கி.ரா. இனவரைவியல்
“செங்கன்னாவின் குடும்பம் முந்து கூட்டுக்குடும்பமாகத்தான் இருந்தது. அப்புறம் அவர் வீட்டுக்கு வந்த “மகாலட்சுமிகள்” ஒருத்தருக்கொருத்தர் பேச்சண்டை போட்டு, கூட்டுக் குடும்பத்தை உடைத்தார்கள்.
“பாத்தா ரொம்ப; பகுந்தாக் கொஞ்சம்” அந்த மோடாமோடி அந்தஸ்திலிருந்து கோனேரியின் குடும்பம் இறங்கிவிட்டது. இப்போ அந்தப் பெரிய வீட்டுக்குள் சிறிய ஆறு குடும்பங்கள் வசிக்கின்றன. குறுக்கே மறுக்கே சுவர்களை எழுப்பி, இடமில்லாத இடத்தில் உண்டாக்கிய சமையல் பிறைகளினால் புகைபிடித்துப் போய்விட்டது அந்த வீடு.
கூட்டுக்குடும்பங்கள் உடைந்ததோடு பழைய எண்ணங்களும் உடைந்துகொண்டே வருகின்றன; முக்கியமாகப் பெண்டுகளிடத்தில். வெயிலில் போய்ச் சாக வேண்டிய அவசியமில்லை என்று தீர்மானித்துவிட்டார்கள் அவர்கள்.”
சொத்துடைமைக் குடும்பங்கள் பொதுவாக்க் கொள்ளுப் பாட்டன் தொடங்கிக் கொள்ளுப் பேரன் வரை செங்குத்து வழியில் விரிந்து நிற்கும். அதுபோலவே, பெரியப்பா, சித்தப்பா அண்ணன் தம்பிகள், விதவையான சகோதரிகள் எனப் பக்கவாட்டிலும் விரிந்து நிற்கும். இத்தகைய விரிந்த குடும்பங்கள் சாதாரண பேச்சு வழக்கில் ‘கூட்டுக் குடும்பங்கள்’ எனப்படும். உடைமையைக் கொண்டிராத உழைத்து வாழும் கூலித் தொழிலாளிகளின் குடும்பங்கள் விரிந்த குடும்பங்களாக இருப்பதில்லை. பொதுவாகத் தனிக் குடும்பங்களாகவே அவை காணப்படுகின்றன.
கூட்டுக் குடும்பங்களின் சிறப்புகள் பற்றிக் கி.ரா. கரிசல் காட்டுக் குடும்பங்களின் அனுபவத்தைக் கொண்டு விவரிக்கிறார். ‘இவர்களைப் பிரித்தது...?’ (1984) கதையில் பின்வருமாறு எழுதுகிறார்.
“இதெல்லாம் எப்படி உண்டாகிறது என்று தெரியலை. அந்தக் குடும்பங்களுக்குள் உள்ள ஒற்றுமைபோல அந்த ஊரிலேயே கிடையாது.
நாலு அண்ணந்தம்பிகள்: ராம லெட்சுமண பரத சத்துருக்காள் போல, எந்தப் பாவிச் சிங்கம் வந்து இந்தக் காளைகளைப் பிரிச்சதுண்ணு தெரியலை. நாலு பேருக்கும் கல்யாணம் ஆனவுடன், நீளமான அந்த வீட்டை மூணு ஓலைத் தடுக்குளால்ப் பிரித்து நாலு பகுதிகளாக்கிக் குடும்பங்களை ஆரம்பித்தார்கள்.
ஒரு வசதிக்காகத்தான் நாலு குடும்பமாக இருந்தார்களே தவிர பொட்டச்சிகளுக்குள்ளெ ஒருநா ஒரு பொழுதுகூட வாய்ச் சத்தம் வந்த்து கிடையாது. அப்படியே மீறி வந்தாலும் அந்த ஆம்பிளைகளின் ஒரு திரட்டு முழியிலெ அடங்கிப்போகும்.
பூர்வீக நிலம் எட்டு ஏக்கர் கரிசக்காட்டை குடும்பத்துக்கு ரண்டு ஏக்கர் வீதம் பாகவஸ்தி செய்துகொண்டாலும் சேர்ந்தோன் அதில் பாடுபட்டார்கள்.
