Friday, March 3, 2023

வாக்காளர்களுக்குப்பணம்! #Vote_for_sale இதுவே இன்றைய அறம்

#வாக்காளர்களுக்குப்பணம்! #Vote_for_sale இதுவே இன்றைய அறம் 
————————————————————
தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர்,அதிகபட்சமாக எவ்வளவு செலவு செய்யலாம் - என்று தேர்தல் கமிஷன் வரம்பை நிர்ணயித்துள்ளது.

ஆனால், வேட்பாளர் சார்ந்த அரசியல் கட்சி செய்யும் செலவுக்கு வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை. இந்தக் குறைபாட்டை சரி செய்ய சட்டம் கொண்டு வர எந்தக் கட்சியும் தயாராக இல்லை. பல வேட்பாளர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள வரம்புக்குள் செலவு செய்வதில்லை என்பது உண்மைதான்.

"இதை ஏன் தேர்தல் கமிஷனால் தடுக்க முடியவில்லை என்று
பலரும் கேட்கிறார்கள். ஆனால், அது அவ்வளவு சுலபமாக நடக்கக் கூடிய காரியம் அல்ல. ஊரிலே 2,3 திருடன் இருந்து, 10 போலீஸ்காரர்
இருந்தால் திருட்டே நடக்காமல் பார்த்துக் கொள்ளலாம். அதுவே 99
பேர் திருடனாக இருந்து, ஒரு போலீஸ்காரர் மட்டும் இருந்தால்,
திருட்டு நடக்காமல் தடுக்க முடியுமா? அந்த நிலைமைதான் தேர்
தல் கமிஷனுக்கு.
“விதி மீறல்களில் ஈடுபடுகிறவர்கள் நூதனமான வழிமுறைகளைக்
கையாளுகிறார்கள். ஆர்.கே.நகர் இடைத் தேர்தலையே எடுத்துக்
கொள்ளுங்கள். அங்கே எந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்கு
300  பேரை செலவினக் கண்காணிப்பாளராகப் போட்டார்கள். காலையில்
பால் போடும்போது வீட்டில் பேப்பர் போடும்போது, கொடுப்பதாகப் பேசப்பட்டது. தேர்தல் பார்வையாளர்கள் அதிகரித்ததும், ஆர்.கே.நகரில் 10 வீடுகளுக்கு ஒரு ஆள் போய் பணம் கொடுக்க, அந்தப் பணத்தை குரோம்பேட்டை மாதிரி தள்ளியுள்ள இன்னொரு இடத்தில் வைத்துப் பட்டுவாடா நடந்தது. ஆகவே தேர்தல் கமிஷனை நொந்து பயன் இல்லை.
ஊழல் பணம்தான் இப்படி வாரி இறைக்கப்படுகிறது. அரசியல்வாதி
களின் அந்த கருப்புப் பணத்தை முடக்க வேண்டும். அதற்கு மத்திய அரசு, பணப் பயன்பாட்டில் பல நிதி சீர்த்திருத்த முயற்சிகளை எடுக்கிறது. லஞ்சப் பணத்தை வெளியே எடுக்க முடியாதபடி, இன்னும் கடுமையான நடவடிக்கை சட்டம் தேவை. கணக்கு வழக்கின்றி ஒட்டுக்குப் பணம் கொடுத்து ஜெயிக்கத் தயாராக இருப்பது, மக்களுக்குச் சேவை செய்வதற்கா?
போட்டதற்கு மேலே எடுப்பதற்குத் தான் என்பதை மக்கள் உணர வேண்
டும். எங்கிருந்து இவ்வளவு பணம் இவர்களுக்கு வந்தது என்று
யோசிக்க வேண்டும்.

