நீர்நிலைகளை, நீர் வளத்தை பாதுகாக்க தொலைநோக்கான, அறிவியல்பூர்வமான திட்டங்கள் தேவை. அது தமிழக அரசிடம் இல்லை. தமிழகத்தில் 20 லட்சம் கிணறுகளில் 53 சதவீத கிணறுகள் முற்றிலும் வறண்டுவிட்டன. 1960களில் தமிழகத்தின் நிலப்பரப்பில் 23 சதவீதமாக இருந்த வனப்பரப்பு 16 சதவீதமாக குறைந்துவிட்டது. தமிழ்நாடு நீர்த்தேக்க வளர்ச்சி ஆணையம் உருவாக்கிய 20 ஆயிரம் குளம், குட்டைகள் பராமரிப்பின்றி உள்ளது. மணல் கொள்ளை தடுக்கப்படவில்லை. அந்நிய குளிர்பான கம்பெனிகளுக்கு சலுகை விலையில் தாமிரபரணி தண்ணீர் விற்கப்படுகிறது. இது குறித்த விழிப்புணர்வும், நீர்நிலைகள் குறித்த அறிவியல்பூர்வமான திட்டங்களுமே உண்மையான நதி பாதுகாப்பாகும்.
#நீர்நிலை_பாதுகாப்பு
#நீர்நிலை
#KSRPostings
#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
09/11/2018
No comments:
Post a Comment