#PawankalyanTVKVijay #TamilnaduNDA
#TNBJP #AIDMK #Elections2026_alliances ——————————————————— தவெக தலைவர் நடிகர் விஜயிடம் ஆந்திரத் துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பேசியதாகவும் அதன் அடிப்படையில் விஜய் அதிமுக-பாஜக கூட்டணிக்கு விரைவில் வரப்போவதாகவும் செய்திகள் வருகின்றன. நடப்பது என்ன என்கிற வகையில் இன்றைய பரபரப்பான சூழலில் சிலவற்றைப் பகிர்ந்து கொள்ள வேண்டி இருக்கிறது! நான் பவன் கல்யாணுக்கு எவ்வளவு நெருக்கம் என்பது எல்லோருக்கும் தெரியும். உண்மையில் தமிழகத்தைப் பொறுத்தவரை பவன் கல்யாண் தேசிய ஜனதாக் கூட்டணியில் எப்படியாவது விஜயை இணைத்து விட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். அது உண்மையில் மிக முக்கியமான ஒரு அரசியல் நடவடிக்கை ஆனால் விஜய் யுடன் இருக்கக்கூடிய சில மோசமான சக்திகள் வழியாக அது தடைபட்டுக் கொண்டே இருந்தது. அவர்கள் எக்காலமும் நாம் பிஜேபியுடனோ அதிமுகவுடனோ போகக்கூடாது என்பதில் அவரை வழி நடத்தி அவரது அரசியல் இணைப்பை முன்னெடுப்பை வெறுமையாக்கிக் கொண்டே இருந்தார்கள். ஆனால் அதற்கு முன்பு விஜய்யை பாஜக உடன் இணைத்து ஒரு புதிய அரசியல் மாற்று வழியை கண்டுபிடிப்பதற்கான குறிப்பாக திமுகவை அரசியல் நீக்கம் செய்ய வேண்டியதன் முனைப்பாகவும் தமிழக மக்களை அதன் பிடியில் இருந்து விடுவிப்பதற்கான ஒரு தீவிரமான முயற்சியாக அது இருந்தது. ஒரு கட்டத்தில் நான் பவன் கல்யாண் அவர்களின் ஜனசேனா தமிழக தலைவராக இருப்பதற்கான வாய்ப்பு இருந்த போது தெலுங்கானாவில் ஜனசேனாவை வலுப்படுத்திவிட்டு பிறகு தமிழ்நாட்டுக்கு வரலாம் என்று அவர்சொன்னார். அவர் சொன்னதன் பிறகுதான் அவரது வழிகாட்டுதலின் பேரில் நான் பாரதிய ஜனதாக் கட்சியில் இணைந்தேன். இந்நேரத்தில் பவன் கல்யாண் அவர்கள் எனக்கு வசதியாக ஆந்திராவின் துணை முதல் அமைச்சரானார். அப்படியான அளவில் நான் பவன் கல்யாண் அவர்களுடன் நெருக்கமாக இருந்தேன். அந்நேரத்தில் பவன் கல்யாண் விஜயிடம் சொன்னார். திருப்பதியில் நடந்த பெரும் மாநாட்டில் ஏகப்பட்ட கூட்டம் வந்த போதும் எனது அண்ணன் சிரஞ்சீவியால்அங்கு வெற்றி பெற முடியவில்லை! நானும் கூட வெற்றி பெற முடியவில்லை. அதன் அடிப்படையில் ஒரு சாணக்கியத்தனத்தை மேற்கொள்ளா விட்டால் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியுடன் குறிப்பாக தெலுகு தேசம்-பாரதிய ஜனதாக் கட்சி யுடன் இணைந்து இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 23 சட்டமன்ற உறுப்பினர்களையும் பெற்று ஜன சேவா அரசியலைத் தக்க வைத்துக் கொண்டேன்.