எதிர்காலத்தில் தவித்த வாய்க்கு தண்ணீர் இல்லாமல் போய்விடுமோ? ஆனால் ஊடக விவாதங்கள்.....
————————————————
நாட்டில் நிலத்தடி நீர் வற்றி சவர் நீர் ஆகிவிட்டது. விவசாயம் பாழ்பட்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.ஊடகங்கள் 24 மணிநேரமும் சர்க்காரை திரைப்படம் குறித்து விவாதங்கள் நடத்திக் கொண்டிருக்கிறது. மக்களும் சிந்திப்பதில்லை. பைத்திக்யகார போக்கில் தொலைக்காட்சி நாடகங்களும் விவாதங்களும் நித்தமும் அரங்கேறுகிறது.நாடு எதிர் நோக்கும் பிரச்சனைகளை விவாதிப்பதை விட சர்க்காரைப் பற்றி பேசுவது பிழைகள் மட்டுமல்ல, சமுதாய குற்றங்களேயாகும்.
இயற்கையின் அருட்கொடையான தண்ணீர் மக்களுக்கானது. அதையே கபளீகரம் செய்து மக்களிடமே விற்பனை செய்யும் அலங்கோலம்.எதிலும் கமிஷன், அரசு நடவடிக்கைகளில் commission மற்றும் omission (செய்ய வேண்டியது செய்யக்கூடாது) என உண்மையான விடயங்களையும் பிரச்சனைகளையும் பேசாத ஊடகங்கள்;செய்கின்ற இந்த காட்சிப் பிழைகள் என்றைக்கு மாறுமோ, அன்றுதான் மக்களும் சிந்திக்கத் தொடங்குவார்கள்.
அடுத்த 15 வருடங்களில் குடிக்கக்கூட தண்ணீர் கிடைக்காது,பூமி வெப்பமாயதல் என பல சங்கதிகள் உள்ளன.இவையாவும் வெறும் செய்திகள்
என நினைக்கின்றனர்.
விவாதங்கள் சிலரின் அன்றாட இருப்பை காட்டிக் கொள்ளவும், சிலரின் ஊடக வெளிச்சத்திற்கு மட்டுமே பயன்படுமே அன்றி, பொதுநலனும் பிரச்சனை
களுக்கான தீர்வை கிடைக்கப் போவதில்லை.
நாட்டில் அல்லற்படும் மக்களின் எதிர்காலத்தை பாதிக்கும் முக்கிய பிரச்சனைகள் மட்டுமின்றி, அன்றாட மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் கூட தொலைக்காட்சி விவாதங்களால் மறைக்கப்பட்டு திட்டமிட்டு பின்னுக்கு தள்ளப்படுகிறது. ஒரு திரைப்படத்தின் கதாநாயகன் என்ன அய்யன் திருவள்ளுவரா, கௌதம புத்தரா, அசோக சக்கரவர்த்தியா, உத்தமர் காந்தியா? பின்னர் அவர்களுக்கு ஏன் ஊடகங்கள் இவ்வளவு முக்கியம்,அக்கறையும், அதில் பதட்டமும் காட்டுகிறது. ஊடகங்களே உங்களுடைய ரேட்டிங்கிற்காக உண்மையான பிரச்சனைகளை புறந்தள்ளாதீர்கள். காலம் தான் இதற்கு பதில் சொல்லும்.
வெகுஜன விருப்பம் என்றும் மக்கள் விரும்புகிறார்கள் என்ற நிலையில் அவசியமற்றவை புறந்தள்ளி;ஊடகங்கள்
சமுதாயத்தில் விழிப்புனர்வை ஏற்படுத்த வேண்டும்.ஆனால தொலை காட்சிகள் தேவையற்றவிடயங்களைதூக்கிப்
பிடிக்கிறது.
ஊடகங்களே நீங்கள் நிரந்தரமல்ல. இந்த மண்ணும், நாடும் தான் நிரந்தரம் என்பதை நெஞ்சில் வைத்து பிரச்சனைகளை அணுகுங்கள். மெய்ப்பொருள் காண்பதே அடிப்படை . வேடிக்கை விளையாட்டாக எண்ணாமல் மக்களின் பிரச்சனைகளை கவனத்தில் கொண்டு பிரச்சனைகளை நேர்மையாக விவாதியுங்கள். அது உங்களின் தார்மிக
கடமை.
Most of the citizens don’t have their own views or opinions.. These celebrities are purposefully launched to create a positive opinion artificially....
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
09/11/2018
No comments:
Post a Comment