முன்னாள் இந்திய பிரதமர் வி.பி .சிங் நினைவுநாள்
-------------------------------------
சமூகநீதி காவலர், நேர்மைக்கு இலக்கணமானவர்,ராஜவம்சத்தில் பிறந்திருந்தாலும் எளிமைக்கு அடையாளமாகதிகழ்ந்தவர்வி.பி.சிங். ராம்விலாஸ் பஸ்வான் மூலமாக 1987 ல் ஜனமோட்சா கட்சி ஆரம்பித்த காலமுதல் எனக்கு அறிமுகம் உண்டு . 1989 ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுகழகத்தின் சார்பில் கோவில் பட்டி தொகுதியில் நான் போட்டியிட்ட போது எனக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை ஆற்றவும் வந்தார்.

என்னுடைய நதிநீர் இணைப்பு வழக்கு தொடர்பாக மறைந்த இந்திய பிரதமர்கள்,1990ல் வி.பி.சிங் , 1992ல் பி.வி நரசிம்மராவ் மற்றும் 1996ல் தேவகௌடா ஆகியோரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது .
திரு வி.பி சிங் அவர்களை சந்தித்த போது தன் நேரமில்லாத பணிகளுக்கு இடையில் எனக்கு அரைமணி நேரம் ஒதுக்கி என்னோடு பேசியது என்னால் மறக்க இயலாது ! அப்போது அவர் மண்டல் கமிசன் பிரச்சனைகளில் அவரின் கவனம் முழுவதும் திரும்பி இருந்தாலும் நதிநீர் பிரச்சனைகளை முழுமையாக கேட்டு அதனை தீர்க்கவும் முயற்சி செய்வதாகவும் கூறினார் .
அதே போல மறைந்த முன்னாள் பிரதமர் பி.வி நரசிம்மராவ் அவர்களும் கேட்டரிந்தார் .
ஆனால் முன்னாள் பிரதமர் தேவகௌடா அவர்கள் மற்றும் சரியாக முகம் கொடுத்து பேசவில்லை ஏனெனில் காவிரி பிரச்சனையில் அவரை எதிர்த்து வழக்கு தொடுத்து இருந்தேன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் முன்னாள் பிரதமர் தேவகௌடா அவர்கள் மற்றும் சரியாக முகம் கொடுத்து பேசவில்லை ஏனெனில் காவிரி பிரச்சனையில் அவரை எதிர்த்து வழக்கு தொடுத்து இருந்தேன் என்பது குறிப்பிடத்தக்கது.
நதிகளை இணைக்க வலியுறுத்தி மன்மோகன் சிங் அமைச்சரவையில் நீர்வளத்துறை அமைச்சராகவும் தற்போது உத்தரகண்ட் மாநில முதலமைச்சராக இருக்கும் ஹரிஷ்ராவத் இருமுறை சந்தித்தேன் .தற்போதய மோடி அரசில் நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதியும் சந்தித்து நதிநீர் பிரச்னைகளைதீர்க்கவலியுறுத்தியுள்ளன்
ஆனால் முன்னாள் பிரதமர் தேவகவுடாவை போல் சங்கடபடுத்தியது யாருமில்லை. பண்புக்குவி.பி.சிங்அவர்கள் ஒரு சிகரம்
யாரையும் மதித்து அன்பு காட்டிய மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் திரு விஸ்வநாத் பிரதாப் சிங் என்ற #விபிசிங்அவர்களை நினைவு கூருவோம் !
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
26-11-2016
26-11-2016
No comments:
Post a Comment