அதேபோல் விஜயும் தனியாக நிற்பதாக சொல்லிக்கொண்டு ஏமாறாமல் இந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து தனக்குரிய அரசியல் இடத்தைப் பெற முயல வேண்டும். அந்த வகையில் அதிமுக பாரதிய ஜனதாக் கூட்டணியில் இடம் பெற்று போட்டியிட்டால் அவருக்கும் எதிர்காலம் உண்டு. இப்படியான எதிர்காலம்குறித்துத்தான் அந்நாளில் நான் விஜய்யிடம் பேசினேன். ஆனால்அது அவருக்குப்புரியவில்லை. இது குறித்து பேசும்போதெல்லாம் அவர் ஏதோ ஒரு வழியில் சரி என்கிறார் என்றாலும் இது குறித்து ஒருபோதும் அவரால் முடிவெடுக்க இயலவில்லை. தன்னுடைய ரசிகர்களின் உற்சாகமான ஆதரவுகளை நம்புவதை விட இந்திய அரசியலின் நுட்பமான கடந்த காலப்பார்வைகளை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.அதைப் புரிந்து கொண்டால் உங்களுக்கும் எதிர்காலம் உண்டு என்று நான் அவரிடம் சொன்னேன். இவ்வளவுக்கு பிறகும் விஜய் வரவில்லை. திரும்பவும் அவரிடம் நான் பேசினேன். அந்த வகையில் இதுவரை அவரிடம் எந்த ஒரு தெளிவான முடிவு எதுவும் இல்லை என்பதுதான் சிக்கலாக இருந்தது . திரும்பவும் பவன் கல்யாண் மூலம் இக் கூட்டணி சார்ந்து விஜய்க்கு தன் எதிர்காலம் குறித்து முன்னெடுக்கக்கூடிய வாய்ப்புகள் பிரகாசமாகத்தான் உள்ளது. இதுதான் இன்றறைய எதார்த்த நிலை! நண்பர்கள் என்னிடம் கேட்டார்கள்! உங்களிடம் இது குறித்து பவன் கல்யாண் பேசினாரா? அடுத்தடுத்த நிலைமைகள் என்ன என்பதில் அவர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் என் வீட்டில் இருந்து கொண்டே இம்மாதிரியான கேள்விகளை எதிர்பார்ப்புகளை நான் எதிர் கொண்டு தான் இருக்கிறேன்!. அதிமுக தலைவர் எடப்பாடியும் மாவட்டச் செயலாளர்கள் சிலரும் இது குறித்து சில நம்பிக்கையான தகவல்களை கொடுத்திருக்கிறார்கள் என்று சொன்னார்கள். எனக்கு அது என்னவென்று தெளிவாகத் தெரியவில்லை! விஜய் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் வருவாரா போவாரா என்பது குறித்து தெளிவான முடிவு எதையும் என் அளவில் சொல்வதற்கில்லை. ஆனால் பவன் கல்யாண் இது குறித்து பேசி உள்ளது உண்மைதான்.. அவர்தான் இன்றைய சூழலைச் சொல்ல முடியுமே ஒழிய விஜய் கூட்டணிக்கு வருகிறார் வரமாட்டார் என்பதெல்லாம் சரியாகவே உறுதியாகவோ இதுவரை சொல்ல முடியவில்லை.ஆனால் , காலம் மாறும் காட்சிகளும் மாறும்! வாய்ப்புகள் உள்ளன. #பாஜக #அதிமுக #பவனகல்யான்_விஜய #தேர்தல்2026. #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpostTuesday, April 28, 2026
#தமிழகவிவசாயிகளின் உரிமை காக்க உழவர் பெருந்தலைவர் அய்யா
#தமிழகவிவசாயிகளின் உரிமை காக்க உழவர் பெருந்தலைவர் அய்யா #சி_நாராயணசாமிநாயுடு அவர்களின் தலைமையில் தமிழகம் முழுவதும் நடைபெற்ற எழுச்சிமிகு போராட்டங்களில் அன்றைய மதுரை மாவட்டம் (தற்போதைய திண்டுக்கல் மாவட்டம்) 10.04.1978 அன்று நொச்சியோடைப்பட்டியில் நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் பலியான. தியாகி ஆரோக்கியசாமி மற்றும் தொடையில் குண்டு துளைக்கப்பட்ட தியாகி சார்லஸ் ஆகியோரின் தியாகங்களை நினைவு கூறுவோம் விவசாயிகளின் உரிமைப் போராட்டங்களை வென்றெடுப்போம்
ஆளுநர் ரவி அவர்கள் மேற்கு வங்காளக் கவர்னராக மாற்றப்பட்டுள்ளார்.