'தமிழ்நாட்டைத் தாண்டி கேரளாவுக்குப் போய்ப் பாருங்கள். அங்கே எந்தக் கட்சியாவது, இந்த மாதிரி ஒரு தேர்தலில் வாக்காளரிடம் போய் பணம் கொடுக்கச் சொல்லுங்கள் பார்ப்போம். ஓங்கிக் கன்னத்தில் அறைவார்கள். இங்கேயும் வாக்காளர்களுக்கு அந்த உணர்வு வர வேண்டும். மக்களாகப் பார்த்து மாறாதவரை, ஒட்டுக்குப் பணம் என்பதை நிர்வாக இயந்திரம் மூலம் எல்லாம் தடுக்க முடியாது.

"தேர்தல் கமிஷன் பார்வையாளர்களுக்குக் கீழே பணிபுரிகிறவர்கள் மாநில அரசு அதிகாரிகள் தான். அவர்களில் சிலர் நேர்மை யானவர்களாக, கறாரானவர்களாக இருப்பார்கள். அதே சமயம் பலர், 'நமக்கு எதற்கு வம்பு; ஒத்துழைக்காவிட்டால் தேர்தல் முடிந்ததும் டிரான்ஸ்ஃபர் செய்து விடுவார்கள்; பழி வாங்குவார்கள்" என்று பயப்படுவார்கள். ஆகவே இதற்குத் தீர்வு என்பது. ஒருபுறம் – ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிரம். மற்றொன்று முக்கியமாக வாக்காளர்களிடம் ஏற்பட வேண்டிய வேண்டிய மனமாற்றம். பைத் தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர்,அதிகபட்சமாக எவ்வளவு செலவு செய்யலாம் - என்று தேர்தல் கமிஷன் வரம்பை நிர்ணயித்துள்ளது.
அதே போல நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளருக்கும் உச்சவரம்பு உண்டு. ஆனால், வேட்பாளர் சார்ந்த அரசியல் கட்சி செய்யும் செலவுக்கு வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை. இந்தக் குறைபாட்டை சரி செய்ய சட்டம் கொண்டு வர எந்தக் கட்சியும் தயாராக இல்லை. பல வேட்பாளர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள வரம்புக்குள் செலவு செய்வதில்லை என்பது உண்மைதான்.

"இதை ஏன் தேர்தல் கமிஷனால் தடுக்க முடியவில்லை என்று
பலரும் கேட்கிறார்கள். ஆனால், அது அவ்வளவு சுலபமாக நடக்கக் கூடிய காரியம் அல்ல. ஊரிலே 2,3 திருடன் இருந்து, 10 போலீஸ்காரர்
இருந்தால் திருட்டே நடக்காமல் பார்த்துக் கொள்ளலாம். அதுவே 99
பேர் திருடனாக இருந்து, ஒரு போலீஸ்காரர் மட்டும் இருந்தால்,
திருட்டு நடக்காமல் தடுக்க முடியுமா? அந்த நிலைமைதான் தேர்
தல் கமிஷனுக்கு.
“விதி மீறல்களில் ஈடுபடுகிறவர்கள் நூதனமான வழிமுறைகளைக்
கையாளுகிறார்கள். ஆர்.கே.நகர் இடைத் தேர்தலையே எடுத்துக்
கொள்ளுங்கள். அங்கே எந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்கு
300  பேரை செலவினக் கண்காணிப்பாளராகப் போட்டார்கள். காலையில்
பால் போடும்போது வீட்டில் பேப்பர் போடும்போது, கொடுப்பதாகப் பேசப்பட்டது. தேர்தல் பார்வையாளர்கள் அதிகரித்ததும், ஆர்.கே.நகரில் 10 வீடுகளுக்கு ஒரு ஆள் போய் பணம் கொடுக்க, அந்தப் பணத்தை குரோம்பேட்டை மாதிரி தள்ளியுள்ள இன்னொரு இடத்தில் வைத்துப் பட்டுவாடா நடந்தது. ஆகவே தேர்தல் கமிஷனை நொந்து பயன் இல்லை.
ஊழல் பணம்தான் இப்படி வாரி இறைக்கப்படுகிறது. அரசியல்வாதி
களின் அந்த கருப்புப் பணத்தை முடக்க வேண்டும். அதற்கு மத்திய அரசு, பணப் பயன்பாட்டில் பல நிதி சீர்த்திருத்த முயற்சிகளை எடுக்கிறது. லஞ்சப் பணத்தை வெளியே எடுக்க முடியாதபடி, இன்னும் கடுமையான நடவடிக்கை சட்டம் தேவை. கணக்கு வழக்கின்றி ஒட்டுக்குப் பணம் கொடுத்து ஜெயிக்கத் தயாராக இருப்பது, மக்களுக்குச் சேவை செய்வதற்கா?
போட்டதற்கு மேலே எடுப்பதற்குத் தான் என்பதை மக்கள் உணர வேண்
டும். எங்கிருந்து இவ்வளவு பணம் இவர்களுக்கு வந்தது என்று
யோசிக்க வேண்டும்.

