Tuesday, September 5, 2023

Teachers day ஆசிரியர் நாள்

குருவின்றி உயர்வில்லை.

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல்தானே.
                                                 - திருமூலர்.

ஆசிரியர்களின் திசைநோக்கிமனம் மொழி மெய்களால் 



மாணவப் பணிவுடன் வணங்குகிறேன்.


#வஉசியின்நூற்றாண்டு விழா #தூத்துக்குடி துறைமுகத்தில், #வஉசி கல்லூரியின் வெள்ளிவிழா (5-9-1972)

#வஉசியின்நூற்றாண்டு விழா #தூத்துக்குடி துறைமுகத்தில், #வஉசி கல்லூரியின்வெள்ளிவிழா (5-9-1972)
—————————————————————
சுதேசி இயக்கத்தின் தளபதி வ.உ.சி. 152 வது பிறந்த நாள் இதே நாள் 5-9-1972 காலை 10 மணியளவில் வ.உ.சி.யின் நூற்றாண்டு விழா தூத்துக்குடியில் துறைமுகத்திலும், வ.உ.சி.கல்லூரியின் வெள்ளிவிழா என இரண்டு விழாக்கள் நடந்தது . இந்த இரண்டிலும் கலந்து கொண்டேன். அப்போது ஸ்தாபன காங்கிரஸ் மானவர்அமைப்பில் இருந்தேன்.



முதலில் துறைமுக விழாவில வ. உ.சி நூற்றாண்டு விழா  நினைவு அஞ்சல் தலையை அன்றைய பிரதமர் இந்திர காந்தி வெளியிட தமிழக முதல்வர்  கலைஞர் பெற்று கொண்டார்.தமிழக ஆளுநர் கே. கே. ஷா அவர்கள் வ. உ. சி. நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டார்.




பின், அன்று 1 1/2 மணியளவில் வ.உ.சி.கல்லூரியின் வெள்ளிவிழாவில்
பிரதமர் இந்திர காந்தி , முதல்வர்  கலைஞர்.தமிழக ஆளுநர் கே. கே. ஷா, கூட்டுறவு அமைச்சர் சி.பா. ஆதித்தனார், 
ஏ. பி. சி. வீரபாகு, கல்லூரி முதல்வர் ஶ்ரீதரமேனன் என ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சில் முதல்வர் கலைஞர் மேடையில பேச ஆரம்பித்தவுடன் மாணவர்கள் சத்தமும் குழப்பம் ஏற்பட்டது. செருப்புகள் மேடைக்கு பறந்தன. (அப்போது மாணவர் போராட்டம், விவசாய போராட்டத்தில் துப்பாக்கிசூடுகள்
நடந்த நேரம்) உடனே திமுக நாடாளுமன்ற
உறுப்பினர் எம். எஸ். சிவசாமி மற்றும்  சிலரோடு கைநீட்டி ஓடி வந்தனர். காவல் துறையினர் லத்தியை கொண்டு அங்கிருந்த மாணவர்களை கடுமையாக தாக்கினர். இந்திரா காந்தி இதை கவனித்தார். அன்றைக்கு இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் இன்னும் இருக்கின்றனர்.
அவர்களுக்கு வயது இப்போது 66-70 வரை
இருக்கலாம்

ஏ. பி. சி. வீரபாகு ஆலோசனையை  ஏற்று உடனடியாக பாரட்டிய விடுதலைப் போராட்ட வீரரும், சட்டமன்ற உறுப்பினருமான எம். சி. வீரபாகு ஆதரவில் வ. உ. சிதம்பரம் கல்விச் சங்கம் உருவானது.
1946ஆம் ஆண்டில், வ. உ. சிதம்பரம் நினைவு நிதி திரட்டல் தொடங்கப்பட்டது. ராஜாஜி வ. உ. சி கல்விச் சங்கமானது 1947 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.பல தடைகளைத் தாண்டிய பிறகு, அப்போதைய சென்னை மாகாண முதல்வராக இருந்த பி. குமரசாமி ராஜா 1947 இல் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார்.அப்போதைய மெட்ராஸ் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்ற, இக்கல்லூரியில் பல்வேறு பிரிவுகளில் பட்டப்படிப்பு படிப்புகள் தொடங்கப்பட்டன. வெளி மாணவர்களுக்காக வளாகத்திற்குள் கட்டப்பட்ட மூன்று தங்கு விடுதிகள் உட்பட மொத்தம் ஐந்து விடுதிகள் அமைக்கப்பட்டன.இக்கல்லூரிஆனது 1966 ஆம் ஆண்டில், புதிதாக உருவாக்கப்பட்ட மதுரை பல்கலைக்கழகத்துடன் இணைந்தது

#வஉசியின்நூற்றாண்டுவிழா #தூத்துக்குடியில்_துறைமுகத்திலும், #வஉசிகல்லூரியின்_வெள்ளிவிழா (5-9-1972)

#VOC
#VOCCollege
#tuthukudi
#tuticorin
#தூத்துக்குடி

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
5-9-2023.


