Thursday, November 22, 2018

ஏரி, குளங்களைப் பாதுகாக்க புதிய திட்டம்! - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

ஏரி, குளங்களைப் பாதுகாக்க புதிய திட்டம்! - தமிழக அரசுக்கு உயர்
தமிழகத்திலுள்ள வாய்க்கால்கள், குளங்கள், ஏரிகள், ஆறுகள் ஆகியவற்றை பாதுகாத்துப் பராமரிக்க புதிய செயல் திட்டங்களை வகுக்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பொதுநல வழக்கு தாக்கல்செய்துள்ளார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், பதில் அளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், கிராமப்புறங்களில்  '' 'மழை பெய்தும் கெடுக்கும், பெய்யாமலும் கெடுக்கும்' என்ற சொலவடை உண்டு. அந்தக் காலத்தில், மழை பெய்தால் அனைத்து நீரும் குளம், குட்டைகளில் தேங்கும். ஆனால், இப்போது மழை பெய்தால் பயனின்றிப் போய்விடுகிறது. குளம், குட்டைகள் இல்லாததால் வெள்ளப் பெருக்கு, பயிர்கள் அழிப்பு, வாழ்விடச் சேதாரம் போன்ற பல பிரச்னைகள் ஏற்படுகிறது.
தமிழகத்திலுள்ள நீர்நிலைகளை 60,000-லிருந்து 30,000 வரை இன்று குறைந்துவிட்டது. இருப்பதையாவது பாதுகாக்க வேண்டும். ஆயக்காட்டுக்கு உதவும் இந்த நீர்நிலைகளைக் குடிமராமத்து செய்து பேணிக் காக்க வேண்டும். தமிழகத்திலுள்ள வாய்க்கால்கள், குளங்கள், ஏரிகள், ஆறுகள் ஆகியவற்றை பாதுகாத்துப் பராமரிக்க புதிய செயல் திட்டங்களை வகுக்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்த ரிட் மனுவை (*WP No. 30397/2018*) நீதிபதி சத்யநாராயணா விசாரித்து, அந்த மனுவை ஏற்றுக் கொண்டு, தமிழக அரசுக்கு இதுகுறித்தான தாக்கீதுகளை அனுப்ப உத்தரவிட்டுள்ளார்'' என்று கூறினார்.நீதிமன்றம் நோட்டீஸ்

கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao #ManmohanSingh #officialfuneralrites

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao  #ManmohanSingh #officialfuneralrites ———————————————————- #முன்னாள்பிரதமர்கள் #பிவி.  நரசிம்மராவ் #...