Thursday, August 19, 2021

#மாநிலசுயாட்சி_நிதிக்குழு





———————————————————
தமிழிலும், ஆங்கிலத்திலும் மாநிலசுயாட்சி குறித்து விரிவான என்னுடைய நூல்கள் வெளிவர இருக்கின்றன. இதற்கான தயாரிப்பு பணிகளில் இருந்த போது, இதற்கான ஆவணங்களை பழைய கோப்பில் தேடியபோது; நான் தயாரித்த இந்த விரிவான மனுவை மறுமலர்ச்சி தி.மு.க சார்பில் இந்திய அரசின் 11-வது நிதி குழு சென்னை வந்தபோது, 1.11.1999 அன்று அண்ணன் எல்.கணேசனும் நானும் நேரில் அளித்தோம்.
இந்தகுழுதமிழகஅரசின்அறிவிக்கை
யின் படி தலைமைச்செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை கூட்டரங்கில் சந்திப்பு நடந்தது. 11-வது நிதி குழுவின் தலைவர் பேராசிரியர் ஏ.எம்.குஸ்ரோ, உறுப்பினர்கள் என்.சி.ஜெயின், ஜே.சி.ஜெட்லி, அமரேஷ் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இந்த மனுவில் மாநில சுயாட்சி குறித்தான சில செய்திகளோடு சமன்பாடான நிதி பகிர்வீடுகள் மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்று அந்த மனுவை பல்வேறு தரவுகளோடு தாயரித்திருந்தேன்.
நான் தயாரித்து அளித்த இந்த மனு செய்திகளாக பத்திரிக்கையில் அப்போது வந்தது. ஆங்கில இந்துஏடு இந்த மனுவை மேற்கோள்காட்டி எழுதி இருந்தது. அன்றைக்கு முதல்வராக தலைவர் கலைஞர் இருந்தார். நிதி அமைச்சர் பொறுப்பிலும் அவர் இருந்ததாக எனக்கு நினைவு. அப்போது ம.தி.மு.க.வும் தி.மு.க.வும் பா.ஜ.க கூட்டணியாட்சியில் இடம்பெற்றிருந்தது.
செய்தித் தாள்களில் வந்த செய்திகளை பார்த்துவிட்டு, நிதி கமிஷனிடம் அளித்த மனுவை கேட்டார் தலைவர் கலைஞர். அதை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் ஒரு மாலை பொழுதில் தலைவர் கலைஞரிடம் கொடுத்துவிட்டு வந்தேன்.
அன்றைக்கு பெரும் சர்ச்சையாக இருந்த, மக்கள் தொகை கட்டுபடுத்திய தென்மாநிலங்களான தமிழகம், ஒன்றுபட்ட ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு மத்திய நிதி தொகுப்பு குறைக்கப்பட்டு, மக்கள் தொகை கட்டுபடுத்தாத உத்திரபிரதேசம் போன்ற வட மாநிலங்களுக்கு அதிகமான நிதியை வழங்கியதை குறித்து பெரும் விவாதங்களே நடந்தன.
தலைவர் கலைஞர் இதை ஏற்றுகொள்ள முடியாது என மத்தியரசுக்கு தெரிவித்தார். சந்திரபாபு நாயுடு இதற்காகவே ஒரு கூட்டத்தை நடத்தி அன்றைய பிரதமர் வாஜ்பாயோடு கடுமையாக மோதியதும் உண்டு. இவையெல்லாம் கடந்தகால செய்திகள்.
நிதி குழு வந்த அன்று மாலை,இது குறித்தான விவாதத்தை மூத்த பத்திரிக்கையாளர் மாலன் பங்கேற்று நடத்தினார். இந்த நிகழ்வில் நான், இல.கணேசன்(பா.ஜ.க) டி.கே.ரங்கராஜன்(சி.பி.எம்) ஆகியோர் கலந்துகொண்டோம். அன்றைக்கு ஒரே விவாத டிவி சன் தொலைக்காட்சிதான். சன் தொலைக்காட்சியின் விவாதங்கள் அன்றைக்கு முன்கூட்டியே எடுக்கப்பட்டுவிடும். பின்புதான் ஒளிப்பரப்பபடும். அன்றைக்கு சன் தொலைக்காட்சியின் விவாதக்காட்சிகள் அனைத்தும் முரசொலி அலுவலகத்தில் தான் நடக்கும்.
இது குறித்து தொடர்ந்து பல்வேறு நாளேடுகளிலும் 30 ஆண்டுகளுக்கு மேலாக பல சமயங்களில் கட்டுரையாக எழுதி வருகின்றேன். இது முக்கியமான ஆவணம் என்பதால் பதிவு செய்கின்றேன். 23 ஆண்டுகள் கடந்து விட்டன. இது குறித்து இன்றைய தலைமுறைக்கு தெரிய வேண்டும் என்றுதான் இந்த பதிவு. எவ்வளவோ முயற்சிகள் கடமைகளை ஆற்றி கடந்து வந்தோம், என்ற திருப்தி எனக்கு.அவ்வளவுதான்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

18.08.2021 

No comments:

Post a Comment

*Worrying is like sitting in a rocking chair*

*Worrying is like sitting in a rocking chair*. It gives you something to do but it doesn't get you anywhere.Worry is a total waste of ti...