Monday, April 6, 2020

*#நாடாளுமன்ற_உறுப்பினர்களுக்கு #தொகுதி_மேம்பாட்டு_நிதி_என்பது #அவசரமாக_ஏன்_உருவாக்கப்பட்டது*

*#நாடாளுமன்ற_உறுப்பினர்களுக்கு #தொகுதி_மேம்பாட்டு_நிதி_என்பது #அவசரமாக_ஏன்_உருவாக்கப்பட்டது*-1
————————————————-
இன்றைக்கு நடந்த மத்திய அமைச்சரவையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய சம்பளத்தில் 30 சதவிகிதமும் இரண்டு ஆண்டுகளுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடும் நிறுத்தப்படுகிறது என முடிவெடுத்து அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது கீழே குறிப்பிடப்பட்டுள்ள அறிவிப்புகளும் செய்யப்பட்டுள்ளன.

*குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர், ஆளுநர்களின் ஊதியம் 30 சதவீதம் குறைப்பு.*

*பிரதமர், மத்திய அமைச்சர்கள் ஊதியமும் 30 சதவீதம் குறைப்பு.*

*அனைத்து எம்.பி-க்களின் ஓராண்டு ஊதியமும் 30 சதவீதம் குறைப்பு.*

*ஊதிய குறைப்பால் சேமிக்கப்படும் நிதி கொரோனா நிவாரண நிதியில் சேர்க்கப்படும்.*

*மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு - அவசர சட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது.*

*எம்.பி-க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்திவைப்பு.*

நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி (MPLAD)என்பது 1993ல் திரு. நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது ஒரே நாளில் முடிவெடுத்து 8 மணி நேரத்தில் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி அறிவிப்பு நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட முடிவு. ஒரு கொள்கை முடிவு எடுப்பதற்கு பல மாதங்கள் எடுக்கும். அந்த கட்டத்தில் நரசிம்மராவ் ஆட்சி கவிழாமல் இருக்க ஜெ எம் எம் கட்சிக்கு லஞ்சம் கொடுத்ததாக வழக்கு எல்லாம் நடந்தது. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களை திருப்திப்படுத்தக் கூடிய வகையில் எட்டுமணி நேரத்தில் அனைத்து அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு அவசர அவசரமாக நாடாளுமன்ற ஒப்புதல்களும் பெறப்பட்டு நாடாளுமன்றத்தில்  உடனே அறிவிக்கப்பட்டது. இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இத்தனை குறுகிய காலத்தில் அறிவிப்புகள் செய்தது கிடையாது. அந்த நேரத்தில் நரசிம்மராவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை தன் பக்கம் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் இருந்தபடியால் அந்த அவசர அறிவிப்பை வெளியிட வேண்டியிருந்தது. இது குறித்தான் எனது பதிவு.

https://ksradhakrishnan-ksrblogs.blogspot.com/2018/01/105000.html

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
06.04.2020
#ksrposts

No comments:

Post a Comment

#விருதுநகர்மாவட்டத்தில்களப்பணியிலமுதல்வர்முகஸ்டாலின்!

#விருதுநகர்மாவட்டத்தில்களப்பணியிலமுதல்வர்முகஸ்டாலின்! அந்த மாவட்டத்தின் அமைச்சர்களான சாத்தூர் ராமச்சந்திரனையும் தங்கம் தென்னரசுவையும் அதற்கா...