https://x.com/ram_guha/status/1840372850726695121?s=46&t=mJ-Q4yLvZG2SDXSXi7-7ow
ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் வி.என்.சுதாகரன் 1995 இல் திருமணத்திற்கு எதிராக போராடினார் என்றெல்லாம் திமுக ஐடி விங்கில் இருந்து மனம் போன போக்கில் அள்ளி விடுகிறார்கள். பதவி அதிகாரம் இருந்தால் யாரை வேண்டுமானாலும் மெய் அற்று புகழ்-துதி பாடி உச்சத்தில் வைத்து வரலாற்று தவறை செய்யலாம் என்ற நிலை. யாரையும் பொய் வழியில் எப்படி வேண்டுமானாலும் பழி தூற்றலாம் அவரது இருப்பை சமன் குறைக்கலாம் என்றெல்லாம் திட்டமிட்டுச் செயல்படுகிறார்கள். செந்தில் பாலாஜியை இவர்களே குற்றமற்ற உத்தமர் எனவும் எழுதி உண்மை ஆக்கி விடுவும் செய்வார்கள்⁉️ முதலமைச்சர் ஸ்டாலினே குற்றவாளி என சொன்ன செந்தில் பாலாஜிக்கு அதே முதலமைச்சர் அவரை போற்றும் வழக்கறிஞராகக் கூடாது.
யாரைப் பற்றி எது கூறினாலும் தவறான திருத்தல் வாதங்களை திமுக தனது ஐடி விங் இளைஞர்களை வைத்து செய்து வருகிறது. காட்சி பிழையாக புரளியாக கண்டதையும் சொன்னால் மக்கள் நம்புவார்கள் என்கிற மாதிரி மனம் போன போக்கில் அவர்கள் நடந்து கொள்வது முறையற்றதும் அனுபவம் அற்றது ஆகும். நாம் என்ன செய்கிறோம் என்பதை ஏற்று ஒருவர் செய்ய வேண்டும்! தவறான பாதையில் போனால் தவறான இடத்தைத் தான் சேர முடியும்!
இன்றைய செய்தி ஊடகங்கள் 90% சதவீதம் யூகத்திலே எழுதப்படுகின்றன! திமுகவுக்கு ஏதோ ஒரு வகையில் முரட்டுத்தனமாக முட்டுக் கொடுக்கும் தனிப் பத்திரிகையாளர்ப் பட்டியலே உண்டு! இவர்களெல்லாம் திட்டமிட்டே வரலாற்றை திரிபு வாதம் செய்து அதைப் பரப்புகிறார்கள்! இம் மாதிரியான பத்திரிகையாளர்கள் youtuber-கள் குறித்த முழுமையான பட்டியல் என்னிடம் இருக்கிறது.
அரசுக்கு சொம்பு தூக்குவது,அரசின் விருதுகளுக்காக அலைந்தால் தமிழ் ஒருபோதும் சர்வதேச தரத்தை எட்டாது.
முற்றிலும் உண்மை.. எல்லாமே செயற்கையான வாழ்த்துகளே…
ராபின்சன் பூங்கால கொட்டும் மழைல அண்ணா ஆரம்பிச்ச கட்சி முழுவதும் தனியார் கார்பரேட் நிறுவனமாக மாறிவிட்டது..
நாளை உண்மை வெளிப்படும் போது இவர்களிடம் எந்த முகமும் இருக்காது என்று நினைக்கிறேன்!
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
30-9-2024.
@trending
#DMKFailsTN
#dmkfails
@actorvijay
@tvkvijayhq
ஒரு கட்சி தலைவர் தன் சுய பெருமையை விரும்பினால் பத்திரிக்கைகளை எப்படி சுயமாக செயல்பட விரும்புவார், ஒரு கட்சி தலைவரை மாவீரராக காட்ட விரும்பினால் அங்கு கட்சியின் அரசியல், பண்பாடு, கொள்கைகள் எப்படி இருக்கும், ஒரு கட்சித்தலைவர் தன் வாரிசுகளை முன் நிறுத்தினால் அங்கு கட்சிக்குள் எப்படி ஜனநாயகம் பேசப்படும்? - ராமச்சந்திர குஹா காஷ்மீர் தொடங்கி, இந்திரா காலம் தொடங்கி இந்தியாவில் உள்ள கட்சிகள், பிரதமர் மோடிக்காக கட்டப்படும் மாவீரர் அரசியல் பிம்பம், தமிழகத்தில் இந்தியாவிலேயே முன்னணியாக சமூக நீதிக்காக இயங்கிய அண்ணாவால் தொடங்கப்பட்ட திமுகவின் இன்றைய நிலை என வெளுத்து வாங்கியுள்ளார் ராமசந்திர குஹா. பினராயி விஜயனின் ஆட்டத்தையும் விட்டு வைக்கவில்லை. telegraphindia.com/opinion/suprem…
No comments:
Post a Comment