Monday, November 13, 2023

#சுயநல ஆட்டம்போட்டு கொண்டிருக்கும் அமைப்பைதான்; ஜனநாயக மாண்பா?….



#சுயநல  ஆட்டம்போட்டு கொண்டிருக்கும் 
அமைப்பைதான்;  ஜனநாயக மாண்பா?….

—————————————
உலகமே ஒரு நாடக மேடை... நாமெல்லாம் நடிகர்கள்...

ஷேக்ஸ்பியரின் இந்த வாக்கியம், பல செய்திகளை in between the lines
பறைசாற்றுகிறது. 

தேவைக்கான போட்டியே அனைத்து உயிர்களின் ஆதார பண்பாக இருக்கிறது. ஆனால் இங்கு நிலைமை வேறு;மனித நிலை என்பது வெறும் போட்டி மட்டுமல்ல .அது சார்புநிலைத் தத்துவங்களோடும் பிற உயிர்களை தான் அல்லாத பிறரையும் மதிக்கும் உயர்ந்த பண்பை லட்சியமாக கொண்டு தான் மனித உயிராக  பரிணமித்தது.

நிலங்களில் நிலைத்த கூட்டு வாழ்க்கையைத் தொடங்கிய பின்னர்தான் மனித வாழ்க்கையில் வெவ்வேறு குணங்கள் உள்ள வெவ்வேறு பண்புகள் உள்ள மனிதர்கள் தோன்றினார்கள்.

பொதுவாக மக்கள் வழக்கில் சொல்வது போல் ஐந்து விரலும் ஒன்றே போலவா இருக்கிறது அதுபோல ஒவ்வொரு வீட்டிலும்  பிறந்த குழந்தைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக தானே இருக்கிறார்கள். ஹிட்லரும் காரல் மார்க்ஸும் மனிதர்கள்தான் என்றாலும் நாம் இவர்களில் யாரை எப்படிப் புரிந்து கொள்கிறோம்.

போட்டியும் பொறாமையும் தீய குணங்களும் கொண்டு அடுத்தவரை சாய்த்து விட்டால்தான் நாம் அந்த பதவிக்கும்  அதிகாரத்திற்கும் வர முடியும் அடுத்தவரை கெடுத்து பிழைப்பதுதான் திறமை என்று நம்பு அளவிற்கு இந்த பின் நவீனத்துவ காலம் அனைத்து கேடுகளையும் ஒன்றாகிவிட்டது.

நாம் ஜனநாயகம் என்று சொல்கிறோமே இந்த ஜனநாயகத்திற்குள் எவ்வளவு வன்முறையான போக்குகள் அடுத்து கெடுக்கும் குணங்கள் இருக்கிறது என்பதை ஆய்வு செய்து தான் பார்க்க வேண்டும்.

இக்காலத்தில் ஜனநாயகத்திற்குள் நுண்பாசிசப் போக்குகள் உருவாகி இருக்கிறது. மக்களால்தான் நாம் ஆட்சிக்கு வந்திருக்கிறோம் என்பதை பதவி ஏற்றபின் காற்றில் பறக்க விடுவது தான் வழக்கமாக இருக்கிறது.

தகுதியேதடை என்ற நிலையில்,சக போட்டியார்களை அடித்து வீழ்த்திவிட்டு திறனற்றுப் போகச் செய்த பின் தாங்கள் ஜெயித்ததாக மார் தட்டிக் கொள்கிறார்கள்.

குறிப்பாக இன்றைய ஜனநாயகம் மக்களை வலிமை அற்றவர்களாகவே சித்தரிக்கிறது.
வெற்று விளம்பரங்களின் மூலம் பல விதமான இலவசங்களை அளிப்பதன் மூலமாக அரசுகள் மக்களை மௌனம் ஆக்கி உண்மையில் நாட்டு நலத் திட்டங்கள் மீது கேள்வி எழுப்ப திராணியற்றவர்களாக இருக்கச் செய்கிறது.

