Saturday, November 18, 2023

#*திமுக* #*இதுதான் சொன்னதை செய்வோம்*, செய்வதை சொல்வோம் என்பதா?* #*திருவண்ணாமலையில்_சிப்காட்* *திமுக, விவசாயிகளுக்கு உறுதியாக சொன்னது என்ன? செய்தது என்ன?*



————————————
திருவண்ணாமலையில் சிப்காட் தொழிற்பேட்டைக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்த முயலும் இந்த அரசு அதிமுக  எடப்பாடி ஆட்சியின் போது சேலம் வரையிலான எட்டு வழி சாலைக்காக நிலங்களை சர்வே செய்த போது கடும் எதிர்ப்பை தெரிவித்த இன்றைய முதல்வர் ஸ்டாலின், (உடன் எ. வ. வேலு  போன்றவர்கள்), அய்யோ அனைத்தும் விவசாய நிலங்கள் பாவம் விவசாயிகள் அவர்கள் வயிற்றில் அடிக்காதீர்கள் என்றெல்லாம் அறிக்கைகளை  வெளியிட்ட உத்தமராய்த் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார்.




வேளாண் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தபோது டெல்லியில் எவ்வளவு விவசாயிகள், எத்தனை காலம் போராடினார்கள்? எத்தனை பேர் உயிரை விட்டார்கள்?
பல மாதங்கள் கழித்தே வேளாண் சட்டம் வாபஸ் பெறப்பட்டது.
வாபஸ் பெற்றதற்கு விலை பல விவசாயிகளின் உயிர்கள்.
அப்போது ஒன்றிய அரசின் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தது பலருக்கு நினைவில் இருக்கலாம். தி.மு.க.  அப்போது  மத்திய அரசின் மீது கடும் விமர்சனத்தை முன் வைத்தது.

அப்படி கூக்குரலிட்டவர், திருவண்ணாமலையில் சிப்காட் தொழில் பேட்டை அமைப்பதற்கு மட்டும் அவர் என்ன விதமாக எந்த நியாயத்தில் விவசாய நிலங்களை எடுப்பதற்கு அதிகாரம் உள்ளவராக மாறுகிறார்?  விவசாய நிலங்களை தொழிற்சாலைகளாக மாற்றுவதற்கு தடை இருக்கிறது என்பது அவருக்கு தெரியாதா?

திருவண்ணாமலையில் சிப்காட் நிலம் எடுக்க போராடிய உழவர்களைஅடக்கி பார்த்தது திரு. மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு

 பொது மக்கள் மற்றும் உழவர்களிடமிருந்து கடும்எதிர்ப்பு வந்ததை அடுத்து உழவர்கள் மீதானகுண்டர் சட்டத்தை ரத்து செய்தது

உழவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் ஏவப்பட்டது என்பது அரச பயங்கரவாதங்களில் ஒன்று.

 உழவர்களை துப்பாக்கியால் சுட்டு கொன்றிருந்தால் உயிர் பலி கொடுக்கப்பட்டிருக்கும்
நல்ல வேளை குண்டர் சட்டம் தான் போட்டிருந்தார்கள்

திமுக ஆட்சி காலத்தில் 13 உழவர்கள் அரச பயங்கரவாதத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதை
இச்சமயத்தில் நினைவு படுத்த வேண்டிள்ளது

மக்களுக்கான அரசா?

அவரிடம் நாம் கேட்பது என்ன? அதிமுகவிலிருந்து வருகிற எல்லோரையும் தனது கட்சிக்குள் அரவணைத்துக் கொள்கிற முதல்வர்  எ.வ. வேலு என்கிற ஒரு பழைய  மோட்டர் பம்பு செட் ரிப்பேர் 
தொ ழில் பின் பஸ் கண்டக்டரை அவர் எப்படி வளர்ந்தார் எப்படி அதிமுக காலத்தில் ப .உ. சண்முகம் தயவில் கட்டுப்பட்டு இருந்தார்   திமுக விற்குள் கட்சி மாறிய காலத்தில் எவ்வாறு நைச்சியமான தருகிற முகவரானார் என்பதெல்லாம் தெரிந்துதானே அவருக்கு பொதுப்பணி துறையில் அமைச்சர் பதவியை வழங்கியுள்ளார்கள். அப்படியான பொதுப்பணி அமைச்சர் தான் இப்பொழுது திருவண்ணாமலையில் நிலங்களைக் கையகப்படுத்துகிறாரா?