பண ஏர் ஒன்றுக்குத்தான் செலவு; மற்றபடி களையெடுப்பு, களை செதுக்கு, பயிர் கலைப்பிக்கிறது. அறுவடை, எல்லாம் நாலு  குடும்பங்களும் சேர்ந்து சேர்ந்தே ஒவ்வொருத்தர் நிலத்திலும் மொய் ஆட்களாகப் போய் செய்து முடித்துவிடுவதால் அந்தக் குடும்பங்களிலிருந்து ஒரு மணி தானியமோ ஒரு கூறு பருத்தியோ வெளியே போகிறதில்லை.”
‘புறப்பாடு’ (1973) கதையில் கி.ரா. நான்கு தலைமுறைக் குடும்பம் ஒன்றின் முகத்தைக் காட்டுகிறார். அக்குடும்பத்தில் மிகவும் வயதானவரான அண்ணாரப்பக் கவுண்டரின் மூப்பினை மிகவும் அலாதியாக விவரிக்கிறார்.
“அந்தப் பட்டியலிலேயே ரொம்ப வயசானவர் அண்ணாரப்பக் கவுண்டர் ஒருத்தர்தான். அவருடைய மூன்று பெண்டாட்டிகளும் இரண்டு தொடுப்புகளும் எப்பவோ செத்துப் போய் விட்டார்கள். மகன்கள் மகள்கள் கூடச் செத்துப் போனார்கள். பேரன் பேத்திகள் சிலருக்குப் பல விழுந்துவிட்டது. சிலருக்குத் தலை நரைக்கவும் வழுக்கை விழவும் ஆரம்பித்துவிட்டது. மன்னன் அண்ணாரப்பக் கவுண்டருக்கோ தந்தம் பன்னரிவாள்ப் பல்மாதிரி தேய்ந்து போனதே தவிர ஒன்றுகூட உதிரவில்லை. ‘நாப்பது நாளைக்குக் கோழிக்கறியும் பச்சை நெல்லுச்சோறும் போட்டா இப்பவுங்கூட ஒரு கல்யாணம் பண்ணிக் காட்டுவேன்’ என்று சொல்லுவார். அவரால் இப்பவும் சத்தம் போட்டுக் குரல் நடுங்காமல் பாடமுடியும். ஆனால் பேரன் பேத்திகள் சண்டைக்கு வருவார்கள்.
முழு வயோதிகத்தினால் அவருடைய கம்பீரமான உயரமும் உருவமும் வாடிய சருகுபோல் சுருண்டு வளைந்து சிறுத்துவிட்டது. கட்டிலில் மூலை சேர்ந்து விட்டார். தேய்ந்து போன கலப்பை மாதிரி.
ஒரு வருஷமாக அவர், இந்தா அந்தா என்று வரகந்தட்டு விளையாட்டில் மறுக்குகிற மாதிரி காலனை மறுக்கிக் கொண்டு பிடிபடாமல் இருந்து கொண்டிருக்கிறார்.
‘கவுண்டரின் கணக்கை சித்திரபுத்திரன் தொலைத்து விட்டான்’ என்கிறார்கள் ஊர்வாசிகள். அவருடைய மரணத்துக்காக இப்பொ அழுபவர்கள் யாருமில்லை. இந்தக் கிழடு செத்துத் தொலையமாட்டேங்குதே என்று சத்தம் போட்டுச் சொன்னார்கள்.
ஒவ்வொரு பௌர்ணமியையும் அமாவாசையையும் எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்தார்கள்.
குடும்பங்கள், குடும்ப உறவினர்களின் உறவுகள் இரண்டிலும் இரத்த வழியிலும் மண வழியிலும் பின்னப்பட்டவை. இவற்றில் அன்பு, பாசம் இரண்டாலும் கட்டப்பட்ட உறவுகள் என்னெற்றும் நிலைத்திருக்கின்றன. தமிழ்க் குடும்பங்களில் காணப்படும் பாசம், அன்பு குறித்து மேலை மானிடவியல் அறிஞர் மார்கரட் ட்ராவிக் ஒரு நூல் எழுதியுள்ளார். தமிழ்க் குடும்பங்களில் அன்பு குறித்துச் சில குறிப்புகள். (Notes on Love in a Tamil Family 1996) எனும் அந்த நூலில் உள்ள இனவரைவியல் குறிப்பகளைக் காட்டிலும் கி.ரா.வின் குறிப்புகள் காத்திரமானவை; அகவயமானவை. ‘தோழன் ரங்கசாமி’ (1960) கதையில் ஓர் அடர்த்தியான இனவரைவியல் குறிப்பினைத் தருகிறார்.
