Friday, August 20, 2021

#நதிகளின் பிரவாகம்

 

நதிகளின் பிரவாகம் எப்படியோ, அவற்றை போல நேர்மையான ஆளுமைகளையுடைய செயல்வீச்சுகள், தடைகளை எல்லாம் தாண்டி முன்னேறும். இந்த செயல்பாடுகளின் தன்மையை திட்டமிட்டு கவனிக்காத சமுதாயம் புல்லறிவு மாந்தர்களாக காட்சிப்படுவார்கள். மடியில் கனமில்லை என்றால் வழியிலோ, செயலிலோ பயமில்லாமல், கவலையில்லாமல் பீடுநடை போடுவது நதிநீர் வெள்ளத்தை போன்றது.

ஒரு நதி ஓடிக் கொண்டிருக்கிறபோது, இறங்குகிற போது ஒரு ஒலி, சமவெளியிலே அது ஆறாகப் பெருகிப் போகிறபோது ஒரு ஒலி, கடலிலே கலக்கிறபோது அது வேறொரு ஒலி என்பதை போல நெறிகொண்டவர்களின் பணி இருக்கும்.
இருப்பினும்,
நதியின் ஓட்டம் போல், எப்பொழுதும் நேர்மறையாகவே சிந்திக்க வேண்டும் என நினைத்தாலும் சில சமயங்களில் எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க முடிவதில்லை. இதை எவ்வாறு சரி செய்வது?
சிந்தனை மற்றும் எண்ணங்களை உருவாக்குவது நம் மனது. இந்த மனது எங்கே இருக்கு என்று சொல்ல முடியாததால் அதை நாம் நம்முடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பது சுலபமான காரியம் இல்லை.
ஆய்வின் படி ஒவ்வொரு மனிதரிடத்திலும் குறைந்த பட்சம் 10 சதவீத எண்ணங்கள் எதிர்மறை எண்ணங்களாக இருக்கும். உங்களுக்கு சில சயங்களில் தான் எதிர்மறை எண்ணங்கள் வருகின்றன ஆகவே அதை பற்றி அதிகமாக கவலைப்பட வேண்டாம்.மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் வெற்றிகரமான முடிவுகளை எதிர்பார்க்கும் அணுகுமுறகு வேண்டும்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
20.08.2021

No comments:

Post a Comment

*Worrying is like sitting in a rocking chair*

*Worrying is like sitting in a rocking chair*. It gives you something to do but it doesn't get you anywhere.Worry is a total waste of ti...