மனித வாழ்க்கையின் அனைத்து முயற்சிக்கும் எந்த அர்த்தமும் இல்லை, எல்லா மனித வாழ்க்கையும் விரக்தியில் தான் முடியும் என்பதுதான் மகாபாரதம் நமக்கு கற்றுத்தரும் பாடமா? மனிதனின் கடுமையான உழைப்பு, எதிர்பார்ப்புகள், வெறுப்புகள், நட்பு எல்லாமே அற்பமாகவும் உண்மையற்றதாகவும் காற்றில் உதிரும் காய்ந்த இலைகளாகவும் காணப்படுகின்றனவா? ஆனால் கடுமையாக உழைப்பவர்கள், கனவு காண்பவர்கள், அன்பை பொழிபவர்கள், வெறுப்பை உமிழ்பவர்கள் எப்போதும் மறக்காமல் இருப்பார்கள். அவர்களுடைய நினைவு தொடர்ந்து இதயத்தை துளைத்துக் கொண்டிருந்தாலும், ஒவ்வொரு மனிதனும் வசப்படாத ஒரு தீர்மானமான முடிவை நோக்கிச் செல்வதை நாம் ஒவ்வொருவரும் மகாபாரதத்தை படிக்கும்போது பார்க்கலாம். ஒவ்வொருவரும் தன் முடிவை அறிவானென்றும், அவனுடைய துயரமும் வெறுப்பும் நம்முடையது போல் தோன்றும். ஒவ்வொருவரின் துயரத்தின் மூலம் நாம் உலகம் முழுவதும் உள்ள துயரத்தை அறிகிறோம். பீஷ்மரின் வாழ்க்கை முழுவதும் வெளிப்படையான முரண்பாடுகள் கொண்டவை. ஆனால் எல்லா முரண்பாடுகளுக்கு அப்பால் அவர் செய்கையிலும், யோசனையிலும் ஒருவித ஒழுங்கு இருந்தது.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
15-11-2018
No comments:
Post a Comment