எ.வ. வேலு கேட்கிறர்;
1. விவசாய விளை நிலங்கள் அழித்துதான் தொழிற்சாலைகள் கட்டனும் என்கிறார். ஆனால் 2021 திமுக தேர்தல் அறிக்கையில்
இதற்கு எதிராக, விவசாய நிலங்களை அரசு, பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் தொழில் துவங்க தேவைப்படும் நிலத்தை ஆர்ஜிதம் செய்ய மாட்டோம்  என உறுதியும் கொடுத்தனர்.
ஆனால்  அந்த  உறுதி மொழியை திமுக ஸ்டாலின் ஆட்சி மீறியது. 
(1894ம் ஆண்டில் ஆங்கிலேயர் இயற்றிய சட்டமே இதுநாள் வரை பின்பற்றப்பட்டு வந்தது. இச்சட்டம் மூலம், நில உரிமையாளர்களின் ஒப்புதல் பெறாமல், அரசே ஒரு விலையை நிர்ணயித்து, நிலத்தை ஆர்ஜிதம் செய்தது.)

2. யாரோ  தூண்டுதலின் பேரில்  கிருஷ்ணகிரி ஆட்கள்   திருவண்ணாமலையில் போராட்டம் நடத்துகின்றனர் என எ. வ. வேலு சொல்கிறார்.  

ஏன்கூடாதா? உங்க நியாயம்?
அப்படி என்றால் ;தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சென்ற ஆட்சியில் போராடியவர்களை தூத்துக்குடி பகுதியை சாராத வெளியே, தமிழகத்தின் பல பகுதியில் இருந்து தொடர்பு இல்லாத ஆட்கள்  என்ற போது
அன்று ஸ்டாலின் என்ன சொன்னார் என்பதை வேலு கவனித்து பேசனும்

இந்தியாவில் பிறந்த காந்தி தென்னாப்பிரிக்காவில் போராடலாம்.

அர்ஜென்டினாவில் பிறந்த சேகுவேரா கியூபாவில் போராடலாம்.

தமிழ்நாட்டில் பிறந்த பெரியார் கேரளாவின் வைக்கத்தில் போராடலாம்.

இன்றைக்கு வேலுவின் சொத்தினை வருமானவரித்துறையினர் ஆய்வு செய்யும் போது அத்தனை கோடிகளுக்கு அவர் எப்படி சொந்தக்காரர் ஆனார் என்பதை அவரைக்  கட்சியில் சேர்த்துக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சந்தர்ப்பவாத முதல்வர்தான் அதற்கான நியாயமான காரணங்களைச் சொல்ல வேண்டும்? இதற்கு முன் இதே வேலைகளை செய்து கொண்டிருந்த ஒரு குடும்ப உறுப்பினர் அவர் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை?

எ. வ. வேலு சொல்கிறார் எல்லாம் அவரது சுய சம்பாத்தியத்தில் கிடைத்த சேர்த்த சொத்துக்களாம்.
கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால் கேட்பவருக்கு புத்தி இருக்காது என்று நினைப்பார்கள் போலும். இந்த ஆட்சி உள்ளங்கை நெல்லிக்கனி போல தமிழ்நாட்டை கொள்ளை அடித்து தங்களுக்கான தனித்த சொத்துக்களாக மாற்றிக்கொண்டு ஒரு குடும்ப அரசியலை நடந்திக் கொண்டு வருகிறது என்பதற்கு அதிக விளக்கங்கள் தேவையில்லை.

இன்னமும் செந்தில் பாலாஜி இரண்டு கோல் போஸ்ட்களுக்கிடையே  உருட்டப்படுகிறார். அவரைக் கட்சியை விட்டு நீக்கி ஆயிற்று என்று சொல்வதற்கு துப்பில்லை.
இருபத்தி ஐந்து லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்கிற வாக்குறுதிகள் வேறு.! இப்படி எல்லாம் விளம்பரம் செய்கிறார்கள் இதற்கு ஒரு முடிவு இல்லையா? தமிழ்நாட்டில் மட்டுமல்ல அண்டை மாநிலங்களிலும் பல்வேறு வெளிநாடுகளிலும் தங்களது குடும்ப மூலதனச் செல்வாக்கை  விஸ்தரித்திருக்கும் இந்தக்குடும்ப அரசியலை இந்த எ வ வேலு செந்தில் பாலாஜி போன்றவர்கள் தான் காப்பாற்றுகிறார்கள்.

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள்  பொறுப்பிலேயே அனைத்தையும் ஒப்படைத்து விடுகிறார் முதல்வர் ஸ்டாலின்! இதனால், ‘அதிகாரிகள் வைத்தது தான் சட்டம்’ என்றாகிவிட்டது, அதிகாரிகள் ராஜ்ஜியத்தின் உக்கிரம் தாங்க முடியாமல், சகலரும் புழுங்கி தவிக்கிறார்கள்!

மக்களை யார் காப்பாற்றுவார்கள்?

பணம் கொடுத்தால் ஓட்டு
பன்னாட்டு கொள்ளையில் கூட்டு

இதை தான் சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பதா?

#விவசாயிகள்_மீதுகுண்டர்சட்டம்

.#KSRPost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
18-11-2023.


No comments:

Post a Comment

*Run your own race. No one cares what you are doing*

*Run your own race. No one cares what you are doing*. Think yourself as a powerful creator. You will see opportunities to get your goal, and...