#ரசிகமணியின்_கம்பர்தரும்_ராமாயணம்"
———————————————————-
ரசிகமணியின் "கம்பர்தரும் ராமாயணம்" அல்லயன்ஸ் மறுபதிப்பாக வெளியிட்டுள்ளது. அல்லயன்ஸ் சீனிவாசன் இன்றைக்கு(27-8-2021)
வெளிவந்த முதல் பிரதியை என்னிடம் வழங்கினார்.
ரசிகமணியின் இந்நூல் அவரின் காலத்தில் 1953 முதல் தொகுதி வெளிவந்தது. அவரது மறைவிற்குப் பின் இரண்டு மூன்று பாகங்களாக 1954-55 களில் வெளிவந்தது. குற்றாலத்தில் இருந்து இரசிகமணியின் பொதிகை மலைப் பதிப்பகம் முதற் பதிப்பை கொண்டுவந்தது. தற்போது அல்லயன்ஸ் வெளியிட்டுள்ள இந்த நூல் ஒரே தொகுப்பாக 1056 பக்கங்களில் வெளியாகியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி எஸ். மகாராஜன், சுத்தானந்த பாரதி, மறைந்த கி. ரா (இந்நூலுக்கு கடைசியாக தன் அணிந்துரை), ரசிகமணியின் பேரன் தீப நடராஜன், மாலன் ஆகியோர் அணிந்துரை வழங்கியுள்ளனர். தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு இது ஒரு நல்ல வரவாகும்.
கி. ரா.வும், தீப நடராஜனும் இந்த நூலை பார்க்க ஆசைப்பட்டார்கள். கரானா காலத்தினால் அவர்கள் விரும்பியபடி அவர்கள் கைகளில் இந்நூல் தவழவில்லை என்பது வருத்தமான செய்தியாகும்.
No comments:
Post a Comment