Monday, September 4, 2023

சனாதனம் #Sanatan

ஆழ்வார்களும் நாயன்மார்களும் கம்பரும்  நாராயணகுரு  சங்க இலக்கியங்கள் அனைவரும் சமம் என போற்றியதுதான் சனாதன தர்மம். அது அழியாது.

ஒரே பேச்சில் இந்திய பிரபலம் ஆகிவிட்டதுதான் மிச்சம் ஸ்டாலின் ஜூனியர். இது ஒரு வகை பிம்ப- போலி அரசியல் புகழ். இப்படி எப்போதும் கலைஞர் குடும்ப ராசி.இதில் வேறு ஒன்றும் இல்லை. சனாதனம் என்றால் என்னவென்றே இவர்களுக்கே தெரியாது. இவர்களின் வார்தைகளுக்கும் செயல்பாடுகளுக்கும் சம்பந்தமே கிடையாது.யாரோ கூலிக்கு எழுதி கொடுத்து, அந்த எழுத்துக்களை படிப்பது. அவ்வளவுதான்.வசனம் கூட இல்லை.விளையாட்டாக வாழ்கிற பேசுகிற விளையாட்டாக உயர்பதவிகளை பெறுகிற  empty trade politics காலம். இதையும் இங்கே மக்கள் ரசிக்கின்றனர். 
வாழ்க இந்த மக்கள்
வாழியவே இந்த கரும்-செம் மண்.

கலைஞர் குடும்பத்தில் பிறக்காத ஒருவர் திமுக தலைவராக வரமுடியுமா? அப்படி வர முடியாது என்றால் உங்களின் பார்வையின் படி திமுக வும் ஒரு "சனாதன" கட்சி தான்.என்ன உழைத்தாலும் அங்கு அவர்களின் பார்வை பட்டால்தான் 
இருக்கமுடியும்.

அரசியல் வாதிகளைப் போல் எழுத்திலும் பேச்சிலும் ஒன்று , குறிக்கோள் என்னவோ பணமும் பதவியும் என்றிருப்போரால் சத்திய தர்மமே பொய்யென்று ஆகிவிடுமா என்ன? சாதியை விட்டு, ஏற்றத் தாழ்வை விட்டு, வெறுப்பை விட்டு மனதளவில் வெளியே வந்தால் எல்லாரையும் உள்ளடக்கிய பரிபூரணமான சனாதன தர்மம் தரிசனம் தரும். 

சாதிகள் இல்லையடி பாப்பா… குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்," எனப்பாடிய பாரதி ஒரு சனாதனி.  வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார் ஒரு சனாதனி. உண்மை என்னவென்று உள்ளே போய்ப் பார்ப்பவர் சனாதனர். சுருக்கமாகச் சொன்னால் தன் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நேர்மைக்குத் தன்னை ஒப்புவித்தவர் எல்லாரும் சனாதனர்.

இருத்தல் ஒன்தறே சாசுவதமானத்து.  சனாதன தர்மம் என்பதற்கு எப்போதுமே அழியாமல் இருக்கும் தர்மம் என்று பொருள். ஜாதிகளுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. தமிழ்நாடு அரசு இப்போதே ஜாதிகளை ஒழித்துவிடலாம். இன்று முதல் ஜாதி கிடையாது என்று சொல்லட்டுமே. ஜாதி, அரசியல் அவசியம். சத்தியம் தர்மம்  இவை இரண்டும் ஆதி அந்தமற்றவை. மொழிகளில் இல்லை சனாதனம். ஜாதியில் இல்லை சனாதனம். பிரிவினையில் இல்லை சனாதனம். தனக்குத் தானே உண்மையாக இருப்பவரெல்லாரும் சனாதனர். யார் வேண்டுமானாலும் சனாதனி ஆகலாம்  ஒருவர் வாழ்க்கை அன்பும் அறனும் உடைத்தாயின் அவர் சனாதனி. 