தன்னுடைய ஒரே பையனான ரங்கசாமியின் மேல் அவருக்கு உயிர். அவனை எப்பாடு பட்டாவது ஊருக்கு அழைத்துக்கொண்டு போக வேண்டுமென்று எண்ணியே வந்தார். ரங்கசாமியோ ஒவ்வொரு தடவையும் முடியாது என்றே சொல்லி அனுப்பிவிடுவான். ‘பெத்தமனம் பித்து, பிள்ளை மனம் கல்லு’ என்று வருத்தப்பட்டுக்கொண்டே அந்தப் பெரியவர் தள்ளாடித் தள்ளாடி நடந்து சொல்லுவார்.
“இந்த்த் தள்ளாத வயது காலத்தில் எனக்கு யாரப்பா துணை? உன்னை நம்பித்தானே நான் இருக்கிறேன்” என்று துக்கத்தோடு சொன்னார் அவர்.
“அப்பா நான் இறந்துவிட்டதாக நினைத்துக்கொள்ளுங்கள்” இதை ரங்கசாமி வெகுசுலபமாகச் சொல்லிவிட்டான். அவர் அவனேயே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார். தாங்கமுடியாத துயரத்தால் அவருடைய மூக்கு இரண்டு மூன்று தடவை துடித்த்து. கனமான வெப்பம் நிறைந்த  இரண்டு துளி வெந்நீர் அவரது கண்களிலிருந்து பொத்தென்று தரையில் விழுந்தது.
“தொட்டிலிலும் தோள்மீதும், இரவுபகல் கண்மூடாது வைத்துச் சீராட்டி வளர்த்த பையனா? இவன்! இவனை யார் இப்படிச் செய்தார்கள். ஏ! பாவிகளே!”
“எப்படியாக இருந்த பையன் இப்படி ஆகிவிட்டான். ஐயோ! சுக்காக உலர்ந்து போனானே”
குடும்பம் பல சந்தர்ப்பங்களில் மகிழ்ச்சியான இடம் என்றாலும், அது வேறு சில காலகட்டங்களில் சிலருக்குத் துன்பத்தை விளைவிக்கும் இடமாகவும் மாறிவிடுகிறது. குடும்பங்களின் இன்ப, துன்ப நிகழ்வுகள் இரண்டையும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போலக் கி.ரா. பேசுவது அவர் ஒரு தேர்ந்த இனவரைவியலர் என்பதைக் காட்டுகிறது. ‘ஜடாயு’ (1959) எனும் ஆரம்பகாலக் கதையில் கி.ரா.வின் பதிவு கவனிக்கத்தக்கதாய் உள்ளது.
“ஐயோ! நான் சொல்கிறதையும் தயவுசெய்து கேட்க வேணும். நீங்கள் என்னுடைய தகப்பன் மாதிரி. இவள் என்னுடைய சொந்த மாமன் மகள். இவள் எனக்கு வாழ்க்கைப்பட்டு அஞ்சி வருஷமாகிறது. இந்த அஞ்சி வருஷமும் இவளோடு இந்தப் போராட்டம்தான். பகலெல்லாம் எலும்புமுறிய வேலை செய்துவிட்டு ராத்திரி வீட்டுக்கு வந்தால், வீட்டில் இருக்கமாட்டாள். விடியத்தான் வீட்டுக்கு வருவாள். இவளை நான் ராத்திரியெல்லாம் தேடிக்கொண்டு அலைய வேண்டும். கட்டிய புருஷன் எத்தனை நாளைக்குத்தான் இதைச் சகித்துக்கொண்டு இருப்பான்?”
இந்தச் சமயத்தில் கதவைத் திறந்துகொண்டு நாயக்கர் தங்கியிருந்த வீட்டுக்காரச் சுந்தரம் செட்டியார் வெளியே வந்தார். பக்கத்து வீட்டுக்காரர்களும் வந்தார்கள்.
