Sunday, November 18, 2018

கஜா புயலும், டெல்டா மற்றும் உள்மாவட்ட துயரங்களும் மக்களும் புறக்கணிப்பும்..* ஓட்டுக்கு காசு என்றால் இப்படி தான் இருக்கும்

கஜா புயலும், டெல்டா மற்றும் உள்மாவட்ட துயரங்களும் மக்களும் புறக்கணிப்பும்..*
ஓட்டுக்கு காசு என்றால் இப்படி தான் இருக்கும்.
---------------------------
கஜா புயலில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை களத்தில் ஆறுதல்படுத்தும் ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மட்டுமே. கஜா புயல் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, கரூர் வரை, தெற்கே மணப்பாறை, திண்டுக்கல், தேனி வரை, வடக்கே புதுச்சேரி வரை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை, பெருவெள்ளம் இல்லை... 110 கிமீ வேகப் புயலுக்கு இதுவரை 45 உயிர்களைப் பறிகொடுத்து, பல்லாயிரக்கணக்கானோரை வீதியில் நிறுத்தியிருக்கிறோம். 220 கிமீ வேக ‘பாய்லின்’ புயலை ஒடிஸா எதிர்கொண்டது எல்லோருக்குமே மறந்துவிட்டதா?
மக்கள் தவிக்கின்றனர். ஆடு, மாடுகள் போன்ற கால்நடைகளும் இறந்துள்ளன. பல லட்சம் தென்னை மரங்கள் அழிந்ததால் பல்லாயிரம் மக்கள் வாழ்வாதாரம் இழந்துவிட்டனர். பல தலைமுறைகளை கண்ட விருட்சங்கள் வேருடன் சாய்ந்துள்ளன. நிவாரணப் பணிகள் மேற்கொள்ளாததால் துயரத்தில் மக்கள் தவிக்கின்றனர். ஆனால், களத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டுமே அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து அவர்களை ஆறுதல்படுத்துகிறார்.
சென்னை புயலின்போது அனைத்து தரப்பினரும் செய்த உதவிகளை மறக்க முடியாது. அதே போல, இந்த கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இத்தகைய உதவிகள் கிடைக்கப்படவில்லை என்று மனம் வேதனைப்படுகிறது. கேரள வெள்ளத்திற்கு அளித்த உதவிகள் கூட கஜா புயலுக்கு செய்யவில்லையோ என்ற எண்ணம் எழுகின்றது. அந்த மாவட்ட அமைச்சர் கூட சரியான பணிகள் செய்யாததால் மக்கள் அவரை விரட்டியுள்ளனர். முதலமைச்சர் உள்ளிட்ட அரசு நிர்வாகங்கள் அந்த மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு எட்டிப்பார்க்கவேவில்லை.
ஆய்வு என்ற பெயரில் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட கவர்னருக்கு கூட ஏன் இந்த துயரங்களை பார்க்க களத்திற்கு செல்ல மனம் வரவில்லை.
மக்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஓட்டுக்கு பணம் என்று வைத்துக் கொண்டு தகுதியற்ற, தரமற்றவர்களைஆட்சியமைக்
கவிட்டால் இப்படித்தான் கேடுகளும், ரணங்களும் வரும். அவர்களுக்கென்ன வாக்குகளை விலைக்குவாங்கிவிட்டனர். பொதுநலமும், பொது நோக்கமும் எப்படி இருக்கும். காசுக்கு ஓட்டு என்றால் இப்படித்தான் அரசு இயந்திரங்களும் இயங்கும். மக்களைப் பற்றி அவர்களுக்கு என்ன அக்கறை இருக்கப் போகிறது.
ஆனால் நாதியற்ற மக்களா நாம்...மீடு.சார்க்கார் போன்ற விடயங்களில் விளக்கு பிடித்தவர்கள் டெல்டா மக்களின் வாழ்வாதாரம் குறித்து விவாதித்தார்களா?
வெ.நீலகண்டனின் பதிவு
முதல்நாள் இரவு பதினோறு மணி வரை ஊரில் அம்மா அண்ணனோடு தொடர்பில் இருந்தேன். 'லேசான தூறல் தான்... காத்தெல்லாம் ஒண்ணுமில்லேயே' என்றார்கள். காலை 6 மணிக்கு சென்னை தமிழ் செம்மொழி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றும் நண்பன் அகிலன், 'ஊரே அழிஞ்சுபோச்சு நீலகண்டன்' என்று கதறி அழுதபோதுதான் விபரீதம் புரிந்தது. ஊரில் எவரையும் தொடர்பு கொள்ளமுடியவில்லை. ஓரிருவர் அவ்வப்போது தொடர்புகொண்டு புகைப்படங்களை அனுப்பினார்கள். இதயம் நொறுங்கியது.
எங்கள் கிராமம், பேராவூரணி நகரத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. எல்லோரும் பாரம்பரிய விவசாயிகள். கடந்த 20 ஆண்டுகளில் நெல் விவசாயம் கைகொடுக்காததால் படிப்படியாக தென்னைக்கு மாறினார்கள். பெரும்பாலானோர் வீடு தென்னந்தோப்புக்கு மத்தியில்தான் இருக்கும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தேங்காய் வெட்டு நடக்கும். பிள்ளைகளை படிக்க வைக்க, சாப்பிட, திருமணம் பண்ண எல்லாவற்றுக்கும் அதுதான் ஆதாரம். வியாபாரிகளிடம் முன்பணம் வாங்கிவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக தேங்காய் கொடுத்து கழிப்பார்கள்.
