Monday, December 11, 2023

எட்டையபுரத்து பாரதி.

இன்று டிசம்பர் 11
திருநெல்வேலி சீமை எட்டயபுரத்தின் அருமைக் கவிஞரும்  இந்திய அளவிலும் உலக அளவிலும் கவனம் ஈர்த்த மகாகவியுமான









பாரதி பிறந்தநாள்!




அவருடைய நினைவு நூற்றாண்டு விழா தொடர்ந்து கொண்டாடப்பட்டு வரும் வேளையில் கடந்த ஆண்டு கரிசல் காட்டின் கவிதைச்சோலை என்கிற பாரதி குறித்து பல ஆளுமைகள எழுதியிருந்த கட்டுரைகளை தொகுத்து
நூலாக கொண்டு வந்ததை அவரது நூற்றாண்டுப் பணியில் எனது என் மனம் மகிழும் பங்காக இங்கே முன் வைக்கிறேன்.

கல்கி  எட்டயபுரம் பாரதி மணி மண்டபத்தில் நிகழ்த்திய மாபெரும் ஒரு சிறப்பான பாரதி மண்டப  விழா காலங்கள் ஞாபகத்தில் வருகின்றன.எம்ஜிஆர் ஆட்சியில் அங்கு அவர் எடுத்த நூற்றாண்டு விழா.

1988 -89 கோவில்பட்டி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அதில் தோல்வி அடைந்த முதல் கடந்த இரண்டு  ஆண்டுகள் முன்பு வரை (திமுகவில் இருந்து  2022 அக்டோபர் என் இடை நீக்கத்துக்கு பின்) 33 ஆண்டுகளாக எட்டையபுரத்தில் பாரதியாரின் சிலைக்கு அவருடைய பிறந்த நாள் அன்று சென்று மாலையிட்டு மரியாதை செய்து வருவது எனது வழக்கமாக இருந்தது. கடந்த இரண்டு கனிமொழி, உடன் அமைச்சர்கள் வருவார்கள் என எட்டையபுரம்  பயணம் டிச 11யை
தவிர்த்து விட்டேன்.

#எட்டையபுரம்_பாரதிநினைவு_இல்ல_கலைஞர்_பெயர்பலகை_பிரச்சனையை 2009 தலைபட்டு தீர்தவன் அடியேன். இன்றைய #திமுக_ஸ்டாலின்_கனிமொழி போன்றவர்களுக்கு இதை குறித்த அறியலும் இல்லை. அது வாராது

இப்போது நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக எட்டயபுரம் பாரதியார் இல்லத்திற்கு செல்வதில்லை. பதிலாக சென்னையில் திருவல்லிக்கேணி கடற்கரை சிலை மற்றும் பாரதியார் இல்லத்தில் சென்று அங்கு நடக்கும்  பாரதி விழாவில் கலந்து கொள்வதோடு சரி.

பாட்டுக்கொரு புலவன் பாரதி எங்கள் கரிசல் மண்ணில் பிறந்த கவிக்குயில். ஆயிற்று அவன் மறைந்தும் ஒரு நூற்றாண்டு. கண்ணீர் விட்டா வளர்த்தோம் என்று சுதந்திரம் பாடிய சுதந்திரத்திற்கு உழைத்த சுதந்திர போராட்ட காலத்தில் உடலெங்கும் கனலாக அக்னி குஞ்சாகவே  மாறி அலைந்து திரிந்த ஞானவாணி.

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்நாளும் காப்போம் என்று புத்த புதிய பாடுபொருட்களையும் புதிய இளமையான இந்தியாவையும் கற்பனை செய்து கற்பனை செய்து இன்பமும் கலையும் செழிப்பும் நாட்டு மக்களுக்கு எந்நாளும் கிடைக்கவேண்டும் என ஆற்றல் மிக்க பராசக்தியை வேண்டித் தொழுதவன்.

பாடாத பொருள் இல்லை பக்தியிலும் ஞானம் ஞானத்திலும் பக்தி. ஆன்மீகம் என்பது அயராது உழைத்தல் இமைப்பொழுதும் சோராதிருத்தல். எங்கும் சுதந்திரம் என்பதே மனித அடிப்படை என்பதை தன் வாழ்நாள் முழுக்க விடுதலை எனும் பொருளில் உணர்த்திய மகாகவி. 39 வயதிற்குள் இப்படி ஒரு சாகசத்தை நிகழ்த்தி அசாத்தியமான முறையில்  மொழியில் இயங்கிய ஒரு கவிஞன் இனி எங்கும் பிறக்க முடியாது.. இந்தியாவின் மலைகளையும் நதிகளையும் கடல்களையும் ஆரத்தழுவி மொழியை அதிலிருந்து சேகரித்தவன். எளியவர் வலியோர் என்கிற வித்தியாசங்கள் ஏதுமற்று  அனைவரையும் பாடிக் கொண்டாடி விடுதலையை ஏந்தி நின்றவன். விட்டு விடுதலையாகி சிட்டுக்குருவியைப் போல வாழச் சொல்லிக் கொடுத்தவன். அனைத்து உயிர்களிலும் பரம்பொருளைக் கண்டவன். பேதமற்ற குறுமுனி தமிழ் மண்ணில் ஒரு சித்தன். அவனை இந்நாளில் போற்றுவோம்.

Today is #Bharathi's birthday.

141 years have passed & nobody even comes close to his poetic prowess.

A selfless patriot & a peerless poet, his Dharmic poems rouse nationalism, bhakti & courage in everyone.

#கலைஞர்  திமுகவுக்கு 2009 டிச 9இல் 



எட்டையபுரம்பாரதி நினைவு இல்ல கலைஞர் 
பெயர்பலகை பிரச்சனை தீர்த்தவன் அடியேன்…         13ஆண்டுகளுக்கு முன்பு…
முதல்வர் ஸ்டாலின் இதை எல்லாம் அறிய மாட்டார்.அவர்கள் கொடை வாழியவே

#பாரதி_டிசம்பர்_11
#Bharathi
#எட்டையபுரம்_பாரதி_நினைவு_இல்ல_கலைஞர்_பெயர்பலகை
#Ettiyapuram

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
11-12-2023

No comments:

Post a Comment

மா கவி பாரதி

மா  கவி #பாரதியை கொண்டட வலம்புரி ஜானின் இந்த ‘’பாரதி - ஒரு பார்வை’’ யும் (பதிப்பு-1982)அவசியம் வாசிக்க வேண்டும். #பாரதி #வலம்புரிஜானின்_பாரத...