Friday, March 17, 2017

சி. நாராயணசாமி நாயுடு,

நேற்று (16.03.2017) மாலை கோவில்பட்டியில் நடந்த உழவர்பெருந்தலைவர் 
சி. நாராயணசாமி நாயுடு திருஉருவ சிலை அமைப்பைக்குறித்து பத்திரிகையாளர்ஊடகாளர்கள் சந்திப்பும்பின்ஆலோசனைக் கூட்டமும் நடந்தது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள பிறமாவட்டங்களிலிருந்த  ிருநாராயணசாமியோடுபணியாற்றியவர்கள்விவசாயகளின் உரிமை ஆர்வலர்கள் எனபலர் கலந்துக்கொண்டனர். பத்திரிகையாளர்களின் சந்திப்புசிறப்பாக நடந்தேறியது.

கடந்த 46 ஆண்டுகளில் உரிமைக் கேட்டு போராடியவிவசாயிகள் 66 பேர் தமிழக காவல் துறை துப்பாக்கி சூட்டிற்குபலியாகிஇறந்துள்ளனர்.

குறிப்பாக கோவில்பட்டி வட்டாரத்தில் இருபதுவிவசாயிகளுக்கு மேல் பலியாகியுள்ளார்கள். குறிப்பாக என்கிராமத்திலே 31.12.1980ல் 8 பேர் பலியாயினர்.

அந்தத் துக்கத்தைக் கூட பெரிதுப்படுத்தாமல் அன்றைக்கும்மதுரையில் உலகத் தமிழ் மாநாடை நடத்தினார்கள்.

கடந்த 2012லிருந்து தமிழகத்தில் தற்கொலையாலும்வேதனை - மாரடைப்பாலும், 200 விவசாயிகள் வரை மரணம்அடைந்துள்ளர். ஒரு காலத்தில் மகாராஷ்டிராஆந்திராசட்டீஸ்கர்கர்நாடகம் போன்ற மாநிலங்களில் தான்விவசாயிகள் தற்கொலை நடந்தது. இன்று தமிழகத்தில்கண்கூடாக பார்க்கின்றோம்.

விவசாயிகளுக்கு இலாபம் இல்லாமல்மழையில்லாமல்வறட்சியில் விவசாயத்தை செய்கின்றனர். இந்த அப்பாவிஜீவன்களை கண்டுக் கொள்ளாமல் இருப்பதுதான் வேதனைதருகிறது என்று இந்தக் கூட்டத்தில் குறிப்பிட்டேன்.

இதைக் குறித்த செய்திகள் தென்மாவட்ட ஏடுகளில் விரிவாகவந்துள்ளனர்.

சி. நாராயணசாமி நாயுடு,

விவசாயிகள் சங்கம்

விவசராயிகள் தற்கொலை

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

17.03.2017



No comments:

Post a Comment

*What lies behind you and what lies before you are tiny matters compared to what lies within you*.

*What lies behind you and what lies before you are tiny matters compared to what lies within you*. Believe in yourself. You know personal de...