அதன் அடியில் ஆள்வோரின் குடும்பம் அதைச் சுற்றியுள்ள உறவுகள் யாவும் பன் மடங்கு பணபலம் பெற்றவர்களாக மாறும்போது திறமை உள்ளவர்கள் திறமை அற்றவர்கள் என்பதை பிரிக்கும் சூழ்ச்சி தெரிந்து விடுகிறது.

உண்மையில் அரச பதவி ஏற்பவர்கள் நிர்வாக திறன் உள்ளவர்களா மேலும் மக்கள் நிர்வாகத்தின் மீது தன் சொந்த பற்றுக்களை ஒழித்து அவர்களின் வளர்ச்சிக்கு எல்லா துறைகளிலும் ஆன முன்னேற்றத்திற்கு  பாதுகாப்பாளர்களாய் இருக்கிறார்களா என்பது தான் அரசியலில் அவசியத்தேவை என்பதைத்தான் நாம் மீண்டும் மீண்டும் நினைவூட்டுகிறோம்.

இங்கு அரசியல் பயன்பாடுகள்;

சாராயக் கடை வைத்திருக்கிறார்கள். வட்டிக்கு விடுகிறார்கள். கல்வியை வியாபாரமாக ஆக்கி கூவிக் கூவி விலை பேசுகிறார்கள். அரசியலில் கோடிக்கணக்காக பொதுமக்களைச் சுரண்டிச் சம்பாதிக்கிறார்கள். திரைப்படத்தை எடுக்கிறார்கள். 
அரசியல் இங்கு  தன் மனிதனின் வியாபாரம், தொழில்….

ஒரு காலத்தில் இந்திராவே இந்தியா என்று முழக்கமிட்ட அலைவரிசை மிக மோசமான முறையில் முடிந்துவிட்டது! அதேபோல் குடும்பம்தான் அரசியல்,ஆட்சி என்கிற வரலாறும் சிதையும் போது உங்களுடைய (இவர்கள்) கிச்சன் கேபினெட் என யாரும்  உடன்வர மாட்டார்கள்!  மேரி அன்டோனெட் அவரது கணவர் லூயிஸ் XVI பிரெஞ்சுப் புரட்சி என வரலாற்றில் உள்ளது. படியுங்கள். டார்வின் கோட்ப்பாடு சொல்வது போல தவறான சுய பிழைப்புக்கு உண்மையில் தங்கள் சுய லாபங்களுக்காக அப்போதும் உங்களைக் கைவிடுவார்கள். அதைக் காப்பாற்ற மாற்றுக் கட்சிகளுக்கு இடம்பெயர்வார்கள்! ஏனெனில் அவர்கள் தங்களுடைய உடைமைகளை பாதுகாக்கவே திரும்புவார்கள்! பலவற்றைகாலம்  உண்டாக்கும் .அப்போது உங்களுக்கு அறம் என்றால் என்ன ? என புரியும்.நீங்களும்  விசாரணைக்குள்  வருவீர்கள். அதற்கான சலனங்கள் தொடங்கிவிட்டன. எதுவும் நிகழலாம் எல்லாவற்றுக்கும் எப்போதும் தயாராக இருங்கள் இது இயற்கையின் நீதி.

சுய நல ஆட்டம் போட்டு கொண்டிருக்கும் இந்த அமைப்பை தான் நீங்கள் ஜனநாயகம் மாண்ப?…..
 அது ஒரு வெட்கக்கேடு!

(தென்தமிழகத்தில்  ஒர் காலத்தில் சர்வ அதிகாரம் பெற்ற பாரம்பரிய அரண்மனை இன்று பாழ்பட்ட நிலையில்)

கே.எஸ். இராதா கிருஷ்ணன்.
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#KSRPost
13-11-2023.


No comments:

Post a Comment

#Reader's Digest UK Discontinues After 86 Years

#Reader's Digest UK Discontinues After 86 Years ஏப்ரல் 30, 2024 புத்தகம் படிப்பவர்களுக்கு ஒரு சோகமான நாள்.. ரீடர்ஸ் டைஜஸ்ட் மூடப்பட்டுள்...