Tuesday, November 6, 2018

சர்க்கார் - ஏட்டு சுரக்காய் கூட்டுக்கு உதவாது ...... நடிப்பு வேறு, யதார்த்த வாழ்க்கை வேறு !



————————————————-

‘ஏட்டு சுரக்காய் கூட்டுக்கு உதவாது ‘
என்றொரு சொலவாடை உண்டு. சினிமாவில் நடிகர்கள்  அரசியல் சவடால் வசனங்களை பேசும் போது இந்த சொலவாடை நினைவுக்கு வருகின்றது 

இன்று வெளியான திரைப்படம் ஒன்றிக் கள்ளவாக்கு அரசியல் பற்றி கதாநாயகன் பேசுவதாக அறிந்தேன். இந்த வசனத்தைக் கூட காசு வாங்கிக் கொண்டு தான் பேசியிருப்பாரே தவிர, பொதுநலனில் அக்கறைக் கொண்டு பேசவில்லை.  

கறுப்பு வெள்ளைக் கால   திரைப்படங்கள் மக்களுக்கான  எழுதப்பட்ட கதை அம்சங்கள் கொண்டன. அவைகளில் புராணங்கள், வரலாறுகள், சிந்தனைகள் என அறிவுசார் கருத்துக்களை எதிர்பார்த்து சினிமா கொட்டகைக்கு சென்ற காலம் உண்டு.  1999 காலக்கட்டம் வரை கூட சினிமா ஓரளவு பொழுது போக்கு அம்சமாக இருந்தது.  மன அழுத்தத்தை குறைக்கும், கவலையை போக்கு விதமாக சிரிக்கவும் , சிந்திக்கவும் கொண்ட கதைசார்ந்த படங்கள் வந்தன. தற்பொழுது சினிமா நாயகர்களுக்காக கதைகள் எழுதப்பட்டு தனி ஒருவரை தூக்கிப் பிடிக்கும் விதமாக விளம்பர நிகழ்ச்சியாக தயாரிக்கப்படுகின்றன.

தேர்தலுக்கு முன்பு தலைவர் இறந்துவிட்டால் மக்கள் எல்லோரும் மற்றவற்றை மறந்து அவரைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள் என்றும்  தேர்தல் முடிந்ததும் முதலமைச்சராக கதாநாயகன்  பரிந்துரை செய்யும் 'ஓர் ஐஏஎஸ்' எல்லாவற்றுக்கும் மேலாக, இடைவேளையில் சொல்லும் 'I am waiting'வசனம் வேறு.
வில்லனின் கட்சி அலுவலகத்துக்குள் கதாநாயகன் நுழைவார். துணை வில்லன் தனது வழக்கறிஞருக்கு போன் போட்டு, 'அவனை இங்கேயே வச்சி போட்டுடலாமா'?  என்று கேட்டதும் அந்த வழக்கறிஞர் 'சீனியரிடம் லீகல் ஒப்பீனியன் கேட்டுவிட்டு சொல்கிறேன்' என்பதெல்லாம் நடிகர் வடிவேலு கூட முயற்சிக்காத காமெடி

 ஒரு குப்பத்தில் தன்னை எதிர்க்கும் ஆயிரக்கணக்கான மக்களிடம் கதாநாயகன் 10 நிமிட வசனம் பேசி அவர்களை தன்னுடைய அதிதீவிர விசுவாசிகளாக  மேஜிக் போல மாற்றும் காட்சி.
வெள்ளைக்கார பாடிகார்ட்களிடம் தமிழில் கதாநாயகன் பேசுகிறார். ஆனால், அவர்கள் ஆங்கிலத்தில் பதில் சொல்கிறார்கள். படத்தில் வரும் பிரபல வழக்கறிஞரின் பெயர் மலானி! அவருக்கே தெரியாத லீகல் பாயிண்ட் கதாநாயகன் எல்லாம் தெரிஞ்சிருக்கு!.  சரி இதுகூட போகட்டும். ஒரு மருத்துவமனையில் டெங்குவால் பாதிக்கப்பட்ட குழந்தை இருக்கும். அந்த குழந்தையை காட்டி சம்பந்தமில்லாத'பொதுப்பணித் துறையை' கதாநாயகன் சாடுவார். இதுக்கு நீங்க திட்ட வேண்டியது மக்கள் 
நல வாழ்வு  துறையை!  

