Saturday, November 17, 2018

இவ்வளவு போராட்டத்திற்கு பின்பும் கூடங்குளத்தில் 5, 6 உலைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இவ்வளவு போராட்டத்திற்கு பின்பும் கூடங்குளத்தில் 5, 6 உலைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.*
————————————————-
கஜா புயலில் தமிழகமே தத்தளிக்கும் போது, கூடங்குளம் 5, 6 அணுஉலைகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளனர். ஏற்கனவே கமுக்கமாக 3, 4 அணுஉலைகளை கோவாவில் இருந்து பிரதமர் மோடியும், ரஷ்யாவில் இருந்து புடினும் இணைந்து அடிக்கல் நாட்டினார்கள். இன்றைக்கு 5, 6 உலைகளும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 1, 2 உலைகள் சரியாக பராமரிக்கப்படாமல் சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டுள்ளதை கூட வெளிப்படையாக சொல்ல முடியாமல் மத்திய அரசு ரகசியம் காட்டியது. கூடங்குளம் கூடாது என்று முதல் ரிட் மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தவன் என்ற முறையில் 1, 2 உலைகள் பாதுகாப்பில்லாத போது மேலும் 3, 4, 5, 6 உலைகள் அவசியம் தானா. இப்படியான சுற்றுச்சூழலை பாதிக்கும் திட்டங்களை வெளிப்படைத்தன்மை இல்லாமல் மத்திய, மாநில அரசுகள் நிறுவ துணைப் போகின்றன. இதுகுறித்து போராடுபவர்களை முடக்கும் நடவடிக்கைகளில் தான் அரசுகள் ஈடுபடுகின்றன. இதுமாதிரி சுற்றுச்சூழலை பாதிக்கும் ஆலைகளை நிறுவுகிற அக்கறையைதான் ஆட்சி பரிபலாத்தில்யுள்ளவர்கள் காட்டுகிறார்களே ஒழிய அதனால் ஏற்படும் தீங்குகளை பற்றி சற்றும் சிந்திப்பதில்லை.

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...