ஆளுநர் ரவி அவர்கள் மேற்கு வங்காளக் கவர்னராக மாற்றப்பட்டுள்ளார். இங்கு அவர் மீது ஆயிரம் கருத்து வேறுபாடுகளைச் சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரை கவர்னர் ரவி அவர்கள்பழகுவதற்கு இனிய நண்பர் ! நல்ல பண்பாளர்! ஆழ்ந்த அறிவாற்றல் உள்ளவர்!தமிழ் இலக்கியங்கள் மீது தீவிரவாசிப்புடையவர். அவர் தமிழ் மொழியைச் சிறப்பாகச் சொல்லி பலமுறை நான் கேட்டிருக்கிறேன்.! மனதில் பட்டதை நேரடியாகச் சொல்லக் கூடியவர்.
அரசியல் கலந்தாலோசிப்புகளில் என்னிடம் கூட அவர் சில விஷயங்களைக் கேட்டுக் கொள்வார். அப்படி ஒரு நல்ல ஆளுநர்!ஆனால் தமிழ்நாட்டில் அவர் மீது விமர்சனங்களையும் பல நேரங்களில் அவமானங்களையும் பல நேரம் அலட்சியங்களையும் சுமத்தினார்கள். ஆளுநர் மாளிகையை மூட வேண்டும் என்றெல்லாம் சொன்னார்கள். மசோதாக்களுக்கு கையெழுத்திடாமல் தாமதப்படுத்தினார் என்றால் அதன் காரணத்தையும் சரியாகத்தான் அவர் சொல்லுவார்! அந்த வகையில் அது சார்ந்து இப்போது உச்ச நீதிமன்றங்களில் பல தீர்ப்புகள் வந்திருக்கிறது. ஆனாலும் தமிழ்நாட்டில் கெட் அவுட் கவர்னர் என்றெல்லாம் கோஷம் விட்டார்கள். பல நேரங்களில் அசிங்கப்படுத்தினார்கள்! அதையெல்லாம் தாண்டி அவர் தன் செயல்பாடுகளில் உறுதியாக இருந்தார்!உண்மையில் அவரைப் பழகியவர்களுக்கு அவரது குணமும் பண்பும் தெரியும் என்பதால் தனிப்பட்ட முறையில் தெரிந்தவர்கள் அவரைப் பெருமை படுத்தித்தான் பேசுவார்கள். ஆனால் சில சுய அறிவு இல்லாத அரசியல்வாதிகள் மற்றும் முற்போக்கு சிந்தனையாளர்கள் என்ற பெயரில் உலா வரும் பிற்போக்கு வாதிகள் ரவியை வேண்டுமென்று குறை சொல்லி கூவி திருவார்கள்…. இப்போது மேற்கு வங்கத்திற்கு ஏன் அவரை மாற்றியுள்ளார்கள் என்றால் அங்கே மாநில அரசை வைத்துக்கொண்டு சிலர் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் தேவையில்லாத வேலைகள் பலவற்றைச் செய்து கொண்டிருப்பதால் அவற்றின் மீது ஒரு நல்ல முடிவு எடுக்க இவரால் தான் முடியும் என்பதற்காக அங்கே அவரை கவர்னராக மத்திய அரசு நியமித்துள்ளது. மேலும் மேற்கு வங்கத்தின் சில எல்லைப் பகுதிகளை யூனியன் பிரதேசமாக மாற்ற வேண்டிய நிலைமையும் வரலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.பல வகையிலும் கவர்னர் ரவி அவர்களின் தேவை அங்கே இருப்பதால் அவர் மாற்றப்பட்டுள்ளார். ஆரிப் முகமது கான் கேரளாவில் கவர்னராக இருந்தபோது கேரளாவின் முதல்வர் பினராய்க்கு அவரரைப் பிடிக்காமல் போனது. ஆனால் அவர் ரவி போலத் திறமை உள்ளவராக இருப்பாரா என்கிற கேள்விக்கு அப்பால் பாஜகவின் தோழமைக் கட்சி ஆளுகின்ற நிதிஷ்குமாரின் பீகார் மாநிலத்திற்கு அவரை மாற்றினார்கள். மம்தாவின் ஏகபோக கெடுபிடிகளுக்குப் பதில் தர இவரால் முடியும் என்கிற அளவில்தான் இப்போது அவரை மேற்கு வங்கத்திற்கு மாற்றி உள்ளார்கள் என்று ஒரு தகவல்! Expressed a wish to meet our humble & dynamic Governor