Friday, April 27, 2018

இன்று ஏப்ரல் 27 -சர்பிட்டி தியாகராயர் பிறந்தநாள்

இன்று ஏப்ரல்  27 -சர்பிட்டி தியாகராயர் பிறந்தநாள்               

சென்னை மாநகராட்சியில் நேரடித் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் மேயர். நெசவு, தோல்பதனிடுதல், சுண்ணாம்பு காளவாய், உப்பளம் என பல தொழில்களில் ஈடுபட்டு பொதுவாழ்வுக்கு தன் சொந்தப் பணத்தை செலவிட்டவர். பலருக்கும் உதவி கரம் நீட்டியவர்.

நீதிக்கட்சியைத்  தொடங்கிய மூவரில் முதல்வர்  வெள்ளைக்காரர்கள் காலத்தில் இரட்டை ஆட்சி முறையின்கீழ் நடந்த தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்றது. தியாகராயரை முதல்வராகப்  பொறுப்பேற்க அப்போது கவர்னர் அழைத்தார். முதல்வர் பதவியை  மறுத்துவிட்டு, சென்னை மாநகராட்சி மேயராகவே நீடித்தார். பிரிட்டிஷ் இளவரசரை வரவேற்கும் போதும் மேயருக்கான ஆடம்பர உடை மரபுகளை உடைத்து, தனது வழக்கமான வெள்ளுடையுடன வரவேற்றார்.

இவர், தண்டையார்பேட்டையில் உள்ள தியாகராயர் கல்லூரியை நிறுவினர். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நிறுவ துணையாக இருந்தார்.

ஆரம்ப பள்ளிகள், தொழிலநுட்ப பயிற்சி நிலையங்களையும் அமைய பணிகள் ஆற்றினார் . ஆயிரம் விளக்கு  சென்னை நகராட்சிப் பள்ளியில் 1920ல் முதன் முதலாக மதிய உணவு திட்டத்தை இவர் தொடங்கினார்.இவரின் பெயரில்தான இன்றைய தியாகராய நகர்(தி நகர்)என அழைக்கப்படுகிறது.

அனைவருக்கும கல்வியும் வேலைவாய்ப்பும் பெற்று உயரவிட்டவர். திராவிட இயக்கத்தின் மூலவர்.

#சர்பிட்டிதியாகராயர்
#சென்னைமாநகராட்சி
#நீதிக்கட்சி
#தியாகராயநகர்
#KSRadhakrishnanpostings
#KSRpostings 
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
27-04-2018

No comments:

Post a Comment

தற்செயலாகக் கிடைப்பதல்ல வெற்றி. தன்செயல்களால் கிடைப்பதே வெற்றி. வாழ்க்கைத் தராசின்.... ஒரு பக்கத் தட்டில்...... பல நூறு துன்பங்கள்..... எதிர்த்தட்டில் நான் எனும் ஒற்றை இன்பம்......

தற்செயலாகக் கிடைப்பதல்ல வெற்றி. தன்செயல்களால் கிடைப்பதே வெற்றி. வாழ்க்கைத் தராசின்.... ஒரு பக்கத் தட்டில்...... பல நூறு துன்பங்கள்..... எதிர...