#நீதிபதிகளுக்கு_அச்சுறுத்தல்கள்:
———————————————————
கடந்த ஜூலை 28-ஆம் தேதி ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் ஆட்டோ திட்டமிட்டு மோதி மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த் கொலைசெய்யப்பட்டார், என்பது வேதனையான விடயமாகும். இது நீதித்துறைக்கு விட்ட சவாலும் கூட. இது ஜனநாயகத்திற்கு
நல்லதல்ல.
நேற்று உச்சநீதி மன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.இரமணா நீதிபதி சூரியகாந்த் அடங்கிய அமர்வு இது குறித்தான விசாரணையில்; இப்படியெல்லாம் நீதிபதிகளையே
கொலைசெய்த, சம்பவங்களை எளிதாக கடந்து செல்ல முடியாது. சி.பி.ஐ மற்றும் ஐ.பி நீதித்துறைக்கு உதவுவது இல்லை என்ற கருத்தை பதிவுசெய்துள்ளனர். இது சரியான கேள்விதான் அரசு இயந்திரங்கள் இதை கவனிக்க வேண்டும்.
இன்னொரு புறம் நீதித்துறையில் நடக்கும் சீர்கேடுகளையும்
கவனிக்கவேண்டும்.
கடந்த 1980-லிருந்து நீதிதுறை மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்திக் கொண்டே வருகின்றனர். சில நீதிபதிகளின் தவறான போக்கு, ஒரே மாதிரியான வழக்கில் இரு வித தீர்ப்புகளை நானே அறிந்துள்ளேன். உச்சநீதிமன்றத்தில் தேர்தல் சீர்த்திருத்தம்
குறித்து நான் தாக்கல் செய்த மனுவை, அதே பிரச்சைனையில் ஏற்றுகொண்ட வேறு மனுவோடு இணைத்து விசாரிக்க எல்லா நியாங்களும் இருந்தும், உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ள
வில்லை. ஒரே பிரச்சனைக்கு உச்சநீதிமன்றத்தில் இப்படியான சிந்தனைகள். கடந்த 2010-இறுதியிலும், 2011-துவக்கத்திலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்த கூடங்குள வழக்கில் நியாயங்கள் இருந்தும் ஏற்றுக்கொள்ள
நீண்டநாள் போராடவேண்டி இருந்தது. ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் ஏதோ ஒரு வகையில் சரிசெய்துவிட்டார்,
என்று வழக்கை முடிப்பது போன்ற பல நிகழ்வுகளை சொல்லலாம். இது குற்றசாட்டு அல்ல. இந்த மாதிரி சந்தேகங்கள் நீதித்துறைமீது
வந்துவிட்டதால், நீதித்துறைமீது
ஒரு அச்சம் இல்லாமல் போய்விட்டது.
சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பால் இருக்கவேண்டும்.
தன்பாத் நீதிபதி கொலைசெய்யபட்டது ஜனநாயகத்தில் ஒரு கரும்புள்ளிதான். ஆனால் நீதிதுறையின்
மீது எந்த அவப்பெயரும் வராமல் மிக கவனமாக இருக்க வேண்டும். அதற்கான முன்னெடுப்பும் இன்றைய காலகட்டங்களுக்கு ஏற்ற சீர்த்திருத்தங்களும் அவசியம் தேவை, இதனையும் உச்சநீதிமன்றம் கவனத்தில் கொண்டு விசாரித்துசெயல்படவேண்டும்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
No comments:
Post a Comment