இலங்கை நாடாளுமன்ற கூட்டம்...
-------------------
இன்றைக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் கூச்சலும், குழப்பமுமாக ராஜபக்சே ஆதரவாளர்கள் கருப்பு பேட்சை அணிந்து கொண்டு அவையின் கதாநாயகரை (அவை சபாநாயகர்) கூட்டத்தை நடத்தவிடாமல், முடிவை அறிவிக்க செய்யாமல் வெளியேறிவிட்டனர். ரணில் விக்கிரமசிங்கேவுக்கு கிட்டத்தட்ட 122 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உண்டு. மூத்த நாடாளுமன்ற உறுப்பினரான 80 வயதை எட்டிய பவுஸ் கூட ராஜபக்சே முகாமில் இருந்து இன்றைக்கு ரணில் முகாமிற்கு வந்துவிட்டார். ராஜபக்சே அமைச்சரவையில் பதவியேற்றவரும், மலையக எம்.பியான சுரேஷ் வடிவேலுவும் ரணில் பக்கம் சாய்ந்துவிட்டார். நாடாளுமன்றத்தில் தங்களுடைய பெரும்பான்மையை காட்டி இயலாததால் பிரச்சனையை செய்து ராஜபக்சே தலைமையில் வெளியேறியது ஜனநாயகத்தை சாகடித்து, மேலும் அதை குழியில் புதைக்கும் வேலையை தான் அதிபர் மைத்ரிபால சிறிசேனேவும், ராஜபக்சேவும் ஒன்றாக செய்து வருகின்றனர்.

No comments:
Post a Comment