தூரத்தில் நின்றிருந்த சுருட்டைத் தலையனின் ஆட்களில் ஒருவன் இவர்களை நோக்கி வந்தான்.
அவன் சுருட்டைத் தலையனைப் பார்த்துச் சொன்னான். ‘என்ன லச்சை’ பழைய படியும் தொடங்கியாச்சா, நானா இருந்தால் இவளை கட்டிகிட்டு அழுகிறதைவிட, பேசாமல் ஒரு தலைமுழுக்குப் போட்டுருவேன். கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி என்கிறது உனக்குத்தான் அண்ணே பொருத்தம்!”
கிராமங்கள் சாதிகளால் கட்டப்பட்டிருந்தாலும், உறவுகளால் இயங்குகின்றன. இந்த உறவில் நேரியல் உறவும, புனைவியல் உறவும் கலந்துள்ளன. ஒரு சமூகத்தார் மற்ற சமூகத்தாரை உறவுமுறை கொண்டு அழைப்பதும் விளிப்பதும் சந்று வினோதமானதுதான். ஆனால் அத்தகைய நடைமுறை கிராம சமூகத்தின் ஒன்றியத்திற்கு உதவுகின்றன. இந்த நடைமுறையைக் கி.ரா. ‘ஜீவன்’ (1972) கதையில் மிக அழகாக விவரிக்கிறார்.
“அந்த ஊரிலுள்ள பிள்ளைமார்; செட்டியார், நாயக்கமார்களோடு சம்மந்த வழி செய்து கொள்ளாவிட்டாலும் பெரியப்பா, சித்தப்பா, மாமா என்றெல்லாம் உறவுமுறை கொண்டாடி வந்தார்கள். ஊமையான அங்குப்பிள்ளை அந்த ஊரில் தனக்கு யார் யார் அண்ணன் தம்பி முறை சம்மந்தகார முறை என்று தெளிவாகத் தெரிந்து வைத்துக் கொண்டிருந்தது ஆச்சரியம்தான்.
பின்னுரை
தமிழ் நாவலாசிரியர்கள் குடும்ப உறவுகளை மையமிட்டு எழுதுபவர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்தான். குடும்ப உறவுகளில் தாய்க்கும் குழந்தைகளுக்குமான உறவு ‘அன்பு’ வயப்பட்டது. தந்தைக்கும பிள்ளைகளுக்குமான உறவு ‘மரியாதை’ சார்ந்தது. சகோதர, சகோதரிகளுக்கிடையேயான உறவு இளமையில் ‘பாச’ உணர்வு சார்ந்தது. பங்காளிகள் ஆனவுடன் ‘விலகி’ நிற்கும் தன்மையுடையது. மாமன் மச்சான்களுக்கிடையில் ‘கேலி’ உறவு விஞ்சி நிற்கும். மாமனார்-மருமகள், மாமியார்-மருமகன் முதலானவர்களுக்கிடையில் உள்ள உறவு ‘தவிர்ப்பு’ உறவு சார்ந்தது.
தமிழ்ச் சமூகத்தில் ஒரு சமூகத்தார் நெருக்கமான மற்ற சமூகத்தாரை உறவு சொல்லி அழைத்துப பழகும் முறை உள்ளது. இதனை இனவரைவியலர்கள் ‘புனைவியல் உறவுமுறை’ என்பார்கள். வேளாளர் ஒருவர் சக ஊரில் வாழும் வன்னியரை அண்ணன்,  தம்பி, மாமன், மச்சான் என அழைப்பது வெகு இயல்பு. இஸ்லாமிய, கிறித்துவ சமூகத்தாருடன் இந்துக்கள் இத்தகைய புனைவியல் உறவு முறையைப் பேணுகின்றனர். இது சமூக ஒன்றியத்தைப் பேணும் ஒரு ஊக்கியாகச் செயல்படுகிறது. கி.ரா. தன் கதைகளில தனிக்குடும்பம், கூட்டுக் குடும்பம், சிதைவுற்ற குடும்பம் ஆகியவற்றில் தொடங்கிப் புனைவியல் உறவு வரை அனைத்தையும் பேசுகிறார்.

