இன்றைய பயணத்தின் போது,
கோவையிலிருந்து சேலம் செல்லும் #நெடுஞ்சாலையில் ஈரோடு அருகேயுள்ள மேம்பாலத்தின் பக்க மற்றும் அடிச்சுவர்களில் இப்படி செடிகளும், புதர்களுமாக இருக்கின்றன. கோடிக்கணக்கில் செலவிட்டு பாலங்கள் கட்டிவிட்டு முறையான பராமரிப்பில்லாமல் உள்ளன. இதை பற்றியெல்லாம் ஆட்சியார்களுக்கு சிந்தனையும் ஏற்படுவதில்லை. கட்டுவது மட்டுமல்ல, அதை பராமரிப்பதிலும் பொறுப்பு வேண்டும். பல வெளிநாடுகளுக்கு பயணமாகியுள்ளேன். அங்கு மேற்கொள்ளும் நவீன பராமரிப்பு முறைகளை இங்குள்ள ஆட்சியாளர்கள் அறிந்து கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும்.
No comments:
Post a Comment