———————————————————-
இன்றைய தொலைக்காட்சி ஊடகங்கள் பரபரப்பு எனும் பெயரில் செய்திகளை மக்களிடம் அவசரமாகக் கொண்டு சேர்ப்பதற்கு கடும் பாடுபடுகின்றன. அதற்கு செய்தி எழுதிக் கொடுக்க தமிழே தெரியாதவர்கள் சிலரும் நியமிக்கப்படுவார்கள் போலும்.
போக ஊடகங்கள் ஒரு செய்தியை சேகரிக்க பிடித்து அங்குமிங்கும் கேமரா சகிதம் அனுப்பி உட்கார்ந்த இடத்தில் அவர்கள் தரும் அந்த செய்திகளைத் தொகுத்து மனம் போன போக்கில் ஒளிபரப்பி விடுகிறார்கள் இவர்களுக்கு டிஆர்பி ரேட் தான் முக்கியம். செய்திகளை முந்தி தருவது என்கிற வகையில் போட்டா போட்டி போடுவது. அந்த நிறுவனத்தை இந்த நிறுவனத்தை எதிர்கொள்வது எல்லா இடங்களிலும் போய் மைக்கை வைத்துக்கொண்டு தொந்தரவு செய்வது இவர்களால் குழப்பமான அக்கப்போர்கள் நடந்து கொண்டே இருக்கின்றன.
இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் பெரும் புகழ்பெற்ற சேனலில் பணிபுரியும் சீனியர் நிருபர்களோடு புதிதாகப் பணிபுரிய வரும் இளைஞர்கள் ஒரு யூனிட்டியைத் பணிவாகத் தக்க வைத்துக் கொள்வார்கள்.
முக்கியமான நிகழ்வு என்றால் அண்ணே எனக்கு கொஞ்சம் செய்தியை கொடுங்கள் என்று இவர்கள் பகிர்ந்து கொள்வது உண்டு.நூற்றுக்கணக்கான சேனல்கள் இவர்களைப் பணிக்கென பிடித்து வைத்துக் கொண்டு சிலர் மனம் போன போக்கில் ஒரே செய்தியை பலவறாக மக்களுக்கு குழப்பம் தரும் வகையில் ஒளிபரப்புகிறார்கள்.
நேற்று (29-12-2023)பாருங்கள் தீவுத்திடலில் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும் கமலஹாசன் உடலுக்கு நடிகர் கமலஹாசன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அவரது மனைவிபிரேமலதா அவர்களிடம் ஆறுதல் சொல்லி போனார் என்று செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள்.
தன் சொந்த மரணத்தை தானே நேரில் சென்று பார்த்த ஒரே நடிகர் கமலஹாசனாகத் தான் இருப்பார் போலும்.இப்படியான அபத்த நகைச்சுவைகளைத் தான் இந்த ஊடகங்கள் நிறைவேற்றி வருகின்றன. தலையில் அடித்துக் கொள்ளலாம் போல் இருக்கிறது.
நல்ல தமிழ் தெரிந்த பக்குவமான ஒரு எடிட்டரை முதலில் வேலைக்கு அமர்த்தி விட்டு தங்கள் செய்திகளை அவர்கள் ஒளிபரப்புவது எதிர்காலத்துக்கு நல்லது.சிலர் நடுநிலை பேரில் கட்சி ,தலைவர் என முட்டு கொடுத்து தூக்குவதும்….இந்திரன் சந்திரன் என புகழ்வதும் இவர்களுக்கு அறம், பத்திரிகா தர்மம்⁉️
பம்மாத்து,பிம்ப அரசியல்,காட்சி அரசியல்,காட்சிப்படுத்தப்படும் அரசியல் அப்படியான நிலை இங்கு
செய்திகளுக்கான அவசரத்தில் நெருக்கடியில் யாரை வேண்டுமானாலும் கொன்று விடுவார்கள் போலிருக்கிறது.
#பத்திரிகாதர்மம்
#ஊடகங்கள்
#mediacoverage
#கேஎஸ்ஆர்போஸட்
#ksrpost
30-12-2023.
No comments:
Post a Comment