- கே.எஸ். இராதாகிருஷ்ணன்
17.02.2020

#அன்றைய_கூட்டுக்குடும்பங்கள்
#ksrpost
#KSRadhakrishnan_post


Sunday, February 16, 2020

திரும்பிப்பார்க்கிறேன் .....

#

திரும்பிப்பார்க்கிறேன் கடந்த
பாதையை, சுவடுகளை- கடந்த காலத்தை
மிக  கம்பீரமாய்   உணர்கிறேன்.
எங்கும்   யாரிடமும்   எதற்கும்
எந்நிலையிலும்    தாழாமல்
மிகக்   கடுமையான  சூழலிலும்
சரியாகவே  இருந்திருக்கிறேன்.நான் நம்பியவர்களால் ஏமாற்றங்கள் ஆதனால்
அவமானங்கள்; பின்னடைவுகள்...
மண்டியிட்டால்  மகத்தான  உயரம்
தொட்டிருக்கலாம் தான்.ஆனால் பாரதியின்  தைரிய வாக்கு நெஞ்சில்.....
பின் எப்போதும்  நானே என்னை
மன்னித்திருக்க மாட்டேன்.
பிடிவாதம்  வைராக்கியம்
தாழாத தன்மானம் திருப்தியாகவே
வாழ்ந்திருக்கிறேன்.
இன்னும் வாழும்  நாள் வரையும்
அமைதியாக வாழ்ந்து போக.....
இயற்க்கையே நீ வழங்கு

உனக்கு முன்னாள் கை தட்டுபவர்களை நம்பாதே....

உனக்கு முன்னாள்  கை தட்டுபவர்களை நம்பாதே....

உனக்கு முன்னாள்  பாசங்காக புகழ்பவர்களை ஒருபோதும் நம்பாதே....

உனக்கு பின்னால் இருப்பவர்கள் புறம் சொல்வதை/கேலி செய்வதை கண்டுகொள்ளாதே

தகுதியே தடை.....

எப்போதுமே  வாழ்வை ஒரு பார்வையாளனாக கவனிப்பதில் பெரிய ஆர்வம் உண்டு.என்ன எண்ணினோம் ? எதை நோக்கி பயணிக்க விழைந்தோம் அந்த வழியில் தொடர்ந்து செல்கிறோமா ? என்று நடுவே நமக்குள் கேள்வி வேண்டும்.

இன்று நாம் விரும்பிய தூரத்தில் ஒரளவாவது கடந்திருக்கிறோமா ? என்றும் எண்ணிப்பார்க்க வேண்டும்.எல்லோருடைய வாழ்விலும் இந்த சுயமதிப்பீடு அவசியம்.

நாம்   வென்றதை  கொண்டாடும் அளவுக்கு   தோல்வியை   மனம் ஏற்பதில்லை. பெற்ற வெற்றியை  மட்டும் பூதாகரப்படுத்தி இங்கு வரலாற்றை ஒரு மாயத்தோற்றமாக   உருவாக்கி வைத்துக்கொண்டுள்ளோம்.வரலாறு நமக்கு மட்டுமானதுமல்ல. வரலாற்றில் நாம்   தோற்றவர்களையும் படிப்போம். சிலருக்கு திறமைகள், நேர்மையான கள உழைப்பும்இருந்தும்புறக்கனிப்படுவதும்.அதையும்   அவர்கள்    எளிதாக எடுத்துக்கொண்டு சில வேடிக்கை மனிதர்களைகடந்தசெல்வதுண்டு.
வெற்றியும், தோல்வியும்  வீரருக்கு அழகு. 

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை.
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை.

இப்படியான நிலையில் பொது வாழ்வில் சாதித்த  பலரின்  வரலாறுகள் மறைக்கப்பட்டது மட்டுமல்ல அவர்களை மனதை  அவர்கள் வாழ்ந்த காலத்தில் ரணப்படுத்தியதுண்டு.  இது பொது
வாழ்வில் மட்டுமல்ல எல்லா சூழலிலும் உள்ளதுதான். வெற்றி  பெற்றவர் மனிதராக போற்றுவதாலே நேர்மையான கீர்த்தி பெற்றவரென்று உணர முடியாது. வரலாறு எப்போதுமே இரு பக்கத்தை கொண்டது. அதை அப்படியே ஏற்போம்.
இங்கு தகுதியே தடை.....

நெஞ்சை  மட்டுமல்ல முதுகையும் 
பலமாக வைத்துகொள் முதுகில் குத்தும் 
முறை அதிகம்.

இந்த எதிர்வினைப் போக்கை நேத்தாஜி, பகத்சிங், வ.உ.சி, ஓமந்தூரார் பலரும் சந்தித்த்துதான்...

#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
16-2-2020.


Nov 14, 2025

  இன்று…2025 நாளை….2026.