குருவிக்கரம்பை, நாடியம், திருச்சிற்றம்பலம், தென்னங்குடி என கீழத்தஞ்சை கடைமடையின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமே தென்னை மரங்கள்தான். இப்போது இந்தப் பகுதிகளில் 70 சதவிகித தென்னை மரங்கள் ஒடிந்து விழுந்துவிட்டன. தென்னந்தோப்புக்குள் குடியிருந்த எல்லோரும் வீடிழந்து நிற்கிறார்கள். மொத்த வாழ்வாதாரமும் காலியாகிவிட்டது. நாளை என்ன செய்வது என்ற கேள்வி எல்லோரின் முகத்திலும் படர்ந்திருக்கிறது. வெளிப்படையாக சொல்லவேண்டும் என்றால், மயானவீடு மாதிரி கிடக்கின்றன கிராமங்கள். போக்குவரத்து முற்றிலும் முடங்கி விட்டது. விழுந்து கிடக்கும் மரங்களை என்ன செய்வது, உடைந்து கிடக்கும் வீடுகளை என்ன செய்வது என்று தெரியாமல் வெட்ட வெளிகளில் சேலைகளையும் வேட்டிகளையும் போர்த்திக்கொண்டு உக்கார்ந்திருக்கிறார்கள். மின்சாரம் இல்லை. மெழுகுவர்த்தி தட்டுப்பாடாக இருக்கிறது. தண்ணீர் கிடைக்கவில்லை. மருத்துவ உதவி கிடைக்கவில்லை. மரங்கள் வெட்ட எந்திரங்கள் கிடைக்கவில்லை.
சென்னை வெள்ளம், தானே, வர்தா புயலின் அனுபவம் காரணமாக இந்த முறை அரசு எந்திரம் நன்றாகவே திட்டமிட்டுப் பணியாற்றியது. அதனால் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டன என்பதிலும் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், உயிரிழப்பை விடக் கொடூரமாக வாழ்வாதாரங்களை மொத்தமாக இழந்து தவிக்கிறார்கள் லட்சணக்கணக்காண மக்கள். இன்னும் வி.ஏ.ஓ, தலையாரிகளைக் கூட கிராமங்களுக்கு அனுப்பாமல், 'எல்லாவற்றையும் சிறப்பாகச் செய்துவிட்டோம், எல்லோரும் பாராட்டி விட்டார்கள்" என்று மெத்தனமாக இருக்கிறது அரசு. குறைந்தபட்சம் தாசில்தாராவது பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குப் போய், 'நாங்கள் இருக்கிறோம்...கவலைப்படாதீர்கள்' என்று சொல்ல வேண்டாமா? பாதிப்புகளைக் கணக்கெடுத்து இழப்பீடு தர வேண்டாமா? மத்திய அரசிடம் பேரிடர் நிவாரணம் கேட்கலாமே? ஏன் இழப்பை மறைக்கப் பார்க்கிறது அரசு?
இளைஞர்கள் மத்தியில் அனலாகக் கொதிக்கிறது கோபம். சாலைகளை மறிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். நேற்று புதுக்கோட்டை வட்டாரத்தில் காவலர்களுக்கும் இளைஞர்களுக்கும் மோதல் உருவாகியிருக்கிறது. இது மெல்ல மெல்ல பரவி வருவது மிகவும் கவலையளிக்கிறது.
உண்மையில், சென்னையில் இருக்கிற ஊடக நண்பர்களுக்கும் கஜா புயலின் தாக்கம் புரியவில்லை என்பது சோகம். காவிரிப் படுகையில் 2 கோடி தென்னை மரங்கள் உண்டு. 40 சதவிகிதம் கீழே சரிந்து விட்டன. 3 சதவிகித மரங்கள் கொண்டை முறிந்து பயனற்று நிற்கின்றன. லட்சணக்கணக்கான பிற மரங்கள் சரிந்து விட்டன. மகள் படிப்புச் செலவுக்கு, மகன் திருமண செலவுக்கு என திட்டமிட்டு வேலியோரம் நட்டு வளர்த்த தேங்கு, சந்தனம் என அத்தனை பண மரங்களும் அந்தக் கனவுகளைப் போலவே முறிந்து கீழே கிடக்கின்றன.
பொதுவாக காவிரி படுகை மக்கள் விவசாயத்தை தங்கள் உயிரை விடவும் மேலாகக் கருதுபவர்கள். ”நான் செத்திருந்தாக் கூடப் பரவாயில்லைய்யா... உசுருக்கு உசுரா வளர்த்த தென்னை போச்சேய்யா” என்று ஒரு பெரியவர் அழுகிறார். எங்கள் ஊர் சன்னாசியண்ணனை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்திருக்கிறார்கள். வெளியில் வந்து தன் தோப்பு அழிந்ததைப் பார்த்தால் ஏதாவது செய்துகொள்வாரோ என்ற பயம்...
மெத்தனம், மிதப்புகளை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு அரசாங்கம் போர்க்கால அடிப்படையில் இயங்க வேண்டிய நேரம். கிட்டத்தட்ட 20 ஆண்டுகாலம் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் பொருளாதார ரீதியாக பின்னோக்கிச் சென்றிருக்கிறது. பாதிப்பின் உண்மையான வீரியத்தை ஊடக நண்பர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அரசு புயல் பாதிக்காத பிற பகுதிகளின் ஊழியர்கள் அனைவரையும் புயல் பாதித்த பகுதிகளுக்குத் திருப்ப வேண்டும். எப்படியாவது மக்களை இழப்பின் துயரத்தில் இருந்து மீட்க வேண்டும்!
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
18-11-2018

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...