Sunday, December 3, 2023

காங்கிரசை பொருத்தவரை இந்திரா காந்திக்கு பிறகு அதை நிர்வகிக்கும் தலைமைப் பண்பு போய்விட்டது

*நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள்* பரபரப்பாக ஊடகங்களில் வந்து கொண்டிருக்கின்றன.
இதில்  காங்கிரஸ் பேராவலுடன் எதிர்பார்த்த வெற்றி என்னவோ கிடைக்கவில்லை.
தெலுங்கானாவில் பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பு இருக்காது ஏற்கனவே துவக்கத்தில் தெரிந்த விடயம்

மற்ற  மாநிலங்களில் பாஜக முன்னணியில் இருப்பதாக செய்திகள் சொல்லுகின்றன.

தெலுங்கானாவைப் பொறுத்த வரையில் சந்திரசேகர ராவ்  கடந்த பத்து ஆண்டு பிஆர்எஸ் ஆட்சியில் எடுத்த சில குழப்பமான முடிவுகள், சில ஊழல் பிரச்சனைகள் அது சார்ந்த அதிருப்தி அங்கு நிலவியது ஆகவே மக்கள் அதற்கு மாற்றாக காங்கிரஸிற்கு வாக்களித்துள்ளார்கள்.



அந்த இடத்தை அடைய மற்ற தலைவர்கள் அங்கு இல்லை.

இதற்கிடையில் ஒரு காங்கிரஸ் எம்பி பழ நெடுமாறன் காங்கிரஸ் கட்சியில் இருந்தாரா என்று என்னிடமே கேட்டார்! அவர் எப்போது இருந்தார்?  என்ன கேள்வி இது?இப்படியான வரலாறு அறியா நபர்களை வைத்துக் கொண்டுதான் காங்கிரஸ் நடத்திக் கொண்டு வருகிறது.

நடந்து முடிந்த கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகளில்  ஏராளமாக அள்ளி வழங்குவதாகச் சொன்னதன் அடிப்படையில் தான் ஓட்டு வங்கியை கைப்பற்றியது. கர்நாடகா காங்கிரஸின் சீத்தாராமையா அரசு மக்களுக்கு இலவசங்களை இன்று ஆட்சிக்கு வந்த பிறகு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திக்கித் திணறி அது தடுமாறிக்கொண்டிருகிறது.

இன்று தெலுங்கானா அரசும் அதேபோல் நிறைய இலவசங்களை வாக்குறுதிகளாகத்  காங்கிரஸ் தந்து ஜெயித்திருக்கிறது. நமது கேள்வி அதை எல்லாம் தெலுங்கானா  காங்கிரஸ அரசால் நிறைவேற்ற முடியுமா?
இல்லை  கர்நாடகாவைப் போல அதுவும் நாளைக்குத் திக்கித் திணறுமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஈழத் தமிழர்களுக்கு எதிராக அவர்கள் 2009 இல் மோசமாக நடத்திய  போரில் உதவியது. ஊழ் விடுமா?

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
3-12-2023.

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...