Thiru RN Ravi Avl before he leaves to take charge at Bengal Lok Bhavan. His side kind enough to speak with me over phone & invited me to visit him in Kolkata. Thiru Ravi has exposed the duplicity & deviousness of the DMK government over the years. He is a man of conscience who refused to cow down to DMK goons. It is due to this that he is being sent to Bengal. The former Kerala Governor Thiru Arif Mohammad had softened after some years but Thiru Ravi has been steadfast & courageous in taking on unconstitutional forces. CM Mamata Banerjee will find it tough to continue her extra-judicial activities now. #கவர்னர் #தமிழகஅரசியல் #Governor #tamilnadupoltics #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpostஒரு வாழைக்கு 150 ரூபாய் செலவு செய்திருக்கிறோம்.
ஒரு வாழைக்கு 150 ரூபாய் செலவு செய்திருக்கிறோம். ஆனால் சந்தையில் 80 ரூபாய்க்கு கூட வாலைத்தார் விற்கிறது என்று விவசாயிகள் கண்ணீர் மல்க பேட்டி கொடுக்கிறார்கள்.
விவசாயிகளே, கேட்க கொஞ்சம் கஷ்டமா இருக்கும், ஆனாலும் உண்மை சொல்ல வேண்டியதுதான். சில நேரங்களில் இப்படிப்பட்ட பிரச்சனைகள் உங்களுக்கு ஒரு பாடம் கற்றுக்கொடுக்கத்தான் வருகிறது. ஒரே நேரத்தில் ஒரு பகுதி முழுக்க ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஒரே பயிரை போட்டால் என்ன ஆகும். சந்தையில் அந்த பொருள் குவிந்து கிடக்கும். வாங்குபவர்கள் குறைவு, பொருள் அதிகம். அப்போ விலை தரையில் விழும். அதுதான் இப்போ வாழைக்கு நடந்த கதை. இதுபோன்ற பிரச்சனைகளில் விவசாயிகள் மாட்டிக்கொள்ளாமல் இருக்கத்தான் மோடி அரசால் விவசாய சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அந்த சட்டங்களில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு பகுதியிலும் என்னென்ன பயிர்கள் எவ்வளவு அளவில் பயிரிடப்படுகின்றன என்று ஒரு மையப்படுத்தப்பட்ட சிஸ்டத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பதுதான். அந்தந்த பகுதியில் உள்ள விவசாய அதிகாரிகள் அந்த தகவல்களை ஒரு சென்ட்ரல் சாப்ட்வேரில் பதிவு செய்வார்கள். அதனால் ஒரு குறிப்பிட்ட பயிர் அதிகமாக போய்விட்டது என்றால் உடனே அலர்ட் வரும். அதன் பிறகு அந்த பயிரை இன்னும் அதிகமாக அடுத்த சில மாதங்களுக்கு போட வேண்டாம் என்று அறிவுறுத்துவார்கள். விவசாயிகள் வேறு பயிர்களுக்கு மாறினால் சந்தையில் சமநிலை இருக்கும். விலையும் சரிந்து போகாது. இது தான் அந்த சட்டத்தின் நோக்கம். ஆனால் அப்போது என்ன நடந்தது. ஊடக மேடைகளில் பெரிய பெரிய நாடகங்கள் நடந்தது. “விவசாயத்தை அழிக்கிறார்கள்” “விவசாய நிலங்களை பறிக்கப் போகிறார்கள்” என்று பத்திரிகையாளர்களை வைத்து திமுக தூண்டிவிட்டது விவசாயிகளும் அதை நம்பி அந்த சட்டத்தை அடித்து