Monday, November 11, 2024

#முதல்வர்ஸ்டாலின்_டெல்லியில்_பத்திரிக்கையாளர்கள்சந்திப்பு!



#முதல்வர்ஸ்டாலின்_டெல்லியில்_பத்திரிக்கையாளர்கள்சந்திப்பு! 
—————————————
முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் பத்திரிக்கையாளர்களிடம் (Journlalists) நேற்று பேசும் போது முதல்வர் கலைஞர் பேசுவதைப் போலவே தானும் தமிழிலே பேசி இருக்கலாம். நானும் கடந்த20 ஆண்டு காலமாக அவரது பேச்சைக் கவனித்து வருகிறேன்! தமிழில் பேசும் போதும் அவருக்கு பிசிறு தட்டுகிறது ஆங்கிலத்தில் பேசும் போதும் தடுமாறுகிறது பிசிறு தட்டுகிறது. உச்சரிப்பு பிழைகளும் தகவல்ப் பிழைகளும் கூட  ஸ்டாலின் பேச்சசில் ஏற்படுகின்றன.

அவர் டெல்லியில் பேசியது சமூக வலைத்தளத்தில் கிண்டலாகும்படி already tolded என வைரலாகி வலம் வருகிறது. தலைவர் கலைஞருக்கு இம்மாதிரியான நேரங்களில் அண்ணன் முரசொலி மாறன் பெரிய துணையாக இருந்தார். கலைஞரின் தனி உதவியாளர் சண்முகநாதன் அவர்கள் அவருக்கு பக்கத்துணையாக இருந்தார். 

முதல்வர் அவர்களே உங்களுக்கு அப்படியான ஒரு நல்ல டீம் இல்லையே! கூடவே இத்தனை ஐஏஎஸ் ஆபிஸர் வைத்திருந்தும் கூட உங்களுக்குச் சரியான முறையில் அதை எழுதிக் கொடுத்து அவையில் பிழை படாமல் பேச வைத்து மதிப்பு பெற வைக்க முடியவில்லையே? 

கடந்த காலங்களில் அப்படியாக உங்களுக்கு உதவி செய்து அருகில் இருந்தவர்களை எல்லாம் உப்பு பெறாத காரணங்களை காட்டி வெளியே நிறுத்தி விட்டீர்கள்! 

யார் இந்த தினேஷ்? யார் இந்த ஐஏஎஸ் அதிகாரிகள்? நீங்கள் முதலமைச்சர் பொறுப்பில் வரும் முன் சிலகாலமாக உள்ளராகள்! இதையெல்லாம் கவனிக்க வேண்டாமா?

உங்களுக்கு ஞாபகம் இருக்கும் தானே!  உங்களை லண்டன் அழைத்துச் சென்று பிரிட்டிஷ் பார்லிமெண்ட் கட்டடத்தில் 2012 இல் ஈழத் தமிழர் உரிமை மாநாட்டில் தங்களுக்கு சுருக்கமான பேச்சை ஆங்கிலத்தில் சிறப்பாக  நானும் ஐஏஎஸ் ராஜமாணிக்கம் இருவரும் உங்களுக்கு எழுதிக் கொடுத்துப் பேச வைத்தோம்.  
அங்கு உங்கள் அருகில் நான் நின்று கொண்டிருந்தேன்! அதை நீங்கள் மிக எளிதாகப் சரியாக பேசி முடித்து வந்தீர்கள்!

அப்படியெல்லாம் எங்களைப் போன்ற ஆட்கள் உங்களுக்கு உதவியாக உங்களுக்கு என்ன சிரமமோ அன்று தெரியவில்லை? நீங்கள் எங்களைப் குறிப்பாக வேறு யாருடைய நலன்களுக்காகவோ வெளியே நிறுத்தி வைப்பதில்தான் இப்போது வரை கவனமாக இருக்கிறீர்கள்!

கலைஞரும் கூட ஆங்கிலத்தில் தனக்கு சரியாகப் பேச வரவில்லை என்கிற மனக்குறைடன் தான் இருந்தார். அதனால் மிகச்சிறந்த ஆற்றல் படைத்த அறிவாளிகளைப் பக்கத்தில் வைத்துக் கொண்டார்.

உங்கள் அருகில் இன்டலக்சுவல் விங் என்று எதுவுமே இல்லை! அவர்களெல்லாம் உங்களை இப்படித்தான் பொது இடங்களில் வைத்து சங்கடப்படுத்துகிறார்கள்!
உங்களைச் சுற்றியுள்ள டீம் சரி இல்லை! அவர்களே போதும் உங்களை அழித்துத் தான் விடுவார்கள்..

எடப்பாடிப் பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என்று தவறுதலாக  ஒரு மேடைப்பேச்சில் சொன்னார். அது அன்று பத்திரிகையில் மிகப்பெரிய செய்தியாக வந்தது. எல்லோரும் அவரை ஏகடியமும் கிண்டலும் செய்தார்கள். சரிதான்! ஆனால் நேற்று டெல்லியில் ஸ்டாலின் பேசுகிறபோது இது மாதிரியான ஏகடியமோ  கிண்டலோ  தமிழ்நாட்டுபத்திரிகைகள் எதிலும் வெளிவரவில்லை! இதில் இருந்தே தெரிகிறது ஊடகங்களும் பத்திரிகைகளும் திமுகவிற்கு எவ்வளவு முட்டுக் கொடுக்கின்றன என்பது மட்டுமல்லாமல் எவ்வளவு மோசமாக விலை போய் உள்ளன என்பதற்கு மேற் சொன்னசெய்திகளின்இருட்டடிப்புகளே சான்றாக இருக்கின்றன.
****
‘’ஒழுங்கின்மை பற்றிய புரிதல் இருக்கும்போதுதான் ஒழுங்கு உருவாகிறது. நம் தினசரி வாழ்வில் இருக்கும் ஒழுங்கின்மை; நமது பாசாங்குத்தனம், வேதனை, விரக்தி, குழப்பம் ஆகியவற்றின் புரிதல்.
அதை கவனிக்கத் தொடங்கும் போது, ​​அதைச் சரி செய்ய  நினைக்காமல், "அது சரியல்ல" என்று சொல்லாமல், "இப்படித்தான் இருக்க வேண்டும், அப்படித்தான் இருக்க வேண்டும்" என்று சொல்லாமல், வெறுமனே ஒழுங்கின்மையை கவனிக்கும்போது, ​​அதில் இருந்து ஒழுங்கு வருகிறது. ‘’

அந்த கவனிப்பே ஒழுங்கு.
- ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி.

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
28-9-2024
@actorvijay
 
@tvkvijayhq


 நேற்று காலையில் ஆங்கில இந்து பத்திரிகையில் ஒரு பெரிய காலம் எழுதியிருந்தார், மாலையில் tolded என்று சொல்லி முடிக்கிறார்..

No comments:

Post a Comment

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது இன்று

———————————————————-  இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் முடிந்து. இதில்   தமிழர்கள்    அதிகம்   வாழும்பகுதி யாழ்ப்பாணம்   இங்கு   6. எம்பிக்கள்,...