படத்தில் நடக்கும் தேர்தலில், மதியம் 2.30 மணி வரைக்கும் வில்லனுக்கு ஆதரவாக நடக்கும் வாக்குப்பதிவு, கதாநாயகன்  Facebookஇல் ஒரு வீடியோ போட்டப் பிறகு அப்படியே கதாநாயகன் விரும்பியபடி சாதகமா நிலைமை மாறிடுமாம்!
மிகப்பெரிய காமெடி, உடனே கதாநாயகன் ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் 210 தொகுதிகளில் சுயேட்சையாக தனித்தனி சின்னங்களில் ஜெயிப்பது தான்! Big jokes....
காமடி!??

மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல.  அவர்கள் படும் பாட்டை விடவா, அவரகள்  உணராத ஒன்றையா சினிமா நாயகர்கள் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்த போகின்றார்கள்?  

திரைப்படத்தில் வில்லனுக்கு ஆதரவாக ஓட்டுக்கள் பதிவாகின்றதாம், நாயகர் தன் முகநூலில் ஒரு பதிவு செய்த பின் நிலமை  தலைகீழாக மாறுகின்றதாம். இது மக்களை முட்டாளாக்கும் செயல் அல்லவா?  

நானும் 48 ஆண்டுகளாக அரசியலில் இருக்கின்றேன். தேர்தல்களில் வேட்பாளராகவும்;நெடுமாறன், வை.கோ போன்றவர்களுக்கு தேர்தல் முகவராகவும்,, தலைவர் கலைஞர் அவர்களால் ஆண்டிபட்டி,சைதை, சங்கரன் கோவில் இடைத்தேர்தல்களில் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டு,பல தேர்தல் அரசியல்களங்களை 45 ஆண்டுகளாக பார்த்து வருகின்றேன்.  எத்தனையோ தியாகங்கள் செய்து போராட்டங்கள் செய்து சிறை வாழ்க்கையை அனுபவித்தவர்கள் தேர்தலில் வெற்றி பெற முடிவதில்லை. இந்திரா,அண்ணா,  காமராசரை என பல ஆளும்மைகளை தோற்கடித்த அரசியல்களம் இது. முகனூலில் ஒரு பதிவு ஒருவரை முதல்வராக மாற்று விடுவதாக சித்தரிக்கப்படுவது எல்லாம் மக்களை முட்டாளாக்கும் செயல். 

சிவாஜி நடித்த பாலும் பழமும், பாசமலர், திரிசூலம்,  தில்லானா மோகனாம்பாள், தெய்வமகன்,  எம்.ஜி.ஆர் நடித்த படகோட்டி , நாடோடி மன்னன், அடிமைப்பெண்,  உலகம் சுற்றும் வாலிபன் ,  கே.பாலச்சந்தரின் அபூர்வராகங்கள், அவள் ஒரு தொடர்கதை, வறுமை நிறம் சிகப்பு  என பல திரைப்படங்களை பட்டியலலிடலாம். மக்கள் தங்கள் குடும்பத்தின் துக்கங்களை முன்று மணி நேரம்  மறந்து சினிமா பார்த்த காலம் உண்டு.  

வரலாற்றில் பல உலக தலைவர்கள், தேசிய தலைவர்கள்  தியாக தலைவர்கள் , அறவழியில் அரசியல் கற்றுக் கொடுக்க பலர் உண்டு. சினிமா மூலம்  அரசியல் கற்க வேண்டிய அவசியம் இங்கு இல்லை என்பதை எப்போது உணரப் போகின்றார்கள்?

இந்த படத்தை பார்ப்பவர்கள் எதையும் ஏற்றுக்கொள்ளவர்கள்
என்ற என்னம் தாயாரிப்பளார்கள் உள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது........

(படம் - இந்த படத்திற்கும் எழுத்துக்கும் 
சம்மந்தம் இல்லை.ஆனால் ஒரு இனத்துக்கு போரடிய தலைவனின் இல்லம் இன்றைக்கு இடித்து தரை மட்டமாக்பட்டுள்ளது)

*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*

06-11-2018
#சர்க்கார்
#KSRadhakrishnanpostings 
#KSRpostings

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...