விரட்டினார்கள். விவசாயிகளின் கடும் எதிர்ப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் அந்த சட்டம் ரத்து செய்யப்பட்டது.. நல்லதா கெட்டதா என்று முழுமையாக புரிந்து கொள்ளாமல் அந்த சட்டங்களை விரட்டி அடித்து ரத்து செய்ய வைத்தார்கள். அப்போது கைகொட்டி கொண்டாடிய காங்கிரஸ் திமுக போன்ற அரசியல் கட்சிகளும் இருந்தார்கள். இன்று அதே விவசாயிகள் சந்தையில் விலை கிடைக்கவில்லை என்று கண்ணீர் மல்க பேசும்போது ஒரு கேள்வி தான் எழுகிறது. அந்த நேரத்தில் கொஞ்சம் சிந்தித்து இருந்தால் இன்று இந்த நிலை வந்திருக்குமா. அரசியலில் சிலர் எப்போதும் ஒரு விஷயத்தை மட்டுமே விரும்புவார்கள். விவசாயிகள் நிரந்தரமாக பிரச்சனையில் இருக்க வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு கேட்க கதைகள் இருக்கும். மக்கள் அரசாங்கங்களை நம்பி இருக்க வேண்டும் பிச்சைக்காரர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் திமுக காங்கிரஸ் போட்ட கட்சியின் நோக்கம்.. ஆனால் விவசாயிகளுக்கு வேண்டியது அது இல்லை. விவசாயிக்கு வேண்டியது நிலையான வருமானம். உழைத்ததற்கு சரியான விலை. சந்தை திட்டமிடல். நீண்ட கால பாதுகாப்பு. ஆகவே இனிமேல் ஒரு பாடம் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். யார் என்ன சொல்கிறார்கள் என்று மட்டும் கேட்காமல் அது உண்மையில் விவசாயிக்கு நன்மை தருமா என்று யோசிக்க வேண்டும். விவசாயத்தை காப்பாற்றுவது கோஷம் போடுவதால் இல்லை. புரிந்து கொண்டு சரியான முடிவெடுப்பதால்தான். இல்லையென்றால் இன்று வாழை, நாளை தக்காளி, நாளை மறுநாள் வெங்காயம் என்று விவசாயியின் கண்ணீரே சந்தையில் அதிகமாகி கொண்டே இருக்கும்.#TNBJPElectionmanifesto - my draft #தமிழகபாஜகதேர்தல்அறிக்கை - எனது வரைவு
#TNBJPElectionmanifesto - my draft #தமிழகபாஜகதேர்தல்அறிக்கை - எனது வரைவு ——————————————————— வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை ஒட்டித் தமிழக பாரதிய ஜனதாக் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் திருமதி டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தலைமையில் நானும் அந்த அதில் உறுப்பினராக இணைந்து இருக்கிறேன். தனிப்பட்ட முறையில் எனது முயற்சியில் தமிழக நலன்கள், உரிமைகள் முன் எடுக்கும்; ஒரு முன் வரைவு -ட்ராப்ட் ( draft)தயார் செய்து தமிழக பாரதிய ஜனதாத் தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்களிடமும், டாக்டர் திருமதி தமிழிசை சவுந்தர்ராஜன் அவர்களிடமும் விரைவில் வழங்க உள்ளேன். பாரதிய ஜனதா கட்சியின் வரலாறு , ஜனசங்கமும், பாஜகவும் , பிரதமர் மோடியும்- தமிழகமும் மற்றும் மோடியின மக்கள் நலப் சாதனைகள் இணைத்து முக்கிய திட்டங்கள் உட்பட எனது வரைவு ( draft) அறிக்கையும் கட்சித் தலைமையிடம் தேர்தல் அறிக்கை குழுவினரின் பரிசீலனைக்கு அளிக்க உள்ளேன்..
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...