#சனாதனம்
#Sanatan

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
4-9-2023. 


Sunday, September 3, 2023

#சனாதனம் #TamilNadu -Sanatan

*Minister without knowing constitutional consequences… also his ministerial oath* 
*உதயநிதி ஸ்டாலின் பேச்சு*….

Article 25 of Constitution of India gives your right to choose your religion.Article 26 gives you right to defend and propogate your religion.

What to do? Tamil Nadu minister without knowing about Constitution, who had taken oath to protect constitution and Nation.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனும், தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு எந்த அறிவு ஜீவி இப்படி பேச எழுதிக்கொடுத்தார் என தெரியவில்லை. இந்து மதத்தை கொசு, டெங்கு, மலேரியாவோடு ஒப்பிட்டுப் பேசுவதா? மத நல்லிணக்கம் கேள்விகுறியா…? இவரின் தாய் கோவில்- குளம், என சென்று பூஜை, புனஸ்காரங்கள் செய்வது ஏன்? அருகில் தமிழக இந்து அறநிலைத்துறை அமைச்சரை வைத்துக்கொண்டு பேசுவது எப்படி? It is fit case quo warranto (writ -நீதிப் பேராணைகள் வழியாக, நீதியை உச்சநீதி மன்றத்திலோ(அரசியலமைப்பு உட்பிரிவு(-பிரிவு 32 வழியாக), உயர்நீதி மன்றத்திலோ (பிரிவு-226 வழியாக)பெற முடியும். சனாதனம் என்பது இந்து மதத்தில் ஏற்றுக்கொண்ட நம்பிக்கை என்றழைக்கப்படுகிறது. 

முதலில் அரசின் அமைச்சர் பொறுப்பில் இருக்கும் இருவர் பங்கேற்கும் ஒரு விழாவில் பலர் நம்பும் ஒரு விஷயத்தை ஒழிப்போம் என்று கூறுவதற்கு யார் அதிகாரம் கொடுத்தது? அதுவும் சத்திய பிரமாணம் எடுத்து நான் நடுநிலையோடு என் பதவியில் அதிகார துஷ்பிரயோகம்.

சனாதனம் மட்டும் அல்ல திராவிடம், கலைஞர்கருணாநிதி, உதயசூரியன், உதயநிதி எல்லாம் சமஸ்கிருதப் பெயர்கள்தான். சமஸகிருத எதிர்க்கும் கனிமொழி தன் மகனுக்கு வைத்த பெயர் ஆதித்யா… இதுதான் இவர்களின் போக்கு.

#சனாதனம் 
#TamilNadu

Saturday, September 2, 2023

யாரோ யாரோ சிலர் எழுதி தரும் பேச்சுக்கள் என்ன என்று புரியாமல் பேசுவது காட்சிப்பிழை மட்டும் அல்ல அபத்தமானது.பேச்சு என்பது கலை…

யாரோ யாரோ சிலர் எழுதி தரும் பேச்சுக்கள் என்ன என்று புரியாமல் பேசுவது காட்சிப்பிழை மட்டும் அல்ல அபத்தமானது.பேச்சு என்பது கலை…யாரோ யாரோ தங்கள் நடையில் எழுதி தரும் பத்திரிக்கை செய்தி அறிக்கைகளை அதன் சூழல்,men and matter பொருள் தெரியாமல் தங்கள் பெயரில்  வெளியிடுவதும் குழப்பமானது மட்டுமல்ல  வேடிக்கையானது கூட. 

இதில் இன்னொரு ஜோக்; too many cooks spoil the broth.. என்ற மொழிக்கு  ஏற்ப ,இப்படி பேச்சுக்கள், அறிக்கைகள் சிலர் மாறி மாறி ஏற்பாடு செய்யும் உரை நடைகள் style மாறி குட்டும் வெளிப்படுகிறது.இப்படியான நபர்களை கொண்டடுகிறோம்.. 
அரசியல் புரிதலும், பகுப்பாய்வும் கொண்டது. காலத்தில் பேசப்படவேண்டிய தொனியுடனும் துணிவுடனும் தனி தன்நிலை தன்மை முன்னிலையாக இருக்க வேண்டும.. லிங்கன்,சர்ச்சில், விவேகானந்தர், காந்தி, நேரு, வி. கே. கிருஷ்ண மேனன் வாஜ்பாய், பசும் பொன் தேவர், சில்வர்டங் வி. எஸ். சாஸ்திரி, அண்ணா, ஜீவா, காங்கிரஸில் செங்கல்வராயன், கலைஞர், நாவலர் என பலர் இந்த விடயத்தில் சுயம்ம பிரகாசமாக திகழ்ந்தனர்.
வாழிய தமிழகம்!