'தமிழ்நாட்டைத் தாண்டி கேரளாவுக்குப் போய்ப் பாருங்கள். அங்கே எந்தக் கட்சியாவது, இந்த மாதிரி ஒரு தேர்தலில் வாக்காளரிடம் போய் பணம் கொடுக்கச் சொல்லுங்கள் பார்ப்போம். ஓங்கிக் கன்னத்தில் அறைவார்கள். இங்கேயும் வாக்காளர்களுக்கு அந்த உணர்வு வர வேண்டும். மக்களாகப் பார்த்து மாறாதவரை, ஒட்டுக்குப் பணம் என்பதை நிர்வாக இயந்திரம் மூலம் எல்லாம் தடுக்க முடியாது.

"தேர்தல் கமிஷன் பார்வையாளர்களுக்குக் கீழே பணிபுரிகிறவர்கள் மாநில அரசு அதிகாரிகள் தான். அவர்களில் சிலர் நேர்மை யானவர்களாக, கறாரானவர்களாக இருப்பார்கள். அதே சமயம் பலர், 'நமக்கு எதற்கு வம்பு; ஒத்துழைக்காவிட்டால் தேர்தல் முடிந்ததும் டிரான்ஸ்ஃபர் செய்து விடுவார்கள்; பழி வாங்குவார்கள்" என்று பயப்படுவார்கள். ஆகவே இதற்குத் தீர்வு என்பது. ஒருபுறம் – ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிரம். மற்றொன்று முக்கியமாக வாக்காளர்களிடம் ஏற்பட வேண்டிய வேண்டிய மனமாற்றம். திருமங்கலம், ஈரோடு formula என பல விதவிதமான formulas வரும்.

 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு திமுக இரண்டு ஆண்டு ஆட்சிக்கு கிடைத்த வெற்றி என முதல்வர் ஸ்டாலின்  சொல்கிறார். ஆனால் வாக்குக்களின் சந்தை விலையை உயர்த்தி வாங்கிய வெற்றி என கூற்று… பெறப்பட்ட வெற்றி அல்ல.அரசியல் கட்சிகள் தங்கள் முகங்களை மறைத்துக் கொண்டு, மாற்றிக் கொண்டு, கூட்டணி, பண பலம் ஆகியவற்றை நம்பி இடைத்தேர்தலை சந்திந்தன. தொகுதி வாக்காளர்களுக்கு, ஒவ்வொரு நாளும் பணம், ஸ்மார்ட் வாட்ச், வெள்ளிக்கொலுசு என பரிசு மழை பொழிந்த தகவல் செய்திகள் வெளியாகி, தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.கிடைத்துள்ள முடிவுகள் மூலம் வாக்காளர்களின் (தமிழக மக்களின்) மனநிலையை புரிந்துகொள்ள முடியாத நிலைக்கு, அரசியல் கட்சிகள் தள்ளப்பட்டுவிட்ட என்பதே நிதர்சனம். 

#KSR_Post
3-3-2023.

No comments:

Post a Comment

*What lies behind you and what lies before you are tiny matters compared to what lies within you*.

*What lies behind you and what lies before you are tiny matters compared to what lies within you*. Believe in yourself. You know personal de...