Saturday, November 10, 2018

தலைவர் கலைஞரும், கூடங்குளம் பிரச்சனையும்...

கூடங்குளம் அணு உலை பிரச்சனை குறித்து திமுக மீது தேவையற்ற விமர்சனங்களை வைத்தபோது, என்னிடம் தலைவர் கலைஞர் அவர்கள், “இதற்காக முதன்முதல்ல நீதான வழக்கு தொடுத்த, அவங்களோட பிரச்சனை என்னய்யா. கூட்டிட்டு வா, பேசலாம்.” என்றபோது, சுப. உதயகுமாரும், பூவுலகு சுந்தர்ராஜனும் ஏற்கனவே தலைவர் கலைஞரை சந்தித்து இதுகுறித்து பேச விரும்பினார். இவர்களை சந்திப்பதற்காகவே கலைஞர் அவர்கள் சரியாக 2013 ஆம் ஆண்டு இதே நாளில், அறிவாலயத்திற்கு காலைப் பொழுதில் வந்து அரைமணி நேரம் இப்பிரச்சனை குறித்து கேட்டறிந்தார். முன்னாள் அமைச்சர் பொன்முடியும், அடியேனும் உடன் இருந்தோம்.

தலைவர் கலைஞர் அவர்கள் ஒரு பிரச்சனை என்றால் அதை சொல்பவருடைய கருத்துக்களை பொறுமையாக உள்வாங்கிக் கொண்டு கேள்விகளை தொடுத்து அதைகுறித்து என்ன செய்ய வேண்டுமோ, அதை தக்கபடி செய்வது தான் அவருடைய பெருந்தன்மை. கழகத் தலைவர் எம்.கே.எஸ். அவர்களையும் இதே காலக்கட்டத்தில் கூடங்குளம் பிரச்சனை குறித்து போராளிகள் இரண்டு, மூன்று முறை சந்தித்து பேசியதுமுண்டு. தலைவர் கலைஞரிடம் இவர்கள் இதுகுறித்து மூன்று முறை சந்தித்து பேசியுள்ளார்கள். கூடங்குளம், ஈழத் தமிழர், நதிநீர் சிக்கல்கள் குறித்த பிரச்சனைகள் என்றால் தலைவர் கலைஞர் என்னை அழைப்பதுண்டு. இதுகுறித்து, “என்னய்யா!” என்று என்னிடம் கேட்பதுமுண்டு. இதை தலைவருடைய செயலாளரான திரு. சண்முகநாதன் அவர்களுக்கும் நன்கு தெரியும். இதுவே நான் விரும்பும் அரசியல் களப்பணி. பதவிகள் வரலாம், போகலாம். ஆனால், இந்த பணிகள் தான் நம்முடைய சுவடுகளை எதிர்காலத்தில் பதிக்கும் என்பது என்னுடைய தனிப்பட்ட அணுகுமுறையாகும்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன். 10-11-2018 #KSRadhakrishnanPostings #KSRPostings #KSRadhakrishnan #கூடங்குளம்_பிரச்சனை

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...