#பேச்சுகலை
#பத்திரிக்கைசெய்திகள்
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
2-9-2023.


சொல்லாத நற் சொல்லுக்கு என்றும் அர்த்தம் உண்டு. உண்மையான அரசியலுக்கு காலம் உண்டு. தோல்வி இல்லை

பொது வெளியில் நிலையான நேர்மையான களப்பணிக்கு என்றும்
மதிப்பு உண்டு. சொல்லாத  நற் சொல்லுக்கு என்றும்
அர்த்தம் உண்டு. உண்மையான அரசியலுக்கு காலம் உண்டு. தோல்வி இல்லை…மேலும் இடுக்கமான  இருட்டில் நம்பிக்கையோடு பயணிப்போம். ... 
நெறி அரசியல் வானமெனும் லட்சியப் பரப்பை அடைய‌ 
சிறு சிறு ஏணிகளெனும் முயற்சிகள் செய்வோம் 

எதிர்மறை சிந்தனைகளை விட்டொழிப்போம் 
வெற்றிச் சிந்தனை ஒன்றையே மனதில் வைப்போம் 
ஒவ்வொரு படியாய் தான் வெற்றி கிட்டும். 
பண்பு இல்லாத சிலரால் வந்த அவமானம்,பரிகாசம்,
படுதோல்வியைப் படியாக்க மிக விரைவில் எட்டும்!

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
2-9-2023. 



Friday, September 1, 2023

This rare video, Oppositions Janata Party formation 1977-Indira Gandhi regime.. " Can This Opposition Unite Even Now ? " Past 1977 experiment..

This rare video, Oppositions Janata Party  formation 1977-Indira Gandhi regime..

" Can This Opposition Unite Even         Now  ? " 
Past 1977 experiment..
Raj Narain, a socialist leader, had filed a legal writ alleging electoral malpractice against Indira Gandhi in 1971. On 12 June 1975, Allahabad High Court found her guilty of using corrupt electoral practices in her 1971 election victory over Narain in the Rae Bareli constituency. She was barred from contesting any election for the next six years. Economic problems, corruption and the conviction of Gandhi led to widespread protests against the Congress (R) government, which responded by imposing a State of Emergency. The rationale was that of preserving national security. However, the government introduced press censorship, postponed elections and banned strikes and rallies. Opposition leaders such as Jivatram Kripalani, Jayaprakash Narayan, Anantram Jaiswal, Chandra Shekhar, Biju Patnaik, Atal Bihari Vajpayee, L. K. Advani, Raj Narain, Satyendra Narayan Sinha, Ramnandan Mishra and Morarji Desai were imprisoned,along with thousands of other political activists. When the State of Emergency was lifted and new elections called in 1977, opposition political parties such as the Congress (O), Bharatiya Jana Sangh, Bharatiya Lok Dal as well as defectors from the Indian National Congress joined to form the Janata party, which won a sweeping majority in the Indian Parliament. Narain defeated Gandhi at Rae Bareli in those elections.
The new Janata-led government reversed many Emergency-era decrees and opened official investigations into Emergency-era abuses. Although several major foreign policy and economic reforms were attempted, continuous in-fighting and ideological differences made the Janata government unable to effectively address national problems. By mid-1979, Prime Minister Morarji Desai was forced to resign and his successor Chaudhary Charan Singh failed to sustain a parliamentary majority as alliance partners withdrew support. Popular disenchantment with the political in-fighting and ineffective government led to the resurgence of Gandhi and her new Congress (I) party, which won the general election called in 1980. Although the original Janata Party fragmented and dissolved, modern political parties continue to invoke its legacy.


https://x.com/ksradhakrish/status/1697655449364074713?s=46&t=mJ-Q4yLvZG2SDXSXi7-7o

fb.watch/mNPnNV6w0V/?mi…

#Oppositions_JanataParty_formation_1977
#INDIAAllaince 
#oppositionsparties



SEP 12